பெட்டியோ பற்றி அராத்து

சாருவின் பெட்டியோ நாவலை படித்து முடித்தேன். பெரும்பாலானவர்கள் சாரு சர்ச்சைக்குரிய எழுத்தாளர் என்று திருவாய் மலருவார்கள். கடைசியில் பார்த்தால் அதில் ஒரு சர்ச்சையும் இருக்காது. இந்த நாவலில் நான்கைந்து வெடி குNடுகள் இருக்கின்றன. இலக்கிய உலகமே கலவர பூமியாக மாறக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. எத்தனை தலைகள் விர்ச்சுவலாக உருளப்போகின்றனவோ? NFT என்பதால் இதெல்லாம் நடக்காமல் போகக்கூட சாத்தியம் உள்ளது. 100 பிரதிகள் மட்டுமே. யாரேனும் வாங்கியவர்கள் கொஞ்சம் கொஞ்சம் வெளியே விட்டால் கூட போச்சி….பற்றிக்கொள்ளும்.

பெட்டியோ

தி.ஜானகிராமன் எழுதிய உதய சூரியன் என்ற பயணக் கட்டுரை நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். Pleasure of the Text என்றால் இதுதான். ஆள் பிரமாதப்படுத்தியிருக்கிறார். விரிவாக பிறகு எழுதுகிறேன். பெட்டியோவை அனுப்பிய நண்பர்களிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. சீனி பயங்கர பிஸி. அலுவலக வேலை. பொதுவாக அனுப்பிய இரண்டே நாளில் வாசித்து விடுவார். ஆனால் இப்போது கடுமையான வேலை நெருக்கடி போல. நேற்று இரவு ஒரு பப்புக்குப் போய் படிக்கப் போவதாகச் சொன்னார். அந்தக் குறிப்பிட்ட பப் … Read more