சர்ப்பயா என்ற கே.கே. பற்றி…

இலங்கைக்கு ரொம்பவும் எதேச்சையாகத்தான் சென்றேன்.  மிக மிகத் தற்செயலாக நிகழ்ந்த சம்பவம்.  றியாஸ் குரானா அழைத்திருக்காவிட்டால் என் ஆயுள் முழுவதுமே நான் இலங்கை செல்வதற்கான வாய்ப்பே இல்லை.  ஏனென்றால், இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களிடமிருந்து கலாச்சார ரீதியாக வேறுபட்டவர்கள் அல்ல.  இரு சாராருமே தமிழ் சினிமா என்ற அசிங்கத்தின் ரசிகக் குஞ்சாமணிகள்.  இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களோ புலம் பெயர்ந்து வசிக்கிறார்கள்.  உள்ளூரில் எழுதுபவர்களெல்லாம் மு.வ. காலத்து ஆட்கள்.  அவர்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.  அதற்கெல்லாம் மு.வ. காலத்திலேயே … Read more

அல் பச்சீனோ

நயநதினி திடீரென்று “உன்னுடைய மார்ஜினல் மேன் நாவலைப் படித்திருக்கிறேன்” என்றாள். இலங்கையில் என் ஆங்கில நூல்கள் கிடைக்க வாய்ப்பு இல்லையே எனக் குழம்பினேன். அடிப் பாவி, ஏன் இதை நீ முன்பே சொல்லவில்லை? இப்போதுதானே படித்தேன்? ஆமாம், உனக்குப் புத்தகம் எங்கிருந்து கிடைத்தது?  இப்போதுதானே நானே என் பதிப்பாளர் நண்பரிடமிருந்து உனக்கான ஒரு பிரதியை வாங்கி வைத்திருக்கிறேன். இதற்குப் பதில் இல்லை.  நானும் எதையும் ஒரு தடவைக்கு மேல் கேட்பதில்லை.  ஆனால் நாவலுக்கு உள்ளேயிருந்து பல விஷயங்களைப் பேசினாள்.  … Read more

இசையும் உன் எழுத்தும் வேறல்ல… எழுதியவர்…

இக்கணத்தில் சிறைப்படுத்திய எண்ணம். எந்த ஒரு மதுவின் போதையும், எப்பேர்ப்பட்ட கலவியின் பரவசமும் Adajio for strings இல் மூழ்கி இருக்கும் மயக்கத்திற்கு ஈடு இல்லை .மற்றவை கொண்டாட்டம். ஆனால் Adajio for strings மெய்நிலை மறந்த பிரபஞ்ச சமர்ப்பணம்.எத்தனை மணி நேரம் மூழ்கித் திளைத்தேன் என்ற கணக்கே இல்லை .சில நிமிடங்களில் மனதின் அத்தனை உணர்வெல்லைகளுக்குள்ளும் புகுந்து பயணிக்கிறது. சில சமயம் மீள சாத்தியம் இல்லாத படுகுழி போல் தெரிகிறது.இருளில் மூழ்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் என் … Read more

இன்று மாலை ஃபேஸ்புக் லைவில்…

இன்று மாலை ஐந்து மணிக்கு ஃபேஸ்புக் லைவில் உரையாற்ற இருக்கிறேன். இன்று காலை பதினோரு மணியிலிருந்தே ஆரோவில்லில் சிறுகதைப் பட்டறை ஆரம்பிக்க இருக்கிறது. அதில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. பரோல் கிடைக்கவில்லை. அதனால்தான் ஐந்து மணிக்கு ஃபேஸ்புக் லைவில் பேசுகிறேன். ஜே.பி. சாணக்யாவின் ஆண்களின் படித்துறை, இராசேந்திர சோழனின் இசைவு, சு. வேணுகோபாலின் உள்ளிருந்து உடற்றும் பசி ஆகிய மூன்று சிறுகதைகள் பற்றிய பட்டறை. என் உரை இம்மூன்று சிறுகதைகள் பற்றியும் பொதுவாக எழுத்தும் பாலியலும் … Read more

அஞ்சலி: ரணஜித் குஹா (1923-2023) | ஆளப்படுபவர்களின் வரலாறு: ரவிக்குமார்

நான் அடிக்கடி வரலாற்றறிஞர் ரணஜித் குஹா பற்றி என் கட்டுரைகளில் குறிப்பிடுவது வழக்கம். அவர் சமீபத்தில் தன் நூறாவது வயதில் ஆஸ்திரியாவில் மறைந்தார். குஹா என் ஆசான்களில் ஒருவர். அவருடைய ஸபால்ட்டர்ன் ஸ்டடீஸ் இல்லாவிடில் ஔரங்ஸேப் நாவல் இல்லை. அவர் பற்றிய நண்பர் ரவிக்குமாரின் முக்கியமான கட்டுரையை இங்கே பகிர்கிறேன். நன்றி: இந்து தமிழ் திசை.

ஏன் இலக்கியம்?

தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறை,பொது நூலக இயக்ககம் மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து நடத்திய உலக புத்தக தின விழா – 2023 அன்று அடியேன் ஆற்றிய உரையின் காணொலி: நன்றி: கபிலன், ஷ்ருதி டிவி