அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் – ஒரு மதிப்புரை

அன்பின் சாரு,        ”அந்தோனின் ஆர்த்தோ : ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்” நான் வாசிக்கும் முதல் நாடகம். கொஞ்சங்கொஞ்சமாக அந்த நாடகம் என்னை அப்படியே இழுத்துக் கொண்டது. என்ன அற்புதமான மொழி. எழுதும்போது நீங்கள் அடைந்த அந்தப் பித்துநிலைக்கு நானும் சென்று விட்டேன். ஆர்த்தோவின் கையிலிருக்கும் செங்கோல் என்பதே எனக்குப் பிடிக்கிறது. இயேசுவின் கையிலிருந்த தடி….” உமது கோலும் தடியும் என்னைத் தேற்றும்” என்பது தாவீதின் சங்கீதம் அல்லவா! ஆம், அது தீமைகளைத் தாக்கும். … Read more

பெட்டியோ ஏன் தாமதம்?

பெட்டியோ நாவலை எழுதி முடித்து விட்டேன். ஆனாலும் அதன் நாயகி நயநதினியின் கதையை எப்படி முடிப்பது என்பதில் கொஞ்சம் குழப்பமும் தயக்கமும் உள்ளது. நான் சந்தித்த மூன்று சிங்களப் பெண்களை ஒன்றாக்கி, கற்பனை கலந்து உருவாக்கியதால் இந்தக் குழப்பம். அதுவும் தவிர, அந்தோனின் ஆர்த்தோவின் தோழியான காலத் தாமஸின் (Colette Thomas) வாழ்க்கைக்கும் நயநதினிக்கும் நிரம்ப ஒற்றுமை இருந்ததால் – நயநதினி வேறு ஆர்த்தோவின் நாடகங்களை இயக்கிக் கொண்டிருப்பதால் – காலத் தாமஸின் ஒரே நாவலான The … Read more