யூதாஸ் (5)

150 சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்த பாஸ்டன் பாதிரியின் முழுப் பெயர் ஜான் கேகன்.  அவர் சிறையில் சக கைதியால் கழுத்தில் மிதித்துக் கொல்லப்பட்டார்.  இது பற்றி டாக் பேசுகிறார். ”(எனக்கு) மாசிமோ ஸ்டான்ஸியோனேவின் குழந்தைகள் படுகொலை ஓவியம்தான் நினைவுக்கு வருகிறது. அவ்வோவியத்தில் ஒருவன் இரக்கமற்று குழந்தையின் மீது வாளைச் சொருக கை உயர்த்தி இருப்பான். குழந்தையின் தாய் போராடிக் கொண்டிருப்பாள். தரையில் ஏற்கனவே வெட்டப்பட்ட குழந்தைகளின் பிஞ்சு மணிக்கட்டுகள் கிடக்கும். வேதனையில் கதறிக் கொண்டிருப்பார்கள். அப்படித்தான் … Read more

the outsider – 4

இந்த ஜூன் தொடக்கத்திலிருந்தே நம் இணைய தளத்தில் எதுவும் எழுதவில்லை.  காரணம், ஆவணப் படத்தின் படப்பிடிப்பு.  இரண்டு ஷெட்யூல்கள் முடிந்தன.  முதல் ஷெட்யூல் சென்னை.  இரண்டாவது ஷெட்யூல் நாகூர், தஞ்சாவூர்.  நாகூர் நான்கு நாட்கள்.  தஞ்சாவூர் ஒருநாள்.  முதல் ஷெட்யூல் ரஷ் நான்கு மணி நேரம்.  அதைத் தமிழ் சினிமாவின் லெஜண்ட் ஒருவர் நேற்று பார்த்தார்.  நான் செல்ல முடியவில்லை.  நாகூரிலும் – குறிப்பாக தஞ்சாவூரிலும் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்ததால் வேர்த்துக் கொட்டி வேர்த்துக் கொட்டி … Read more

க்ளப் ஹவுஸ் கதை நேரத்தில் என் வாசிப்பு

ஃபாத்திமா பாபு கடந்த 298 நாட்களாகத் தொடர்ந்து க்ளப் ஹவுஸில் தமிழ்ச் சிறுகதைகளை வாசித்து வருகிறார். சாதனை என்ற சொல்லெல்லாம் சாதாரணம். அசாத்தியமான விஷயம். நாளை மறுநாள் சனிக்கிழமை 300ஆவது நாள். அந்த நாளைக் கொண்டாடும் விதத்தில் ”உங்கள் கதையை நீங்களே படித்தால் என்ன?” என்று கேட்டார். அது அவரது பெருந்தன்மையும் அன்பும். கரும்பு தின்னக் கூலியா? விரைவில் வெளிவர இருக்கும் நான்தான் ஔரங்ஸேப் நாவலில் பாபரின் பேருரை ஒன்று வருகிறது. அதைப் படிக்கலாம் என்று முடிவு … Read more

the outsider – 3

எத்தனை பேர் சீலே வருவதற்கு ஆர்வப்பட்டு எழுதினார்கள் என்று கேட்டார் நண்பர்.  ஒத்தர் கூட இல்லை என்றேன்.  ”நீங்கள் எழுதியிருக்கும் லட்சணத்தைப் பார்த்தால் வர நினைப்பவர்களுக்குக் கூட அச்சம் வந்து விடும், இப்படியா பயமுறுத்துவது, எவன் வருவான்?” என்று கேட்டிருக்கிறார் ப்ரஸன்னா.  ப்ரஸன்னா அமெரிக்காவில் இருப்பவர்.  சென்னையிலிருந்து கடலூர் போவது போல் சாந்த்தியாகோ கிளம்பிப் போகலாம்.  சீலேயர்கள் அமெரிக்கர்களை தங்கத் தட்டில் வைத்துத் தாங்குகிறார்கள்.  அமெரிக்கா ஒரு நரகம் என்று சீலேயர்களுக்குத் தெரியாது.  சீலேயின் வறுமை அவர்களை … Read more