தடை

ஆண் பெண் ஜனன உறுப்புகள் பெயர் வருவதால் கார்ல் மார்க்ஸ், காயத்ரி கட்டுரைகள் ஃபேஸ்புக்கில் நீக்கப்பட்டன என அறிகிறேன். ஆனால் மார்க் மார்க் என்று வருகிறது. யார் அந்த மார்க்? ஃபேஸ்புக் முதலாளியா? அவருக்குத் தமிழ் தெரியுமா? இந்தத் தடையெல்லாம் எப்படி நடக்கிறது? நான் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறேன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே என் நூல்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழில் யாரும் வாசிப்பதே இல்லை என்பதால் தடை செய்யப்படவில்லை. சவூதி அரேபியாவில் எத்தனை … Read more

கால் பந்தாட்டம் ஒரு அரசியல் நிகழ்வு

6.12.2022 அன்று நடந்த மொராக்கோ – ஸ்பெய்ன் கால்பந்தாட்டம் பார்த்தேன். கால் பந்தாட்டம் எனக்கு விளையாட்டு மட்டும் அல்ல. அரசியலோடு தொடர்பு உடையது. உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க ஏன் நான் யாரும் ஈடுபாடு காண்பிக்காத மொராக்கோ என்ற ஒரு நாட்டைத் தேர்ந்தெடுத்து, அங்கே எழுதப்படும் இலக்கியத்தை ஒரு முப்பது ஆண்டுக் காலமாகப் படித்து அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தேன்? ஏன் ஜான் ஜெனே ”நான் இறந்து போனால் என் பிரேதத்தை ஃப்ரான்ஸில் புதைக்காதீர்கள், மொராக்காவிலேயே புதையுங்கள்” என்று சொன்னார்? … Read more

உலகக் கால்பந்தாட்டப் போட்டி

எக்கச்சக்கமான வேலைகளுக்கு இடையில் உலகக் கால்பந்தாட்டப் போட்டிகளையும் பார்த்து வருகிறேன்.  எல்லாவற்றையும் பார்ப்பதில்லை.  ஒரு நாளில் ஒரு போட்டி.  இதில் என்னுடைய மனச்சாய்வு எப்படி இருக்கிறது என்றால், கத்தாருக்கும் எகுவாதோருக்கும் என்றால் என் ஆதரவு எகுவாதோர்.  காரணம், தென்னமெரிக்கா.  இங்கிலாந்துக்கும் ஈரானுக்கும் என்றால், இங்கிலாந்து.  செனகல் – நெதர்லாண்ட்ஸ் என்றால் சொல்லவே தேவையில்லை, செனகல்.  யு.எஸ். – வேல்ஸ் : இரண்டுக்குமே ஆதரவு இல்லை.  ஆட்டத்தையே பார்க்கவில்லை.  இரண்டு நாடுகளையுமே பிடிக்காது.  அர்ஹென்ந்த்தினா – சவூதி அரேபியா … Read more

அம்மாள்!

சென்னையின் கலாச்சார அவலங்களில் ஒன்று, ஹிண்டு ஆங்கில நாளிதழ்.  அதில் உள்ள யாருக்குமே சமகாலத் தமிழ் இலக்கியவாதிகள் யாரையும் தெரியாது.  ஒரே விதிவிலக்காக இருந்தவர் அசோகமித்திரன்.  அவர் காலத்திலும் சரி, அவருக்குப் பிறகும் சரி, ஆங்கில ஹிண்டு ஆட்களுக்குத் தெரிந்த இலக்கியவாதிகள் சுஜாதாவும் பாலகுமாரனும்தான்.  அதன் காரணமாக அந்தப் பத்திரிகை நடத்தும் இலக்கிய விழாவிலும் வெளிமாநில எழுத்தாளர்களைத்தான் பார்க்கலாமே தவிர தமிழ்நாட்டிலிருந்து ஒருவரும் தென்பட மாட்டார்கள்.  ஒப்புக்கு ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள்.  அவர்களும் நாகர்கோவில் பத்திரிகை கோஷ்டியைச் … Read more

சூஃபித்துவமும் எழுத்தும்…

பாரசீகக் கவிகள் ஹஃபீஸ், ரூமி மற்றும் இந்தியக் கவி மீர்ஸா காலிப் போன்றவர்களின் கவிதைகள் உலகப் புகழ் பெற்றவை.  அவற்றைப் படிக்காத, அவற்றைக் கடந்து வராத – அதிலும் குறிப்பாக மீர்ஸா காலிபை அறியாதவர் இருக்க சாத்தியம் இல்லை.  இந்த மூவரின் கவிதைகளிலும் வைன் ஒரு படிமம். அடிக்கடி தென்படும் படிமம்.  இந்த மூவரில் காலிப் மதுவிலேயே தோய்ந்தவர்.  மதுவிலேயே வாழ்ந்தவர். என் எழுத்தை நண்பர்கள் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் எழுத்தோடு ஒப்பிடுவது வழக்கம்.  ஆனால் இரண்டு பேருக்கும் … Read more

அவ்ட்ஸைடர் பற்றி…

பொதுவாக எனக்குப் பணம் அனுப்புபவர்களின் பெயரை நான் வெளியிடுவது இல்லை.  அது சம்பந்தப்பட்டவர்களுக்கு இடைஞ்சலைத் தருகிறது என்பதால்.  ஆனால் என் அன்புக்குரிய நண்பர் நேசராஜ் செல்வத்தின் (கிருஷ்ணகிரி) இந்தக் குரல் செய்தியை அப்படியே உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.  ஏனென்றால், நான் உண்மையிலேயே சொல்கிறேன், த அவ்ட்ஸைடர் தொடர் அளவுக்கு உணர்வுபூர்வமாக நான் வேறு எதையுமே எழுதியதில்லை.  ஸீரோ டிகிரி மட்டுமே விதிவிலக்கு.  ஆக, அவ்ட்ஸைடரை யாரும் படிக்கிறார்களா, அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து … Read more