மீண்டும் இலங்கைப் பயணம்

நான் சமீபத்தில் எழுதிய அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கலகக்காரனின் உடல் என்ற நாடகத்தை வாசித்திருந்தால் நதீகாவின் புகைப்படங்களை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும்.    நான் நாடகத்தின் பக்கமே வராமல் இருந்ததற்குக் காரணம், என் நாடகம் மனித உடல் பற்றியதாக இருக்கும் என்பதால்.  அங்கே ஆடை இருக்காது.  நிர்வாணம்தான்.  ஜப்பானிய ஆன்செனில் எல்லோரும் நிர்வாணமாக நீராட வேண்டும்.  (ஆண்கள் தனியே, பெண்கள் தனியே.)  அந்த நிர்வாணம் உடலின் வாதையைப் பேசவில்லை.  அது பற்றி விரிவாக ரொப்பங்கி … Read more

குண்டு சட்டிக்குள் ஓடிய குதிரை வெளியே வருகிறது…

சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் எழுதி வந்த கதை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிய கதைதான். இதில் நல்லது இல்லாமால் இல்லை. சீலே சாந்த்தியாகோ நகரில் இருந்து இன்னும் என்னிடம் பத்து தினங்கள் உள்ளன. ஆனால் கையில் காசு இல்லை. இந்த நகரிலேயே தெருத் தெருவாகச் சுற்றி வரலாம். அதற்குக் காசு வேண்டாம். கையில் ஒரு நாலு ஐந்து லட்சம் இருந்தால் சீலே முழுவதும் சுற்றலாம் என்றதும் ஒரே வாரத்தில் ஐந்து லட்சம் அனுப்பியிருந்தார்கள் பெயர் தெரியாத … Read more

துளிக்கனவு இலக்கிய நிகழ்வில் (தோக்கியோ)

செப்டம்பர் 30 (2023) அன்று தோக்கியோவில் துளிக்கனவு அமைப்பின் சார்பாக நடந்த இலக்கிய விழாவில் எடுத்த சில புகைப்படங்கள் ஹரி, கவிதா, லெனின், கோவிந்தராஜன், ரா. செந்தில்குமார் மற்றும் நண்பர்கள்…

பவா செல்லத்துரை

பவா விஷயத்தில் அராத்துவுடன் முரண்படுகிறேன். ஃபிலிஸ்டைன் கும்பலால் சமூகத்துக்கு ஏற்படும் தீமைகளை விட பவா செல்லத்துரை போன்ற இலக்கிய ஆர்வலர்களால் ஏற்படும் தீமை அதிகம். இது பற்றி நான் மிக அதிகமாகவே எழுதியிருக்கிறேன், பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. மேன்மையானவை பற்றியே நான் பேசியிருக்கிறேன் என்கிறார் பவா. அந்த மேன்மையெல்லாம் சமூகத்துக்கு விரோதமானவை என்பது என் கருத்து. பவா என் நெருங்கிய நண்பர். அது வேறு விஷயம். நட்புக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அதோடு, வெறும் பிச்சைக்கார … Read more