ஜப்பான்: கனவும் மாயமும் – 2
கீழைத் தேசம், கீழைத் தேசத்து மக்கள், கீழைத் தத்துவம் – சுருக்கமாகச் சொன்னால் ஓரியண்டலிசம் என்றால் என்ன? ஓரியண்டலிசம் விஞ்ஞானத்துக்கும் நவீனத்துவத்துக்கும் எதிரானது. தர்க்கத்துக்கு எதிரானது. புதுமையையும் புரட்சியையும் ஒதுக்கி விட்டு, மரபையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது. அதன் காரணமாகவே வளர்ச்சி அடையாதது. அதன் காரணமாகவே பின் தங்கிய நிலையில் இருப்பது. அதன் காரணமாகவே துக்கத்திலும் துயரத்திலும் வறுமையிலும் உழன்று கொண்டிருப்பது. அதிகாரத்துக்குப் பணிதல் என்பது மற்றொரு முக்கியமான ஆசியப் பண்பு. அதிகாரம் என்பது அரசனாக இருக்கலாம், … Read more