பெங்களூர் IIHS சந்திப்பு

இந்த முறை பெங்களூர் சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது. சில சொந்த ஏமாற்றங்கள் இருந்தாலும். வியாழக்கிழமை (ஒன்பதாம் தேதி மே மாதம்) காலை பதினோரு மணிக்கு வேளச்சேரியில் உள்ள ஏ2பி போய்ச் சேர்ந்தேன். வேளச்சேரியில் சீனி சேர்ந்து கொள்வார். சீனியின் காரில் சீனி கார் ஓட்ட பெங்களூர் போக வேண்டும் என்பது திட்டம். வழியில் காஞ்சீபுரத்தில் ராஜா சேர்ந்து கொள்வார். ஏ2பியில் காஃபி குடித்துக்கொண்டிருந்த போது ராஜேஷ் வந்தார். அங்கேயே கொஞ்சம் கை முறுக்கு வாங்கிக்கொண்டேன். சீனி … Read more

பசி

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது எனக்குப் பிடிக்காது. கொஞ்சமும் பிடிக்காது. ஆனால் பிராணிகளைப் பிடிக்கும். வீட்டில் வளர்ப்பதுதான் பிடிக்காது. அதற்காகத் தெருவில் விட வேண்டும் என்று சொல்லவில்லை. எந்த தேசத்தில் பிராணிகள் தெருவில் திரிகின்றனவோ அந்த நாடு இந்த உலக வரைபடத்திலேயே இருப்பதற்கு லாயக்கில்லாதது என்று நினைக்கிறேன். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. துருக்கியின் தெருக்களில் எங்கு பார்த்தாலும் பூனைகள் திரியும். ஆனால் அவை பசித்திருப்பதில்லை. துருக்கி சமூகமே அந்தப் பூனைகளை வளர்க்கிறது. அப்படியிருந்தால் பிரச்சினை இல்லை. … Read more

La ultima niebla

மேற்கண்ட ஸ்பானிஷ் தலைப்பின் நேரடி அர்த்தம் The Ultimate Fog. சீலே தேசத்தைச் சேர்ந்த Maria Luisa Bombal 1934இல் எழுதி வெளிவந்த இந்தக் கதையை சில ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் சற்று விரிவாக்கி The House of Mist என்ற தலைப்பில் வெளியிட்டார் போம்பல். விரிவாக்கிய பதிப்பை நான் படிக்கவில்லை. முப்பது பக்கங்களே கொண்ட இந்தக் கதையைப் போல் ஒரு கதையை நான் படித்ததில்லை. தமிழில் சி.சு. செல்லப்பா எழுதிய ஜீவனாம்சம் கதையை மட்டுமே லா … Read more

வாசகர் வட்டம்

சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் என்று இன்று யாரும் இல்லை. இப்போதைய பிரிவு, ஜனரஞ்சக எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள். அவ்வளவுதான். ஜனரஞ்சக எழுத்தாளருக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இலக்கியவாதிகளையும் ஜனரஞ்சகப் பத்திரிகைகள் இப்போது அனுமதிக்கின்றன. லா.ச.ரா. மட்டும் வாழ்நாள் முழுக்கவும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் மட்டுமே எழுதியவர். அவருக்கு ஜனரஞ்சகம் இடம் கொடுத்தது. அசோகமித்திரன் ஜனரஞ்சகப் பத்திரிகைகளிலும் கணையாழி, தீபம் போன்ற இடைநிலைப் பத்திரிகைகளிலும் எழுதியவர். அவரையும் சிறுபத்திரிகை வட்டத்தில் குறுக்க முடியாது. சுந்தர ராமசாமி அப்படி இல்லை. தீவிர … Read more

ஷ்ருதி டிவி சாதனை

ஷ்ருதி டிவி பத்து லட்சம் வாசகர்களை அடைந்திருக்கிறது. கபிலனுக்கும் சுரேஷ்குமாருக்கும் வாழ்த்துகள். ஷ்ருதி டிவி தமிழ் இலக்கிய உலகில் ஒரு மகத்தான சாதனை. ஷ்ருதி டிவி இல்லாவிட்டால் என்னுடைய மேடைப்பேச்சுகள் எதுவுமே வாசகர்களைச் சென்றடைந்திருக்காது. சமகாலத் தமிழ் இலக்கியவாதிகள் அத்தனை பேரையும் வாசகர்களிடம் கொண்டு சேர்த்த பெருமை ஷ்ருதி டிவி கபிலனுக்குரியது. அவர் ஒரு கோடி வாசகர்களை விரைவிலேயே அடைய வாழ்த்துகிறேன்.