ஸ்வர ராக ஸூதாரஸ… (2)

இசையைப் பொறுத்தவரை இது உசந்தது, இது தாழ்ந்தது என்று சொல்வது அர்த்தமற்றதுதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. இது ஒரு பொது விதி என்றாலும் எனக்கு பழைய கலைஞர்கள் பாடுவதே பிடித்திருக்கிறது. ஸ்வர ராக ஸூதாரஸ கீர்த்தனையை யார் யாரெல்லாம் பாடியிருக்கிறார்களோ அவர்களையெல்லாம் கேட்டால் செம்மங்குடிதான் உச்சத்தில் நிற்கிறார். அதேபோல் நேதுநூரி கிருஷ்ணமூர்த்தியும் மிகவும் சிலாக்கியமாக இருந்தது. ஆனால் சஞ்சய் சுப்ரமணியத்தை ஆர்வத்துடன் கேட்டும் என்னால் ஒன்ற முடியவில்லை. காரணம் என்ன என்று என்னையே ஆராய்ந்தேன். நேதுநூரி (1927–2014), … Read more

ஸ்வர ராக ஸுதாரஸ…

தியாகராஜரின் கீர்த்தனைகளில் ஒன்றான ஸ்வர ராக ஸூதாரஸவை செம்மங்குடியின் குரலில் கேட்டுக் கொண்டிருந்த போது இதை எழுதத் தோன்றியது. இந்தக் கீர்த்தனையில் செம்மங்குடியின் ஆலாபனையையும் நிரவலையும் ஸ்வரப் பிரஸ்தாரத்தையும் ரசிக்க முடியாதவர்கள் செவியின் பயன்பாட்டை இழந்தவர்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கீர்த்தனையின் பொருளைக் கூட விட்டு விட்டு மேற்கூறிய மூன்றையும் கவனியுங்கள். தேன் வந்து பாயும் காதினிலே… ஆலாபனை என்பது கீர்த்தனைக்கு முன், வரிகள் இல்லாமல், ஸ்வரங்களை (ச, ரி, க, ம, ப, த, … Read more

நிர்குண்

நான் எப்பவும் சௌந்தர்ய லஹரியில் நீந்தித் திளைப்பவன். அதனால் ஓஷோவைப் பிடிக்கும். மற்றபடி அவர் பேச்சைக் கேட்டதில்லை; எழுத்தைப் படித்ததில்லை. பெண்களை விட ஆண் அழகர்கள் பலரைக் கண்டிருக்கிறேன். அப்படி ஒரு சௌந்தர்யன் நிர்குண். அவர் கவிதைகள் நான் நிர்குண், இது நிர்ஹோஸ்தியஸ் என்று முடியும். ஒரு நாளில் பத்து கவிதைகள் எழுதுவார் போல. நள்ளிரவில் எழுதியது சில. அதிகாலையில் எழுதுவது சில. எப்படியெனக் கேட்டபோது இரண்டு மணி நேரமே உறங்கும் நேரம் என்றார் நிர்குண். ஆன்மீகவாதி. … Read more