ஷா உமரி வசனங்கள்

நேற்று சீனிக்கு ஒரு நண்பர் ஒரு செய்தி அனுப்பியிருந்தார்.  சாரு பாராட்டியவர்களிலேயே அவரை முதுகில் குத்தாத ஒரே ஆள் நீர்தான் என்று. சீனி விஷயத்தில் அது ஒருபோதும் நடவாது.  சீனியை எனக்கு நன்றாகத் தெரியும்.  சீனி மட்டும் அல்ல.  அதுபோல் இன்னும் ஓரிருவர் கூட உள்ளனர்.  காயத்ரி.  ஒருவரைப் பிரிய நேர்ந்தால் கூட மௌனம் காப்பாளே தவிர முதுகில் குத்தும் பண்பெல்லாம் அவளுக்கு சுத்தமாகத் தெரியாது.  யாரையும் மன்னிக்கும் மாண்பு கொண்டவள்.  அவள் அளவுக்கு மன்னிக்கும் தன்மை … Read more

நான்தான் ஔரங்கசீப்…: ஓர் அறிவிப்பு

ஔரங்கசீப் நாவலுக்கு நான் எதிர்பாராத அளவுக்கு ஆதரவு குவிகிறது. நிச்சயமாக இந்த அளவுக்கு எல்லோருக்கும் பிடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், இந்த வகைமையில் நான் இதுவரை எழுதியதில்லை. தன்னம்பிக்கை இல்லாமலேயேதான் எழுதினேன். எல்லோருக்கும் பிடித்தது மகிழ்ச்சி. அதை விட ஆச்சரியம், எல்லோரும் தினம் ஒரு அத்தியாயம் வேண்டும் என்று கேட்கிறார்கள். எழுதலாம்தான். தினம் 1000 வார்த்தைகள் எழுத முடியாதா என்ன? ஆனால் பயமாக இருக்கிறது. சமயங்களில் ஆய்வுக்காக நாள் கணக்கில் படிக்க வேண்டியிருக்கிறது. இப்போது பாரதத்தில் … Read more

புத்தகம் அனுப்புபவர்கள் ஏன் இப்படி டார்ச்சர் செய்கிறார்கள்?

இன்று என் நண்பர் பா. வெங்கடேசனின் புத்தகமான கதையும் புனைவும் தபாலில் வந்தது.  புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்.  வெங்கடேசனோடு த. ராஜன் உரையாடியிருக்கிறார்.  இப்படிப்பட்ட உரையாடல்கள் நூல்கள் தமிழில் வெகு அபூர்வம்.  சுந்தர ராமசாமியோடு சிலர் உரையாடியிருக்கிறார்கள்.  நூலாக வந்துள்ளன.  மௌனியோடு பலரும் உரையாடியிருக்கிறார்கள்.  நூல் வந்ததா எனத் தெரியவில்லை.  படிகள், நிறப்பிரிகை போன்ற பத்திரிகைகள் வந்த காலகட்டத்தில் அப்பத்திரிகைகள் பல உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றன.  புத்தகங்கள் உண்டா எனத் தெரியவில்லை.  வெங்கடேசன் ஒரு புனைவிலக்கியவாதி என்பது … Read more

சார்பட்டா பரம்பரை (தொடர்ச்சி)

(நேற்று எழுதிய சார்பட்டா விமர்சனத்தின் தொடர்ச்சியாக இதை வாசிக்கவும்) சார்பட்டா பரம்பரையை நேற்றும் இன்னொரு முறை பார்த்தேன்.  இப்படி ஒரே படத்தை அடுத்தடுத்த நாளில் பார்த்தது இதுவரை நடந்ததில்லை.  அதுவே இந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றி.  இரண்டாவது முறையாகப் பார்த்த போதுதான் படத்துக்கு நேற்று நான் எழுதிய சிறிய மதிப்புரை அதன் சிறப்புக்கு நியாயம் செய்ததாகாது எனத் தோன்றியது. சார்பட்டா படத்தைப் பார்க்கும் அத்தனை பேரையும் ஈர்த்த ஒரு பாத்திரம்: டான்சிங் ரோஸ்.  தமிழ் சினிமாவில் … Read more

கனவு, கேப்பச்சினோ, கொஞ்சம் சாட்டிங்…

அன்புள்ள சாரு sirவணக்கம். நீங்கள் எழுதிய கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங் என்ற நூலை சென்ற வாரம் முழுக்கப் படித்தேன். வேண்டுமென்றே தான் மெதுவாக படித்தேன். அற்புதமான அனுபவம். . உங்களுடன் நேரில் சந்தித்துப் பேசியது போல எளிமையான சுவாரஸ்யமான எழுத்து. படித்த ஒவ்வொரு பகுதியும் ஒரு தகவல் சுரங்கம்.  It was quite an experience Charu sir. There were instances I could relate to so much. I did smile, … Read more