ஜெயமோகனின் கடிதம்

நேற்று வாட்ஸப்பில் ஜெயமோகனின் கடிதம் ஒன்றை காயத்ரி எனக்கு அனுப்பியிருந்தாள். அவளுடைய அப்பாம்மை கதை பற்றி. சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால், ஜெயமோகன் மற்றும் என்னுடைய ரசனை இரண்டும் இருவேறு துருவம் என்பது ஊர் அறிந்த விஷயம். நான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் மரியோ பர்கஸ் யோசாவை அவருக்குப் பிடிக்காது. இப்படி ஆயிரம் உதாரணம் சொல்லலாம். ஆனால் அவ்வப்போது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதும் உண்டு. காயத்ரியின் அப்பாம்மை கதை ஜெயமோகனுக்குப் பிடித்திருந்தது என்று அறிந்து மகிழ்ச்சி. … Read more

மஞ்சள் விநாயகர்

மனிதனின் கற்பனை உச்சங்களில் ஒன்று, விநாயகர். எப்போதும் போல் நேற்று இரவும் பத்து மணிக்கு நான் உறங்கப் போய் விட்டேன். நள்ளிரவு ஒரு மணிக்கும் அவந்திகாவின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. காலையில் எழுந்து பார்த்தால் ஹாலில் இந்த மஞ்சள் விநாயகர். எங்கள் வீட்டில் இரண்டு பால்கனிகள் உள்ளன. ஒன்றில் பூச்செடிகள். இன்னொன்றில் மூலிகை. என்னவோ தெரியவில்லை, காய்கறிகளே வருவதில்லை. பூந்தோட்டத்தில் பறித்தது அந்த இரண்டு பூக்களும். கண்கள் என்ன என்றேன். மிளகு என்றாள்.

பாலகிருஷ்ணனிடமிருந்து பாரதக் கதைகள்…

விவரங்கள் விளம்பரத்திலேயே இருக்கின்றன. பாலகிருஷ்ணன் ஒரு புகழ் பெற்ற நாடகக் கலைஞர். அதே சமயம் இதிகாசங்களை விளக்குவதில் மாஸ்டர். அவருடைய முந்தைய தொடர் சொற்பொழிவையும் கேட்டிருக்கிறேன். பிரமாதமாக இருந்தது. இணைந்து கொள்ளுங்கள். ஐந்து உரைகளுக்கு 1000 ரூ. தான். விவரம் இதில். நானும் பணம் கட்டி விட்டேன். உரை ஆங்கிலத்தில் இருக்கும். புரியும் விதமான ஆங்கிலம்தான். பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆங்கிலம் அல்ல.

அவதூறுக்கு எதிர்வினை (19): வா.மு. கோமு

யாரு பதிவு போட்டா என்னான்ற காலத்துல இருந்து இவன் தான் போட்டான்னு உடனே தெரிஞ்சிக்கிற காலத்துல இருக்கோம்ல! ஆமா கோமு! சின்னப்பய அவன்.. வுடுங்கோ! இப்பவும் என் நட்புல பழகின நண்பரும் உங்களை எழுதிட்டே இருக்காப்டி.. ஏற்கனவே ஜெயமோகனையும் எழுதி ஓய்சிட்டாப்டி! புதுசா உங்களை பிடிச்சிட்டாப்டி! அடுத்த எழுத்தாளனை திட்டுறக்கெ நேரம் ஒதுக்கி இப்பிடி முக்கி முக்கி பதிவு போடுறாங்களே.. அவிக (இலக்கிய) எழுத்துக்கு நம்ம எழுத்துல ஒரு நேர்மை இருக்குன்னு புரிஞ்சிட்ட நாள் இன்னிக்கி தான்!