Ryu Murakami, சாரு நிவேதிதா, அராத்து… (புருஷன் பதிவுகள் – 1)

சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் ஹருகி முராகாமியை விட பல மடங்கு காத்திரமான எழுத்தாளர் ரியூ முராகாமி.  ஜப்பானில் ஹருகியின் புத்தகங்கள் வெளியானவுடன் இரண்டு கோடி பேர் வாங்குகிறார்கள் என்றால் ரியூ முராகாமியை ஒரு கோடி பேர் வாங்குகிறார்கள்.  ஆனாலும் ரியூ முராகாமி சர்வதேச அளவில் இன்னும் அத்தனை பிரபலம் ஆகவில்லை.  ஆகவும் மாட்டார் என்று தோன்றுகிறது.  ஏனென்றால், அவர் எழுதும் அளவுக்கு ட்ரான்ஸ்கிரஸிவ் சமாச்சாரங்களை உலகம் தாங்காது.  உலகம் அதையெல்லாம் செய்து கொண்டுதான் இருக்கிறது.  ஆனால் … Read more

புருஷன் நாவல் பற்றி

புருஷன் நாவலை மீண்டும் ஒருமுறை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு நாவலை இத்தனை குறுகிய இடைவெளியில் இத்தனை முறை படித்தது இதுவே முதல் முறை. என்னால் ஒரு நாவலை இரண்டாவது முறை படிக்க இயலாது. மாரியோ பர்கஸ் யோசாவின் நாவல்களை மட்டுமே சில ஆண்டுகள் இடைவெளி கொடுத்து மீண்டும் படிப்பேன். வாசிப்பு இன்பத்துக்கு உதாரணம் மாரியோ பர்கஸ் யோசா. ஆனால் அராத்துவின் புருஷன் மாரியோ யோசாவையும் தூக்கி அடித்து விட்டது. இந்த ஒரு பத்தியைப் படித்துப் பாருங்கள்: என் எதிரே, … Read more

திறவாய்! திறவாய்! நின் தயவாலே… – செல்வா (செல்வகுமார் கணேசன்)

(செல்வா என்று அழைப்பதே சகஜமாக இருக்கிறது என்பதால் செல்வா என்றே குறிப்பிடுகிறேன். இந்தக் குறிப்பு ஒரு சிறுகதை போலவே இருக்கிறது. செல்வாவுக்கு உரைநடை வெகு லாவகமாகக் கைகூடுகிறது. அவர் எழுதப் போகும் தொடரின் முதல் அத்தியாயமாக இதைக் கொள்க. ஓரிரண்டு இடங்களில் க், ச் சேர்த்திருக்கிறேன் செல்வா. உதாரணமாக, பள்ளிகூடம் என்பதை பள்ளிக்கூடம் என்று ஆக்கினேன். ஆனால் ஒன்றிரண்டு இடங்கள்தான் என்பது ஆசுவாசமாக இருந்தது. எனவே இந்தப் பிரதியையே இறுதிப் பிரதியாக வைத்துக்கொள்ளுங்கள்.தொடர்ந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுங்கள். … Read more

நீங்கள் ஏன் குடிப்பதில்லை? செல்வா

செல்வா ஒரு பன்னிரண்டு சிறுகதைகள் எழுதியிருப்பார். ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன் அனுப்பினார். எல்லா தஞ்சாவூர்க்காரர்களையும் போல அவை என்ன ஆயின என்று என்னிடம் அவர் கேட்கவில்லை. நானும் அப்படியே விட்டுவிட்டேன். கதைகளின் மொழி பிரமாதமாக இருந்ததாக நினைவு. அப்புறம் அவரைப் பார்க்கும்போதெல்லாம் திரும்பவும் அந்தக் கதைகளை அனுப்பி வைக்கும்படி சொல்வேன். அவரும் எல்லா தஞ்சாவூர்க்காரர்களையும் போல இதோ என்பார். கதை வராது. நானும் அப்படியே மறந்து விடுவேன். இன்று காலை ஒரு பதினைந்து இருபது பக்கத்துக்கு … Read more

சுயக்கட்டுப்பாடு

நேற்றோடு இந்தக் குடிப் பஞ்சாயத்து முடிவுகு வந்து விட்டது என்றே நினைத்தேன்.  ஆனால் செல்வாவின் கட்டுரை கிடைத்து மீண்டும் அது பற்றிய விவாதம் தொடர்வதற்குக் காரணமாகி விட்டது.  இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கட்டுரைக்கு அடுத்து செல்வாவின் கட்டுரையை சில தினங்களில் பதிவேற்றம் செய்கிறேன்.  அரூ பத்திரிகையில் அராத்து எழுதிய கட்டுரைதான் என்னைப் பற்றிய கட்டுரைகளில் ஆகச் சிறந்ததாகச் சொல்கிறார்கள்.  என் கருத்தும் அதுவே.  அந்தக் கட்டுரை அளவுக்கு முக்கியமானதும் சுவாரசியமானதுமாகும் செல்வாவின் கட்டுரை.  எனக்கு என்னைப் … Read more

பறவைகளின் ஆன்ம கீதம்

Wim Mertens உருவாக்கிய Struggle for Pleasure என்ற இசைக் கோர்வையைப் பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன். விம் மெர்ட்டென்ஸைக் கேட்க முனையும் போதெல்லாம் ஸ்ட்ரக்ள் ஃபர் லைஃபோடு முடிந்து விடும். அதே பாடலை திரும்பத் திரும்ப ஐம்பது முறை கேட்டு அந்த இரவே முடிந்து விடும். இன்று விம் மெர்ட்டன்ஸின் வேறு ஏதாவது கேட்கலாம் என்று தேடியபோது இந்தப் பாடல் கிடைத்தது. Birds for the Mind. இது ஸ்ட்ரகிள் ஃபர் லைஃபை விட என்னைக் கவர்ந்தது. … Read more