அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு

அன்புள்ள சாருவுக்கு, அன்பு நாவல் ஒரு அகோர தாண்டவம்..உருத்திர மூர்த்தியாய் அப்படி ஒரு ஆட்டம் நாவல் முழுவதும்… இருப்பினும் நாவலின் மையச்சரடு அன்பின் சீரான கோர்வையைப் பற்றிக் கொண்டே செல்கிறது. நாவல் உணர்த்தும் பொருள் பிரதியில் முழுதாய்ப் பொதிந்துள்ளது.. இதனுள் முத்துக் குளித்தால் தரிசனம் கிடைக்கப் பெறலாம்…கிடைக்கும்… மிலரப்பாவின் கதை மரகத மாணிக்கம்… விறுவிறுப்புக்குப் பஞ்சமே இல்ல..ஒரு 300பக்க நாவல் இவ்வளவு வேகமாக நான் படித்ததே இல்லை. போனில் படித்தால் கண் எரிகிறது என்று எப்போதும் புத்தகங்களையே … Read more

விஷ்ணுபுரம் விழா நினைவுகள்

விஷ்ணுபுரம் விழாவில் சில விடுபட்ட புகைப்படங்கள் இருந்தன. அதில் இது ஒன்று. முன்வரிசையில் சுபஸ்ரீ, சக்திவேல். பின்வரிசையில் யோகா குரு சௌந்தர், மனோபாரதி.

writer of pop colors…

சினிமா நண்பர்கள் தங்கள் படத்தில் நடிக்க அழைக்கிறார்கள். நடிப்பை விட எழுத்தே எனக்கு எளிது என்று சொன்னாலும் அவர்களே எழுத்தாளராகவும் இருந்து விடுவதால் நடிப்புதான் வேண்டும் என்கிறார்கள். எனக்கு நடிக்கத் தெரியாதே என்று சொன்னால் அது எங்கள் கவலை என்கிறார்கள். ஒரு எழுபது வயது எழுத்தாளனின் மூன்று நாள்களை முழுநீளத் திரைப்படமாக எடுக்கலாம் என்பது என் நெடுநாள் திட்டம். பொழுதுபோக்கு சினிமா அல்ல. படத்தில் வசனமே இருக்காது. வேறு நடிகர்களும் இல்லை. நான்தான் இயக்கலாம் என்று திட்டம். … Read more

வாழ்ந்து பார்த்த தருணம்: வெங்கடசுப்ரமணியன்

வாழ்ந்து பார்த்த தருணம் என்ற தலைப்பில் என் நண்பர் வெங்கடசுப்ரமணியன் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து எழுதி வருகிறார். பின்வரும் கட்டுரை அந்தத் தொடரின் 193ஆவது பகுதி. சென்ற மாதமே எழுதி விட்டார். நான்தான் நேரமின்மையால் பகிர முடியவில்லை. இப்போது அன்பு நாவலை முடித்து விட்டதால் கொஞ்சம் சாவகாசமாக இருக்கிறேன். டிசம்பர் 18 விஷ்ணுபுரம் விழா. அன்றுதான் என் பிறந்த நாளும். நான் என் பிறந்த நாள்களை வெகு ஆடம்பரமாகக் கொண்டாடவே விருப்பப்படுவேன். நரகத்தில் உழல்பவர்களுக்குக் கிடைக்கும் கொண்டாட்டம் அது. … Read more

இழுத்துப் போர்த்திக் கொண்ட கலகங்கள்!

இரண்டு மூன்று தினங்களுக்கு முன் புத்தகத் திருவிழாவில் புல்புல் இஸபெல்லாவைப் பார்த்தேன். ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம். ரொம்பவும் வருத்தப்பட்டேன். அவரைப் பார்த்த அன்றுதான் நான் ரொம்பத் த்ராபையான ஆடையில் சென்றிருந்தேன். மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தேன். நான் பெண்ணாகப் பிறந்திருந்தால் புல்புல் மாதிரிதான் இருந்திருப்பேன், எழுதியிருப்பேன் என்று. அதைப் படித்தபோது புல்புல் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தாராம். அடிப்பாவி. அதற்குப் பிறகு ஒருநாள் நீலம் அரங்கில் சந்தித்தேன். அன்றும் படு த்ராபையான ட்ரெஸ்ஸில் இருந்தேன். … Read more

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு: ஸ்ரீராம்

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு – டீஸர் அன்பு நாவலை பத்து நாட்களில் சாரு எழுதியிருக்கிறார். அதுவல்ல அதிசயம். நாவலின் ஒவ்வொரு வார்த்தையுமே ஒவ்வொரு அணுகுண்டைத் தாங்கி வருகிறது. சாமி வந்தது போல் ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு உக்கிரம். சாருவின் நாவல்களை என்னுடைய ரசனையின்படி இவ்வாறு வரிசைப் படுத்துவேன். எக்ஸைல், ராஸ லீலா, ஒளரங்ஸேப், தேகம், காமரூப கதைகள், ஸீரோ டிகிரி, ஃபேன்சி பனியன். வாதையைக் கொண்டாட்டமாக எழுதியது ராஸ லீலா. வாழ்வின் ஒவ்வொரு … Read more