கலையும் மீட்சியும்: ஒரு நேர்காணல்

சில மாதங்களுக்கு முன்பு நான் அருஞ்சொல்லில் சமஸுக்கு அளித்த நேர்காணல் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அது இப்போது புத்தகமாக வர இருக்கிறது. நேர்காணலை செப்பனிட்டிருக்கிறேன். நிறைய சேர்த்திருக்கிறேன். அந்த நேர்காணலை என்னுடைய சுயசரிதை என்றும் சொல்லலாம். கலையும் மீட்சியும்: ஒரு நேர்காணல் என்று தலைப்பு வைத்திருக்கிறேன். இன்னும் ஒரு மாதத்தில் நூல் வெளிவரும். போகன் சங்கர் முன்னுரை தர இசைந்துள்ளார். அந்த நேர்காணலில் என்னுடைய சிவில் சப்ளைஸ் துறை அனுபவங்கள் சிலவற்றை விவரித்திருக்கிறேன். அதை அருஞ்சொல்லில் படித்த … Read more

இலங்கைப் பயணம்: ஒரு முக்கிய அறிவிப்பு

நவம்பர் ஒன்பதாம் தேதி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் மாலை நான்கு மணி விமானத்தில் கொழும்பு கிளம்புகிறேன். கொழும்பு ஐந்தரை மணிக்குப் போய்ச் சேரும். விமான நிலையத்துக்கு அனோஜன் வருவதாகச் சொல்லியிருக்கிறார். அவருடன் கொழும்பிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாதுக்கை என்ற ஊருக்குக் கிளம்புகிறேன். அங்கேதான் கே.கே. என்றும் சர்ப்பயா என்றும் அழைக்கப்படும் சமன் குமாரவின் வீடு உள்ளது. அங்கே அவர் வீட்டில்தான் தங்கலாம் என்று திட்டம். அவர் தனி ஆள். குடும்பம் இல்லை. அதனால் தங்குவதில் ஒன்றும் … Read more