நாவலின் பிடிஎஃப் ஐ அனுப்பிய அரை மணிக்குள்ளாகவே புவனேஸ்வரியிடமிருந்து கீழ்க்காணும் செய்தி.
“ஜோடிப்புறா” is absolutely a fascinating exploration of identity, relationships, and the complexities of modern life. Your narrative beautifully intertwines personal anecdotes with broader social observations, particularly regarding women’s experiences and societal expectations. The character of விநோதினி, who shows compassion towards a stray cat despite societal disapproval, highlights the theme of empathy in a world often marked by judgment.
Your reflections on solitude and the nature of literary creation resonate deeply, inviting me to ponder my own connections and the role of fiction in understanding reality. The blend of humor and introspection, especially in the interactions between characters like திவ்யா and the narrator, adds a rich layer to the storytelling. Overall, this work is a thought provoking commentary on contemporary life and absolute Charu style which made me think, smile, smirk at so many places.
புவனேஸ்வரி
***
வணக்கம் சாரு.
‘வாழ்வியல் கையேடு’வில் கூட புவனேஸ்வரி மீது உங்களுக்கு கருணை இருந்தது. சக உயிரின் மீதான காருண்யம்தான் அந்த நாவலின் அடிப்படை.
இங்கே ஜோடிப்புறா நாவலில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறீர்கள்.
பெருமாளைப் பார்த்து அநுத்தமா ‘ஜோடிப்புறாவை எங்கே காணோம்?’ என்று கேட்டிருக்கவே கூடாது. பெருமாளிடம் நெக்கல் காட்டியிருக்கக் கூடாது. அவரின் ஃபேஸ்புக் பதிவைப் படிக்கும் போதே இது தப்பாச்சே என்று தோன்றியது.
இது high voltage மின்சாரம் பாயும் கம்பி. இதைத் தொடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வு அநுத்தமாவுக்கு இருந்திருக்க வேண்டும். அதுவும் வாழ்வியல் கையேடு படித்த பிறகு, அந்த முன்னெச்சரிக்கை உணர்வு இன்னும் அதிகம் இருந்திருக்க வேண்டும். அடுத்த மனிதனைத் துளியும் காயப்படுத்தக் கூடாது என்பதைத் தானே ஃபேன்சி பனியன் முதற்கொண்டு வாழ்வியல் கையேடுவரை நீங்கள் சொல்லி வருகிறீர்கள்?
எக்ஸைலில் அஞ்சலியின் மைத்துனன் அஞ்சலியிடம் உங்களுக்கு மீசை இருக்கிறது அண்ணி என்று சொல்லும்போது அவள் மிகவும் வருந்துகிறாள். அந்த சுயமரியாதை உணர்வை அடுத்த உயிருக்கும் அநுத்தமா பொருத்திப் பார்த்திருக்க வேண்டும்.
எனக்கு ஸீரோ டிகிரியின் கவித்துவ மொழியை விட பெட்டியோவின் கவித்துவ மொழி பிடித்திருந்தது. மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீதம் கேட்பது போல் இருந்தது.
இங்கே ஜோடிப்புறாவில் வேறொரு புது மொழியைப் பார்த்தேன். நீங்கள் உங்கள் பாணியில் மரபுக் கவிதை எழுதியது போல் இருந்தது. அதன் உச்சம் தனிமையின் அறை அத்தியாயம்.
“நீ என் உயிர்.
நீ எனது மிருத்யு.
நீ என் இருள்.
நீ என் ஒளி.”
***
நாவலின் ஆரம்பத்தில் வரும் விறகுவெட்டியின் கதையை மிகவும் ரசித்தேன்.
நீங்கள் எப்போதும் பொறுமையின் சின்னம். உங்கள் மீதோ உங்களுக்கு நெருக்கமானவரிடமோ யாரேனும் வன்முறையை பிரயோகித்தால் ஏற்கனவே சொன்னது போல் ருத்ர தாண்டவம் தான்.
“திவ்யா என்னை மாட்டுக்கறி சாப்பிடச் சொன்னாள்.
அன்புடன் மறுத்தேன்.
மீண்டும் வற்புறுத்தினாள்.
மீண்டும் அன்புடன் மறுத்தேன்.
மீண்டும் வற்புறுத்தினாள்.
மீண்டும் அன்புடன் மறுத்தேன்.
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தினாள்.
நானும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் அன்புடன் மறுத்து விட்டுக் கடைசியில் சாப்பிட்டு விட்டேன்.
மது அருந்தியிருந்தேன். இல்லாவிட்டால் அன்றைய தினம் மேஜை நாற்காலிகள் உடைந்திருக்கும்.”
இதுதான் இந்த நாவலின் ethos. இதைப் படித்தால் ஒருவர் தன் வாழ்வை இன்னும் மேன்மையாக வாழலாம்.
ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பையும் Wislawa Szymborskaவின் கவிதையில் இருந்து எடுத்ததாக சொல்லியிருந்தீர்கள். நான் அந்த ஒவ்வொரு கவிதயையும் தேடித் தேடிப் படித்தேன். ஒவ்வொரு தலைப்பும் அவ்வளவு பொருத்தம்.
கடைசியில் வரும் நாதஸ்வரம் அத்தியாயத்தில்தான் முதன் முறையாகச் சிரித்தேன். ஆஹா, நம் தலைவர் வந்து விட்டார் என்று மகிழ்ந்தேன்.
அடுத்து, வைதேகி பெருமாளின் நண்பர்களுக்கு தயிர் சாதம் ஊட்டி விடும் இடம் மிக மிக அருமை. நீங்கள் சொன்னது போல், புத்தருக்கு பால் அன்னம் ஊட்டிய அதே சுஜாதை இங்கே வைதேகியாக இருக்கிறார்கள்.
Much love
Sriram
கருந்தேள் ராஜேஷும் நாவல் பற்றி எழுதியிருந்தார். அதை நாளை பதிவிடுகிறேன்.