ஜப்பான்: கனவும் மாயமும் – 8

ஒரு தேசம் என்பதை எப்படி அனுபவம் கொள்கிறோம்?  நான் இரண்டு விதமாக அணுகுகிறேன்.  அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நானும் சீனியும் மற்றொரு நண்பரும் சீலே, மெக்ஸிகோ, கூபா ஆகிய மூன்று நாடுகளுக்கும் செல்கிறோம்.  மெக்ஸிகோவையும் இழுத்துக் கொண்டதற்குக் காரணம், மெக்ஸிகோவின் வடக்கில் உள்ள சியர்ரா மாத்ரே மலைத்தொடர்ச்சியில் தாராஉமாரா (Tarahumara) என்ற மலைவாசி மக்கள் வாழ்கிறார்கள்.  அவர்களின் ஒரு குறிப்பிட்ட  சடங்கை எனக்குக் காண வேண்டும்.  பெயோத்தே சடங்கு என்பது அதன் பெயர்.  பெயோத்தே ஒருவகை கள்ளிச் … Read more

ஜப்பான்: கனவும் மாயமும் – 7

விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை சாப்பிடுவது ஒரு சந்தோஷம்.  ஆனால் இந்த விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் கொழுக்கட்டை கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு முந்தின நாள்தான் மாரிஸ் ஓட்டலில் மிக ருசியான ஒரு கொழுக்கட்டை சாப்பிட்டிருந்ததால் ரொம்பவும் ஏக்கம் தோன்றவில்லை. ஆனால் மாரிஸ் ஓட்டலை என் மனதிலிருந்து நீக்கி விட்டேன்.  இனி ஒருபோதும் அங்கே போக மாட்டேன்.  காரணம்? உலகிலேயே எனக்கு மிகப் பிடித்த உணவு தோம்யாம் சூப் (தாய்லாந்து) மற்றும் ஃபிஷ்பால் சூப் (சீனா).  காலை … Read more

ஜப்பான்: கனவும் மாயமும் – 6

”இளைஞர் உலகம் தன் ஒவ்வொருவருடைய அடையாளத்தையும் இழந்து, மனநோயிலும் தனிமையிலும் விழுந்து விடுகிறது” என்று சென்ற அத்தியாயத்தை முடித்திருந்தேன்.  மற்றவர்களாக இருந்திருந்தால் “அதுதான் கவலை அளிக்கிறது” என்று எழுதியிருப்பார்கள்.  எனக்கு அப்படி அல்ல.  இளைஞர் உலகம் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன என்றே தோன்றுகிறது.  இளைஞர் உலகம் மட்டும் அல்ல, மனித இனமே எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன என்றுதான் இருக்கிறது.  ஏனென்றால், ஆயிரத்தில் அல்லது பத்தாயிரத்தில் ஒருத்தரைத் தவிர மற்றவர்களுக்குப் பணமே கண் … Read more