அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்

அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் நாடக நூல் வெளியாகி உள்ளது. இணைப்பு கீழே: https://tinyurl.com/Antonin-Artaud-oru நாடகம் பற்றி ஜெமோகன் எழுதியது: http://charuonline.com/blog/?p=13705

ஒரு திருத்தம்

ஆன்சென் ஊற்றுகளில் 99 சதவிகித இடங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனிப் பிரிவுகள் என்று தெரிவிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. என்ன இருந்தாலும் ஜப்பானும் ஆசியாவில்தானே இருக்கிறது?

Conversations with Aurangzeb: அராத்து

அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியது: சாரு நிவேதிதாவின் உண்மையான உயரத்துக்கு நிகரான , நிகராகக் கூட வேண்டாம். பத்து சதவிகித அங்கீகாரம் மற்றும் மரியாதை கூடக் கிடைத்ததில்லை. உலக இலக்கியப் பரிச்சயம் இல்லாமல் குண்டி சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கும் தமிழிலக்கிய உலகத்தில் இப்படித்தான் நடக்கும். தமிழிலக்கிய உலகம்தான் இப்படி என்றால் , பொதுச் சமூகம் ஒரு ஃபில்ஸ்டைன் சமூகம். கொஞ்ச வருடங்கள் முன்னால் வரை பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள். அதுவும் டீக்கடையில் ஓசியில் இருந்ததாலும் , ஸ்மார்ட் போன் அப்போது … Read more

ஜப்பான்: கனவும் மாயமும் (12): நிர்வாணக் குளியல்

நிர்வாணம் என்பது ஆடைகளைக் களைந்து விட்டு அம்மணமாக நிற்பது மட்டும் அல்ல.  இந்தியாவில் நிர்வாணம் ஒரு தத்துவம்.  துறப்பு என்பதன் குறியீடு.  உலகிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியாக இருந்த சந்திரகுப்த மௌரியர் ஒருநாள் தன் ஆடை அணிகலன்கள் அனைத்தையும் கழற்றி எறிந்து விட்டு நிர்வாணமாக சரவண பெலகொலா வந்து சேர்ந்தார்.  சமணத் துறவிகள் இன்றளவும் திகம்பரமாகவே இருக்கிறார்கள்.  லங்கோடு கூட அணிவதில்லை. Beat writersஇல் ஒருவரான ஆலன் கின்ஸ்பெர்க் வங்காளத்துக்கு வந்து அங்கே உள்ள நாகா … Read more

ஜப்பான்: கனவும் மாயமும் (11)

கதையைத் தொடர்வதற்கு முன் ஒரு குறுக்கீடு.  நாளை கிளம்பி நாளை மறுநாள் (28) தோக்கியோ சேர்கிறேன்.  அங்கே என்னைச் சந்திக்க நேரும் தமிழ் நண்பர்களுக்கு என் வேண்டுகோள் சில: தமிழ் சினிமா பற்றியோ இளையராஜா பற்றியோ என்னிடம் பேச வேண்டாம்.  அவை எனக்கு மிகவும் அலுப்பூட்டக் கூடிய விஷயங்கள். யாரும் என்னைத் தங்கள் வீட்டுக்கு அழைக்க வேண்டாம்.  காரணம், உங்கள் வீட்டில் உள்ளவர்கள் யாரும் என்னை வாசித்திருக்க மாட்டார்கள்.  அதனால் உங்கள் மாமனார் என்னை எழுத்தாளன் என்று … Read more

ஜப்பான்: கனவும் மாயமும் (10) : ‘நீர்மை’ நாயகியும் சன்னி லியோனியும்…

தோக்கியோ டிகேடன்ஸில் பதினைந்து சிறுகதைகள் உள்ளன.  அதில் உள்ள தோப்பாஸ் என்ற சிறுகதைதான் தோக்கியோ டிகேடன்ஸ் என்ற திரைப்படம்.   இருபத்திரண்டு வயது கல்லூரி மாணவியான அய் ஒரு எழுத்தாளனை ஒருதலையாகக் காதலிக்கிறாள்.  அவன் எழுதுவதோடு நிறுத்துவதில்லை.  சினிமா எடுக்கிறான்.  பாட்டு எழுதுகிறான்.  பாடுகிறான்.  ஓவியம் வரைகிறான்.  (இது எல்லாமே ரியூ முராகாமிக்குப் பொருந்துகிறது.  ரியூவின் பல கதைகள் சுயசரிதைத்தன்மை வாய்ந்தவை.)  ஒரு சனிக்கிழமை அன்று பகலில் ஒரு கஃபேயில் அமர்ந்து பியர் அருந்திக் கொண்டிருக்கிறாள் அய்.  எஸ் … Read more