கவி வாக்கு

(இந்தக் கட்டுரையை பிரதியெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.  உங்கள் வாழ்க்கையை சீரமைக்க இது ஒரு User’s Manualஆகப் பயன்படக்கூடும்) கவி வாக்கு பலிக்காமல் போகாது என்பார்கள்.  மொட்ஸார்ட்டின் கடைசிப் படைப்பு ரெக்வீம்.  இது ஒரு Choral படைப்பு.  சிம்ஃபனி என்பது இசைக்கருவிகளால் உருவாகும் படைப்பு.  கோரல் என்பது குரல்களால் ஆனது.  துணைக்கு இசைக்கருவிகள்.   ரெக்வீமை மொட்ஸார்ட்டினால் முடிக்க முடியவில்லை.  இறந்து விடுகிறார்.  என்னுடைய கவிதை ரெக்வீமே என் கடைசி கவிதையாக ஆகி விட்டது.  அதற்கு மேல் எழுதிய ரெண்டு … Read more

Anything for you…

பெண்களேநான் ஆண்ஆனால்உங்களுக்கான ஒரு கெரில்லாப் போராளி அந்த வகையில்உங்களுக்கோர் ஆலோசனைஎனிதிங் ஃபார் யூசொல்லாதீர்கள்அது வெறும் சொல்அர்த்தமற்ற சொல் அனுபவத்தில் சொல்கிறேன்எழுபது வயதில் முதல் முத்தம்அதற்கு முன்?பெண்கள் வந்தார்கள் சென்றார்கள்ஒவ்வொருத்தியும் சொன்னாள்எனிதிங் ஃபார் யூசொன்னபடி செய்தார்கள்உயிரையும் கொடுப்பார்கள்ஆனால் முத்தம்?அவர்களின் பட்டியலில் இல்லை எனக்கோர் கனவு இருந்ததுபாரிஸின் சென் நதிக்கரையில்என் காதலியோடு முத்தத்தில்மூழ்க வேண்டும்கனவுக்குக் காரணம்ரேப் கேபிட்டல் ஆஃப் தெ வேர்ல்ட்தில்லிஎன்பது போல்பாரிஸ் இவ்வுலகின்முத்தத்தின் தலைநகரம்அப்போது ஒரு காதலி இருந்தாள்எனிதிங் ஃபார் யூஆனால் முத்தம் தடைஅவளும் நானும் பாரிஸ் சென்றோம் … Read more

கவிதையை நிறுத்தும் எளிய வழி

என்னைப் பற்றியே எழுதுகிறாய்என் வார்த்தைகளைஎன் காலை மௌனத்தைஅந்த மௌனம் உனக்குத் தரும் துயரத்தைஎன் பூனைகளின் விளையாட்டைஎல்லாவற்றையும் கவிதையாக்குகிறாய் எப்போது ஓய்வெடுப்பாய், கவிஞனே?எப்போதுஉன் கணினியில்தட்டச்சு செய்வதை நிறுத்தி விட்டுஉன் மேசையை விட்டு எழுந்துஉனக்குப் பிடித்தமான காஃபியைக் குடித்தபடிஜன்னல் வழியே மேகங்களைப் பார்ப்பாய்?அல்லதுநீ கவிதையெழுதும் போதெல்லாம்ஜன்னலில் வந்து எட்டிப் பார்த்துச் செல்லும்உனக்குப் பிரியமான மைனாவுடன்பேசுவாய்? ‘நீயே கவிதைஅதனால்நீ பேசுவதெல்லாம் கவிதையாகிறது’என்கிறாய்பல நூறு முறைபல நூறு கவிகளால்சொல்லப்பட்ட தேய்மொழி ‘சரி, கவிதையை நிறுத்தவொருஎளிய வழியிருக்கிறது அன்பே!பயமுறுத்தும் அளவுக்கு எளிதுகாலையில் என்ன சாப்பிட்டாய்?மதியம் … Read more

இறைவியின் முத்தம்

இறைவி கூறினாள்:நம்மைப் பற்றி எழுதாதேஅந்த வார்த்தைகள் காற்றில் பரவும் இலைகளைப் போலஎன் இதயத்தைத் தொட்டு தடுத்து நிறுத்த முயன்றன.‘உன் நண்பர்கள் உன்னைப் பரிகசிக்கிறார்கள்,அதை நான் விரும்பவில்லை’ என்றாள்.ஆனால் இறைவியேகாதல் நதி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்அதைத் தடுத்தால் வெள்ளமாக மாறும். அதற்குப் பதிலாக,நான் ஒரு கதை சொல்ல விரும்புகிறேன்—ஒரு பழங்கதை, நூறு முறை சொல்லப்பட்டது,ஆனால்அதன் ஆழத்தில் மறைந்திருந்தஒரு ரகசியத்தை விட்டுவிட்டேன்.அது இப்போது வெளிவர வேண்டும்,ஏனெனில் காதல் ஒரு விதை;அது மண்ணில் புதைந்தாலும்,மழைக்காகக் காத்திருந்து முளைக்கும்.இந்தக் கதை நம்ப முடியாததுஆனால் … Read more

Requiemஇல் விடுபட்டது

நண்ப,உனக்கு என் தோழிபச்சைக்கண் பேரழகியைத் தெரியும்அவள் என் அருகில் கூட அல்ல,என் மடிமீது அமர்ந்தே பேசுவாள்ஆனால்அவள் என் எழுத்தைப் படித்ததில்லைபடி என்றேன்காலக்கெடுவும் வைத்தேன்அப்போதும் படிக்கவில்லைநீங்கி விட்டேன் அவளைஆதலனினால், புரிந்து கொள்உன்னை என்னருகேஅமர்ந்து கொள் எனஅழைத்ததுஉன்னை என் சிறந்த மாணாக்கனெனநினைத்தனால் மட்டுமேவேறெந்தக் காரணமும் இல்லை

Requiem

1 நண்ப,உனை அழைத்தேன்ஒரு பயணியின் குரலில்நதியின் கரையில் அமர்ந்துஞானத்தின் புதிர்களைப் பகிர்ந்து கொள்ள பிஸி என்றாய்சில தினங்கள் சென்று அழைத்தேன்சற்றே குற்ற உணர்வுடன்நானே அழைக்கிறேனென்றாய்காத்திருந்தேன், காஃபி குடித்தபடிசுவர்களின் விரிசல்களை எண்ணிக்கொண்டுநீ வரவில்லை, மனதில் பதிந்து வைத்தேன் தற்செயலாய் ஒரு மாலையில்நண்பர்களின் சந்திப்பில்உனைக் கண்டேன்அருகில் அமர அழைத்தேன்நெருக்கியடித்து அமர்வது அசௌகர்யமெனதூரத்தில் அமர்ந்தாய்நீ என்னைத் தவிர்க்கவில்லை, தெரியும்ஆனால்,நீ வேறோர் உலகத்தில் இருக்கிறாய் அன்று அலெஹோ கார்ப்பெந்த்தியர்குறித்துப் பேசினேன்அது காற்றில் மிதந்துநிலவின் ஒளியில் கரைந்ததுகேட்காத தொலைவில் நீஇருந்தாய்அதற்கு முன் பேசியதில்லைஇனி பேசப் … Read more