வன்மமும் சாருவும்: பிச்சைக்காரன்

பிச்சைக்காரன் தன் ப்ளாகில் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையை அவசியம் படித்துப் பாருங்கள். என்னைப் பற்றிய மிக முக்கியமான ஒரு தகவலைக் கொண்ட கட்டுரை இது. இதை நானே மறந்து விட்டேன். எம்.டி.எம். நான் வன்மத்தோடும் முன்முடிவோடும் அவரது மொழிபெயர்ப்பை அணுகினேன் என்ற அபாண்டப் பழியை சுமத்தியிருக்கிறார். எனக்கு யார் மீதும் வன்மம் கிடையாது. ஜெயமோகனுக்கும் எனக்கும் வெட்டுப்பழி குத்துப்பழியாகக் கிடந்த போது நான் எழுதிய ஒரு கட்டுரை பற்றி பிச்சைக்காரன் மேற்கோள் காண்பித்து எழுதியிருக்கிறார். http://www.pichaikaaran.com/2025/09/blog-post.html

சன்னி லியோனின் “பெரும் காட்சி” – அராத்து

ரோஜாவின் பெயர் நாவலில் துணைத் தலைப்பான “Naturally, a manuscript” என்பதை “இயற்கையாகவே, ஒரு கைப்பிரதி” என மொழிபெயர்த்திருப்பதை சாரு நிவேதிதா சுட்டிக் காட்டி, “இயல்பாகவே, இது ஒரு கைப்பிரதி” என வந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு எம் டி எம் தற்போது ஒரு வியாக்யானம் கொடுத்து இருக்கிறார். அதைப்படித்தால் அது ரோஜாவின் பெயர் நாவல் மொழிபெயர்ப்பை விட கொடூரமாக இருக்கும் போலத் தெரிகிறது. இயற்கையாகவே ஒரு கைப்பிரதி என்பதற்கு எம் டி எம் கொடுக்கும் … Read more

ஒரு சிறிய விளக்கம்

ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் Pierre Guyotat பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன். அவர் தனது நாவல்களில் ஒரு விநோதமான மொழிநடையைக் கையாள்கிறார். எந்த வாக்கியமும் முழுசாக இருக்காது. என்னுடைய கர்னாடக முரசு, ஜோக்கர் போன்ற கதைகளைப் படித்திருக்கிறீர்களா? அப்படித்தான் ஒவ்வொரு வார்த்தையும் துண்டு துண்டாக இருக்கும். நாவல் முழுதுமே அப்படித்தான். நான் பியர் க்யூத்தாவை ஆங்கில மொழிபெயர்ப்பில்தான் படித்தேன். புரிந்தது. அதை நான் தமிழில் மொழிபெயர்த்தால் அப்படியேதான் மொழிபெயர்ப்பேன். ஆனால் ஊம்பர்ட்டோ எக்கோ, பியர் க்யூத்தாவின் மொழியில் துண்டு துண்டாக … Read more

யார் மீதும் வன்மம் இல்லை!

இன்றுதான் முதல் முறையாக குறியியல் பேராசிரியர் என் பெயரை சாரு நிவேதிதா என்று அவர் வாழ்நாளில் உச்சரித்திருக்கிறார். இதுவரை அவர் என் எழுத்து பற்றி ஒரு வார்த்தை சொன்னதில்லை. அது பற்றி எனக்கு அக்கறையும் இல்லை. விஷயம் என்னவென்றால், முழுமையான புறக்கணிப்பு. அது ஒரு தந்திரமான உபாயம். வெளிநாட்டு எழுத்தாளர்கள் பற்றிப் பேசுவேன். உள்ளூர் எழுத்தாளன் மயிருக்கு சமானம். ஆனால் நான் அப்படி அல்ல. பாராட்டாக இருந்தாலும் விமர்சனமாக இருந்தாலும் இரண்டையும் பேசுவேன். உண்மையில் நான் பேராசிரியர் … Read more

பொறாமை

நான் முற்றும் போட்டாலும் சில முண்டக் கலப்பைகள் என்னைத் தொடர்ந்து இந்தக் கச்சடா விஷயம் பற்றி எழுத வைக்கின்றன. ஒரு முண்டக் கலப்பை எழுதுகிறது, சாவு வீட்டில்கூட நாம்தான் பிரதானமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆளாம் நான். அட முண்டமே, சாவு வீடுகளுக்கே நான் போவதில்லை. ஏனென்றால், செத்தவர்கள் மீதான பிரியத்தினால் நானும் மயக்கம் போட்டு விழுந்தோ, அல்லது, ஹார்ட் அட்டாக் வந்து பிணமாகவோ ஆகி விடுவதற்கான சாத்தியங்கள் உண்டு என்பதை சில சாவு வீடுகளுக்குப் … Read more

நல்ல மொழிபெயர்ப்புகளும் உண்டு

ஏற்கனவே சொன்னதுதான். ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்பு நூல்களை நம்பி வாங்கலாம். கார்த்திகைப் பாண்டியனின் மொழிபெயர்ப்புகளை நான் அதிகம் படித்ததில்லை. ஆனால் படித்த வரை அவரது மொழிபெயர்ப்புகளும் வாசிக்கக் கூடியவையே. கவிதைகளில் பெருந்தேவி. அவருடைய அக்கா மகாதேவி மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு போலவே தெரியவில்லை. நேற்று எழுதியதில் ஆடம்பரம் என்பதற்கு பதில் படாடோபம் என்றும் எழுதலாம். இன்னும் நன்றாக இருக்கும். இப்போது 899 ரூ. கொடுத்து வாங்கிய ரோஜாவின் பெயர் என்ற நரகலை என்ன செய்வது என்று தெரியவில்லை. பார்க்கப் … Read more