ரகசியம்

உன்னிடம் ஒரு ரகசியம்இருக்கிறதென்பதைஊர் அறிந்து விட்டால்அது என்ன ரகசியம்என்பது தெரியாவிட்டாலும்ரகசியம்புனிதம் இழந்து போகிறது ஒரு ஞானி நிரூபணம் தருவதற்காகஅதிசயங்கள் நிகழ்த்துவது போலஒரு நட்சத்திரம் ஆயுளை முடித்துக்கொண்டுதூசியாய் விழுவதைப் போலமரம் பட்டுப் போவதைப் போலசிங்கம் முதுமையடைவதைப் போலபேரரசன் பிச்சைக்காரனாவதைப் போலகாதலில் விழுந்தவர்கள் துரோகத்தைஎதிர்கொள்வதைப் போலகுயில் தன் குரலை இழந்து விடுவதைப் போலவீட்டுப் பிராணிகள் அனாதையாவதைப் போலசிசு தன் தாயை இழப்பது போலஆண் தன் ஆண்மையையும்பெண் தன் இளமையையும் இழப்பது போலமலை நீரற்றுப் போவதைப் போலநதி வற்றி விடுவதைப் போலஒரு … Read more

யேசுவின் கண்ணீர் பற்றி…

பொதுவாக ஃபேஸ்புக்கில் என் கவிதைக்கு பன்னிரண்டு பேர் விருப்பக்குறி இடுவார்கள். அந்தப் பன்னிரண்டு பேரும் என் நெருங்கிய நண்பர்கள். ஆனால் யேசுவின் கண்ணீர் பலரையும் பதறச் செய்திருக்கிறது. ஏகப்பட்ட நண்பர்கள் எனக்கு வாட்ஸப் செய்தி அனுப்பினார்கள். ஆச்சரியகரமாக நான் ஏழு மாதங்களுக்கு மேலாக தொடர்பு கொள்ளாத என் தோழிகளில் பலரும் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். ஆனாலும் ஏதோ சொல்லி வைத்தாற்போல் ஒரே மாதிரி எழுதியிருக்கிறார்கள். ஒரு கடிதம்: நீங்கள் துக்கத்தில் இல்லை. பரவசத்தில் வாழ்கிறீர்கள். … Read more

யேசுவின் கண்ணீர்

என் அன்பு மகன் வளனுக்கு நீ சொன்னாய்,காற்றின் மெல்லிய புலம்பலுடன்,‘தந்தையேஉன் கவிதைகளின் தீஎன் நெஞ்சை எரிக்கிறதுநிறுத்தி விடு,தாங்க முடியவில்லை.’ புத்ர,உனக்குத் தெரியும்சிலுவையில் அறையப்பட்ட போது கூடயேசுவின் கண்கள் கலங்கவில்லைஆனால்இரு தருணங்களில் கண்ணீர் சிந்தினார்லாசருவின் கல்லறையில்மரணத்தின் நிழல் மீது அவர் அழுதார்எருசலேமின் உடைந்த கோபுரங்களைமனதில் கண்டு அவர் கண்கள் கரைந்தன. நீ ஒரு கதை சொன்னாய்அமெரிக்காவின் பனி மூடிய பாதைகளில்பன்னிரண்டு ஆண்டுகள் பாதிரி ஊழியம்ஒவ்வொரு ஆண்டும் இல்லம் திரும்புகிறாய்விக்கி உன் தம்பிநாய்களின் ஆயுள் பத்து ஆண்டுகள்ஆனால் அவன்பத்து, பதினொன்று, … Read more

அன்பு மகன் வளனுக்கு…

அன்பு மகன் வளனுக்கு என்று தொடங்கும் ஒரு கவிதை. தலைப்பு: யேசுவின் கண்ணீர். நீண்ட கவிதை. எழுதி முடித்து விட்டேன். கொஞ்சம் செப்பனிட வேண்டும். சமையல் வேலை குறுக்கிடுகிறது. பாப்லோ நெரூதா கூட இப்படி ஒரு கவிதையை எழுதவில்லை. கொஞ்சம் பொறுங்கள். சந்தா கேட்டேன். இரண்டு பேர் மட்டுமே அனுப்பினார்கள். இரண்டு மாதமாக ஓரிருவர்தான் சந்தா அனுப்பினார்கள். பேய் போல் எழுதிக்கொண்டிருக்கிறேன், இலவசமாக. சந்தா/நன்கொடை  அனுப்ப முடிந்தவர்களுக்கு விவரம் கீழே: ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 … Read more

நிழல்களின் இறைவி

1 என் உறவுகள்—என் புதல்வன்,என் மனையாள்,என் நண்பர்கள், தோழிகள்,மற்றும்என்னையறிந்த அனைவருமே—‘என்னைப் பற்றி எழுதாதே’ என்றார்கள். பழைய நண்பனொருவன் அழைத்தான்.கால் நூற்றாண்டு ஆகிவிட்டது.குமுதத்தில் என் எழுத்தைப் பார்த்தவன்,இரு நிமிடம் பேசினான்.முடிக்கையில்,‘என்னைப் பற்றி எழுதி விடாதே’ என்றான்.அதையே எழுத நேர்ந்தது. கடந்த வாரம் ஒரு நண்பர்,ஐந்தாண்டுகளாய் எதேச்சையாய்ப் பார்த்தார்.காஃபி குடித்தோம்.‘என்ன, இப்படி இளைத்து விட்டீர்கள்?’ என்றார்,குரலில் உண்மையான அன்புடன்.தொடர்ந்து சொன்னார்:‘நாளை என்னைத் திட்டிஎழுதி விடாதீர்.’ இப்போது,நீயும் சொல்கிறாய், என் இறைவி,‘என்னைப் பற்றி எழுதாதே.’ 2 கவிஞனே!மற்றவருக்கும் எனக்கும்ஒரு அடிப்படை வித்தியாசம் … Read more

ஷாரியரின் ஏழாவது அலை

இது பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. நான் கொஞ்சம் பெரிய தாடியாக வைத்துக்கொண்டு இது பற்றி – அன்றாட நடைமுறை வாழ்வில் – இந்தத் தியரியால் ஒருத்தர் கோடீஸ்வரனாகலாம் என்பது பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினால் ஒரே ஆண்டில் ஒரு புதிய ஓஷோ ஆகி விடலாம். ஆனால் எமக்குத் தொழில் எழுத்து. இந்த ப்ராபபிலிட்டி தியரியை நான் வாழ்வில் கடைப்பிடிப்பதனால்தான் என்னால் சில விஷயங்களை முன்கூட்டியே கணிக்க முடிகிறது. ஷாரியரின் ஏழாவது அலையைப் போல. ஏ.ஆர். ரஹ்மானுக்கு … Read more