அரூபம்: சிறுகதை: காயத்ரி ஆர்.

காயத்ரி எழுதியுள்ள நான்காவது சிறுகதை. இந்த மாதத்திலேயே தொகுப்பு வந்து விடும் போல் இருக்கிறது. பப்ளிஷர் யார்? உயிர்மையா, காலச்சுவடா? விஷ்ணுபுரம் பதிப்பகமா? அப்பாம்மை, நுண்மை, பாதி கதை ஆகிய மூன்றையும் விட அதிகமாக அரூபம் எனக்குப் பிடித்திருந்தது. நுண்மை என்ற கதை பலருக்கும் பிடிக்கவில்லை. பலருக்குப் பிடித்திருந்தது. முதல் பலர் ஆண்களாக இருந்ததும் அடுத்த பலர் பெண்களாக இருந்ததும் தற்செயல் என்று எனக்குத் தோன்றவில்லை. அது இந்த சமூகத்தின் பிரதிபலிப்பு. ‘கலெக்டர் வூட்டுப் பொண்ணு’ என்றாலும் … Read more

ஜீஜி: நெடுங்கதை : ப்ரஸன்னா

கதைக்குள் செல்வதற்கு முன்னால் ப்ரஸன்னா பற்றி ஒரு வார்த்தை: இன்று காலை எழுந்து பூனைகளுக்கு உணவு கொடுத்து விட்டு, இரவு உறங்கச் செல்லுமுன் அணைத்து விட்டுப் போயிருந்த கைபேசியைத் திறந்தேன். ப்ரஸன்னாவின் கடிதம். கூடவே ஒரு கதையும் இருந்தது. நெடுங்கதை. எழுந்து இன்னும் பல் கூடத் துலக்கியிருக்கவில்லை. கதை அப்படியே என்னை உள்ளிழுத்துக் கொண்டது. ப்ரஸன்னாவை எனக்கு ஒரு வருடமாகத் தெரியும். ஆரம்பத்தில் என் கட்டுரைகளைக் கடுமையாக விமர்சித்து எழுதுவார். ஆனாலும் இவரிடம் ‘தீ’ இருக்கிறது என்பதை … Read more

Privacy Policy

Last updated: January 23, 2022 This Privacy Policy describes Our policies and procedures on the collection, use and disclosure of Your information when You use the Service and tells You about Your privacy rights and how the law protects You. Interpretation and Definitions Interpretation The words of which the initial letter is capitalized have meanings … Read more

கருட கமனா ரிஷப வாஹனா இயக்குனரிடமிருந்து ஒரு கடிதம்

நேற்று இரவு (15.1.2022) பத்து மணிக்கு கருட கமனா ரிஷப வாஹனா படத்தைப் பற்றிய என் மதிப்புரையை எழுதி பதிவேற்றி விட்டுப் படுத்தேன். காலையில் பார்த்தால் இயக்குனர் ராஜ் பி. ஷெட்டியிடமிருந்து இப்படி ஒரு கடிதம். இதுவுமே கூட தமிழில் நிகழ்வது வெகு அரிது. கேரளத்தில் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறார்கள் என்று நான் அடிக்கடி எழுதுவது வழக்கம். ஆனால் கர்னாடகாவில் எழுத்தாளர்கள்தான் சமூக வெளியில் உச்ச நிலையில் இருப்பவர்கள். சிவராம் காரந்த்துக்கும், யு.ஆர். அனந்தமூர்த்திக்கும், எஸ்.எல். பைரப்பாவுக்கும் கன்னடத்தில் … Read more

கருட கமனா ரிஷப வாஹனா மற்றும் ஒரு மொட்டையின் கதை : கன்னட சினிமாவின் பெரும் பாய்ச்சல்

நாம் கேள்வியே பட்டிருக்காத – எழுத்து உரு கூட இல்லாத – ஏதோ ஒரு ஆதிவாசி மொழியில் எடுக்கப்பட்ட முதல் சினிமா எப்படி இருக்கும்?  நேற்று வரை அப்படித்தான் நான் கன்னட சினிமா பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.  பி.வி. காரந்த் இயக்கத்தில் வெளிவந்த சோமன துடி (1975), கிரிஷ் காஸரவள்ளியின் கட ஷ்ரத்தா (1977), தபரண கதெ (1986)  போன்ற கிளாஸிக்குகள் விதிவிலக்கு.  அப்படிப்பட்ட விதிவிலக்குகள் எந்த மொழியிலும் எந்த நேரத்திலும் தன்னிச்சையாக நிகழலாம்.  தெலுங்கு சினிமா … Read more