இலக்கியமும் ஜனரஞ்சக எழுத்தும்

சமீபத்தில் பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரு கருத்து சொல்லியிருக்கிறார். ”சாகித்ய அகாதமி விருதை ஏன் ராஜேஷ்குமாருக்குக் கொடுக்கக் கூடாது?” அதற்கு ராஜேஷ்குமார் பிரபாகர் இப்படிச் சொன்னதே எனக்கு அந்த விருது கிடைத்து விட்டது போல் இருக்கிறது என்று நன்றி கூறியிருக்கிறார். உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தக் கேலிக்கூத்து நடக்கும். உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இலக்கியத்துக்கும் ஜனரஞ்சக எழுத்துக்கும் வித்தியாசமே தெரியாமல் இருப்பார்கள் மக்களும் ஜனரஞ்சக எழுத்து உற்பத்தியாளர்களும். வித்தியாசமே தெரியவில்லை. சாகித்ய அகாதமி விருது இலக்கியத்துக்கு அளிக்கப்படுவது, வணிக/ஜனரஞ்சக … Read more

அற்புதர்கள்

ஏ.ஆர். ரஹ்மானைத் தொடர்பு கொள்வது மிகவும் சிரமம் என்பார்கள். ஆனால் நான் தொடர்பு கொண்டால் அரை மணி நேரத்துக்குள்ளாக பதில் வந்து விடும். ஒரு முறை கூட தவறியதில்லை. சமீபத்தில் அவர் வாழ்வில் ஒரு அசந்தர்ப்பமான சம்பவம் நடந்த அன்று கூட வேறோர் வேலையாகத் தொடர்பு கொண்டபோது அரை மணி நேரத்தில் பதில் வந்தது. இறையன்புவும் அப்படித்தான். பொதுவாக உடனே எடுத்து விடுவார். அவசர வேலையில் இருந்தால் வேலை முடிந்ததும் அழைக்கிறேன் என்பார். அநேகமாக ஒரு மணி … Read more

மன உளைச்சல்

நேற்று காலை ஏழரை மணிக்கு எனக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைப் பார்த்ததிலிருந்து ஒரே மன உளைச்சல். மரண பயத்தினால் அல்ல. அந்த மொட்டைக் கடுதாசியில் என் பெயரை சாரு நாயுடு என்று குறிப்பிட்டிருந்ததால். என் நைனா நாயுடு சமூகம் அல்ல. காட்டு நாய்க்கன் சமூகம். அம்மா நாட்டுக்கோட்டை செட்டி. காட்டு நாய்க்கன் எப்படி நாயுடுவாக ஆக முடியும்? மேலும், நான் இன அடையாளத்தையும், தேச அடையாளத்தையுமே மறுத்து வருபவன். நான் எப்படி சாதி அடையாளத்தை, அதிலும் என் … Read more