இறுதிச் சுற்று

அன்புள்ள சாரு, தங்களின் ’சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே’ படித்தேன். அருமை! உங்கள் எழுத்து எங்களை வசீகரிப்பது புதிதல்ல, இருப்பினும் இது அட்டகாசம்! தங்களின் பணி நெருக்கடிகளுக்கு இடையில் சந்தோஷ் நாராயணனின் ’இறுதிச்சுற்று’ பாடல்களை கேட்க முடிந்ததா? ராமசாமி பைத்தியம் பிடித்து விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு வேலைப் பளு.  அதற்கு நடுவிலும் நேற்று நான் (மட்டும்) இறுதிச் சுற்று போயிருந்தேன்.  காரணம், நல்ல தமிழ்ப் படம் பார்த்து மாமாங்கம் ஆகி விட்டது.  மேலும் நான் ஒரு சினிமாப் … Read more

கோபி கிருஷ்ணன் – பழுப்பு நிறப் பக்கங்கள்

பழுப்பு நிறப் பக்கங்களுக்கு தினமணியின் பார்த்தசாரதி, ச.ந. கண்ணன், உமா ஷக்தி ஆகிய மூவரும் கொடுத்து வரும் ஊக்கம் எனக்குப் பெரிதும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது.  அவர்களுக்கும் இந்தப் பத்திக்கான புத்தகங்களை வாங்கிக் கொடுத்து உதவும் அத்தனை நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.  ஃபெப்ருவரி 27 (சனிக்கிழமை) வெளியீட்டு விழாவை மறந்து விடாதீர்கள்.  மாலை ஆறரை மணி.  ராஜா அண்ணாமலை மன்றம், ப்ராட்வே (எஸ்பிளனேட்), பல் மருத்துவக் கல்லூரி அருகில், ஃபோர்ட் ரயில்நிலையம் எதிரே.  திருப்பூர் கிருஷ்ணன், … Read more

சிறுதெய்வ வழிபாடு

ஆறு மாதங்களுக்கு முன்பு நானும் டாக்டர் ஸ்ரீராமும் திருநெல்வேலி சென்றிருந்தோம்.  அது பற்றி எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்.  நேரமின்மையின் காரணமாக பல விஷயங்களை எழுத முடியவில்லை.  ஸ்ரீராம் எழுதியிருக்கிறார்.  ஒரே ஒரு விஷயத்தில் முரண்படுகிறேன்.  ஸ்டாலின் குணசேகரன் சிறுதெய்வம் அல்ல.  பெருந்தெய்வங்களோடு சேர்ந்து விட்டார்.  கட்டுரையைப் படித்துப் பாருங்கள். http://sriramintamil.blogspot.in/2016/02/blog-post.html

ஜெய்ப்பூர் இலக்கிய விழா – 1

பல நண்பர்களும் தங்களுக்குப் பிடிக்காத எழுத்தாளர்களை அவர் கூகுளிலிருந்து தரவுகளை எடுத்துப் போட்டு பக்கங்களை நிரப்பி விடுகிறார் என்று சொல்வதை செவிமடுத்திருக்கிறேன்.  தற்கால எழுத்தாளர்களைப் பற்றி ஒரு ‘பழைய’ எழுத்தாளர் அப்படிச் சொன்னதாகவும் கேள்விப்பட்டேன்.  இந்தப் பிரச்சினையில் நான் சிக்கவில்லை என்றாலும் இது பற்றி எனக்கு சில சந்தேகங்களும் கேள்விகளும் உண்டு.  இந்தியில் கூகுளை கூகுள் பாபா என்கிறார்கள்.  என்ன விபரம் கேட்டாலும் கொடுப்பார் கூகுள் பாபா.  ஆனால் வெறும் விபரங்களை மட்டும் வைத்துக் கொண்டு எழுதி … Read more

திருப்பூர் புத்தகக் கண்காட்சி

திருப்பூர் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஃபெப்ருவரி 7  வரை நடைபெறுகிறது. இடம்: KRC சிட்டி சென்டர், டைமண்ட் தியேட்டர் எதிரில், திருப்பூர். நேரம்: காலை 11 முதல் இரவு 9:30 வரை. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண் 23, 24) மற்றும் உயிர்மை (அரங்கு எண் 2) அரங்குகளில் கிடைக்கும். – ஸ்ரீராம்

பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி

  பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஃபெப்ருவரி 7 வரை நடைபெறுகிறது. இடம்: நகராட்சித் திடல், புதிய பேருந்து நிலையம் அருகில், பெரம்பலூர். நேரம்: காலை 11 முதல் இரவு 9 வரை. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண் 39, 40) மற்றும் உயிர்மை (அரங்கு எண் 77) அரங்குகளில் கிடைக்கும். –  ஸ்ரீராம்