கருணையின் நிழலில்…ஷோபா சக்தியின் ஸலாம் அலைக் நாவலினூடே ஓர் பயணம்

ஃப்ரெஞ்ச் மொழி பேசும் நாடுகளில் எழுதப்படும் இலக்கியத்துக்கு francaphone literature என்று சொல்கிறார்கள்.  இதில் ஆஃப்ரிக்கப் பகுதி ஃப்ராங்கஃபோன் இலக்கியத்தில் நான் வாசிக்காத இலக்கியவாதி இல்லை.  இவர்களில் எனக்கு விருப்பமானவர்கள் முஹம்மது ஷுக்ரி, அப்துல்லத்தீஃப் லாபி மற்றும் தாஹர் பென் ஜெலோன்.  ஷோபா சக்தி ஃப்ரான்ஸில் வசித்து வந்தாலும் அவர் எழுதுவது ஃப்ராங்கஃபோன் இலக்கியத்தில் வராது என்று நினைக்கிறேன்.  இலங்கையில் ஃப்ரெஞ்சு மொழியும் பேசப்பட்டால் வரும்.  ஆனாலும் அவர் எழுத்து இலங்கையையும் ஃப்ரான்ஸையும்தான் சுற்றிச் சுற்றி வருகிறது. … Read more

பாண்டிச்சேரியில் ஒரு சந்திப்பு

செப்டம்பர் மாதம் பத்தாம் தேதியிலிருந்து பதினைந்து தேதி வரை நான் ஒரு முக்கியமான சொந்த வேலையாக பாண்டிச்சேரி செல்கிறேன்.  அங்கே வழக்கம் போல் ஆரோவில் குடிலில் தங்குவேன்.  என்னை சந்திக்க விரும்பும் நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.  பகலில் என்னோடு பேசிக் கொண்டிருக்கலாம்.  இரவு தங்குவதற்கு நீங்களேதான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.  என் குடிலுக்கு அருகிலேயே பல நல்ல தங்குமிடங்கள் உள்ளன.  நான் தங்கியிருக்கும் குடில் ஒரு வனத்தில் இருக்கிறது என்பது அங்கே முன்பு வந்தவர்களுக்குத் … Read more

குட் மார்னிங்…

சென்னையில் பெயர் சொன்னாலே தெரிந்து விடக் கூடிய ஒரு பிரபலமான தொழிலதிபர் அவர்.  எனக்கு ஃபோன் செய்தார்.  ஒரு படம் எடுக்க வேண்டும், நீங்கள்தான் வசனம் எழுத வேண்டும் என்றார்.  சரி என்றேன்.  இப்படி என்னிடம் வரும் அறுபத்தொம்போதாவது நபர் இவர்.  வேளச்சேரியில் ஒரு நண்பரின் அலுவலகத்தில் சந்திக்கலாம் என்று ஏற்பாடு.  இரண்டு மணிக்கு சந்திப்பு.  ஒன்றரை மணிக்கு ஃபோன் செய்து “முக்கியமான விருந்தாளி வந்து விட்டார், நான்கு மணிக்கு வரலாமா?” என்றார்.  வாருங்கள் என்றேன்.  அதுவரை … Read more

பணத்துக்கும் நமக்குமான உறவு அல்லது சில்லுண்டித்தனம் – கொடுங்கதை – அராத்து

(பின்வரும் கதை அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியது. எனக்கும் இதேபோல் தினந்தோறும் நடப்பதால் இதை நான் எழுதியதாகவும் கொள்ளலாம். கன்ஸல்டிங்க் போன்ற பரதேச பாஷைகளுக்கு மட்டும் தமிழில் நீங்களாகவே போட்டுக் கொள்ளவும். கன்ஸல்டிங்க் என்பதற்கு நான் ஆலோசனை என்று எழுதியிருப்பேன். – சாரு) ஒரு ஃபேஸ்புக் நண்பர் புத்தகத் திருவிழாவில் என்னை சந்தித்து நம்பர் வாங்கிக்கொண்டார். தொழில் ரீதியாக கன்ஸல்டிங்க் வேணும் என்றார். நான்கைந்து வாட்ஸப் மெசேஜ் , இரண்டொரு கால் . ஒரு நாள் தன் உதவியாளர்கள் … Read more

தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுத்தால் விவாகரத்து… (குறுங்கதை)

வெளியூர்களிலிருந்து சென்னை நகரத்திற்கு வந்து வாழ நேர்ந்திருக்கும் எழுத்தாளர்கள் பலர் இந்த நகரைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுதுவதைப் பார்க்கும் போதெல்லாம் ‘இது உச்சக்கட்ட ஸ்டாக்ஹோம் சிண்ட்ரமின் வெளிப்பாடு’ என்று தோன்றும்.  ஏனென்றால், தென்னிந்தியாவிலேயே மனிதர்கள் வாழ்வதற்குக் கொஞ்சமும் லாயக்கு இல்லாத ஊர் என்றால் அது சென்னைதான்.  ஊர் என்ன செய்யும், மனிதர்களே காரணம்.  ஆனால் இந்த ஊருக்கும் இந்த ஊரின் கச்சடாத்தனத்தில் பெரும் பங்கு இருக்கிறது.  முக்கியமாக, இந்த ஊரின் தட்பவெப்பம்.   ஆனால் … Read more