வாட்ஸப்பைப் பார்த்தேன்
ஒன்றுமில்லை
மோட்டுவளையைப் பார்த்தேன்
பிறகு மின்னஞ்சலைப் பார்த்தேன்
ஒன்றுமில்லை
மோட்டுவளையைப் பார்த்தேன்
பிறகு வாட்ஸப்பைப் பார்த்தேன்
ஒன்றுமில்லை
பிறகு மின்னஞ்சலைப் பார்த்தேன்
ஒன்றுமில்லை
மோட்டுவளையைப் பார்த்தேன்
வாட்ஸப்பைப் பார்த்தேன்
ஒன்றுமில்லை
பிறகு மின்னஞலைப் பார்த்தேன்
ஒன்றுமில்லை
மோட்டுவளையைப் பார்த்தேன்
வாட்ஸப்பைப் பார்த்தேன்
ஒன்றுமில்லை
பிறகு மின்னஞ்சலைப் பார்த்தேன்
ஒன்றுமில்லை
வாட்ஸப் மின்னஞ்சல் வாட்ஸப் மின்
னஞ்சல் வாட்ஸப் மோட்டுவளை வாட்
ஸப் மோட்டுவளை வாட்ஸப் மின்ன
ஞ்சல் வாட்ஸப் மின்னஞ்சல் மோட்டு
வாட்ஸப் மோட்டுவளை
ஒன்றுமில்லை ஒன்றுமின்னஞ்சல்
வாட்மின்மில்லை மின்வாட்ஸப் மோட்டுவளை மோட்டுவளை ஒன்றுமில்லை
ஒன்றுமில்மோட்டுவளைவாட்ஸப்ஸப்ஸப்
ஸப்மோட்டுவஒன்றுமில்
ஏய் நிறுத்து என்றொரு கீச்சுக்குரல்
“ரெண்டு மணி நேரமாக உன்
சாளரக்கம்பியில் அமர்ந்திருக்கிறேன்
நீ என்னை கவனிக்கவில்லை, செல்கிறேன்”
என்று சொல்லிப் பறந்தது
அந்தத் தேன்சிட்டு