வீடற்றவர்கள்

எதிர்வீடு தனிவீடுசுற்றி ஒரு தோட்டம்நாலரை கோடி பெறும்ஒரு என்னாரய் வாங்கினான்பன்னிரண்டரை கோடிக்கு வீட்டின் வெளியே நடைபாதைஅதிலே ஒரு தார்ப்பாலின்அங்கே வசித்த இரு மூதாட்டிகள்வெளிகேட்டுக்குப் பூட்டு இல்லைதோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றிசெடிகளுக்கு உயிர் கொடுத்தார்கள் என்னாரய்க்குமடியில் பணத்தின் கனம்மனசில் பூட்டின் கனம்இருவரையும் துரத்தி விட்டுகேட்டுக்குப் போட்டான் பூட்டு இப்போது செடிகள் எலும்புக்கூடுகள்தோட்டம் ஒரு பிணக்காடு நான் ஒரு மண்புழுபுழுதியில் புரள்பவன்ஏதும் செய்ய ஏலாதுஅறம் பாடினேன் ஆனால் எதிர்வீட்டு என்னாரய்அறத்தைப் பார்த்தான்அதற்கும் ஒரு பூட்டைப் போட்டுஎங்கோ போட்டான் தூக்கி…

நிரந்தரம்

ஒரு சிலை வைக்கலாம்என்றார் ஒருவர்வேண்டாம், மக்கள் மனதினிலே குடியிருப்பார்என்றார் இன்னொருத்தர். ‘சிலை வைத்தால் பட்சிகள் மலம் கழிக்கும்;மக்கள் மனதினிலே குடியிருப்பதும்நிச்சயமில்லை; இன்றிருப்பார் நாளையில்லை,ஒரு போத்தல் சீலே வைன் இருந்தால் நலம்’என்றேன் நான்.

சொர்க்கம், நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம்

வெளிவர இருக்கும் என் கவிதைத் தொகுப்பின் தலைப்பு. புத்தகம் வேர்ட் ஃபைலில் 400 பக்கம் வருகிறது. மொத்தம் 152 கவிதைகள். புத்தகம் அளவு பெரிதாகத்தான் இருக்கும் என்று யூகிக்கிறேன். விலையும் அதற்குத் தகுந்தாற்போல் கூடுதலாகத்தான் இருக்கும். ஒரு இருநூறு பேர் வாங்கினால் மகிழ்ச்சி அடைவேன்.

புத்திர பாசமும் பத்திரப் பதிவும்

இன்று சமூக வலைத்தளம் ஒன்றில் என் நீண்ட கால நண்பரும், நடிகரும், இயக்குனருமான ரா. பார்த்திபனின் பின்வரும் குறிப்பைக் கண்டேன். ”ராக்கி பார்த்திபன் !என் மகன்என் உயிருக்கு நிகர். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம்,திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார் .விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படத்தில் நடிக்க எனக்கும் … Read more

அப்படியா?

சீதாராம் கேசரி, காலஞ்சென்ற காங்கிரஸ் தலைவர்ஏன் என் கனவில் தினசரி வருகிறார்?அவருக்கும் எனக்குமென்ன சொந்த பந்தம்?இத்தனைக்கும் கேசரி எனக்குப் பிடித்தஇனிப்பு கூட அல்லகேசரி வளர்த்த நாய், மணிஅவர் இறந்ததுபோதுஅருகிலேயே அமர்ந்திருந்து கல்லாகிப் போனதுஅந்தக் கல் என் நெஞ்சில் இறங்கிதினமும் கனவில் வந்து பாரமாய் அழுத்துகிறது ஒரு டால்மேஷனைசரக்கு ரயிலில் அனுப்பி விட்டது ஒரு மனிதக் கூட்டம்வடநாட்டிலிருந்து வந்த ரயில்சென்னை செண்ட்ரலில் காப்பாற்றப்பட்டபோதுஅதன் கண்கள் என் நெஞ்சில் வந்து ஒட்டிக்கொண்டன. இப்படி ஒன்றா இரண்டாஒரு நூறு கதைகளுண்டு இந்த … Read more

ஒரே ஒரு அதிசயம்

ஜூன் இறுதியில் கோவா செல்கிறேன்கூட்டமில்லை கொண்டாட்டமில்லைமழைகூட இல்லாத பருவம்மதுபான விடுதிகள் வெறிச்சோடி நிற்கும்இப்படிகோவாவே தனிமையில் மூழ்கி இருக்ககடல் மட்டும் நீலம் மாறாமல்அலைகளின் மொழியில் அதிசயம் பேசும்