பூச்சி 93

ஒரு பெயரை விட்டு விட்டேன்.  இளம் எழுத்தாளர்.  முகநூலில் அவர் எழுதுவதைப் படித்திருக்கிறேன்.  பிடிக்கும்.  தன் சிறுகதையைத் தொகுதியைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.  ஒரு ஆண்டு ஆனது படிக்க.  அதுவரை தொடர்ந்து கேட்டபடியே இருந்தார்.  இடையில் என் நண்பர் ஒருவரும் அதைப் படிக்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருந்தார்.  படித்தேன்.  அவர் எந்த மக்களைப் பற்றி எழுதியிருந்தாரோ அதுதான் தமிழில் அவர்களைப் பற்றி எழுதப்பட்ட முதல் பதிவு.  நல்ல இலக்கியத் தரம் வாய்ந்ததாகவும் இருந்தது.  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய … Read more

To You Through Me (2)

சி.சு. செல்லப்பாவின் உறவினரான பாலசுப்ரமணியன் என்னுடைய மூத்த நண்பர்.  பெங்களூரில் இருக்கிறார்.  அவர்தான் இந்த இணைப்பை இன்று அனுப்பினார்.  வருடத்தைப் பாருங்கள்.  உடுமலை டாட் காமில் நகுலன் புத்தகங்கள் கிடைக்கின்றன என்றும் தகவல் அனுப்பியிருக்கிறார்.  நற்றிணையிலும் காலச்சுவடுவிலும் நகுலனின் புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.  இணையத்திலும் சிலது கிடைக்கலாம்.  சரியாகத் தெரியவில்லை.  (கோட்ட விளையில் நடந்த ‘வானவில் இலக்கிய வட்டம்’ கருத்தரங்கில் மார்ச் 28, 1999 அன்று வாசிக்கப்பட்ட கட்டுரை) வேத மனவெளியில் அலைவுறுதல் மேலோட்டமான பார்வையில் நகுலனின் கதைகள் … Read more

ஒரு குட்டி விவாதம்

முகநூலில் கண்ட சில விவாதங்கள்: அராத்து: சாரு நிவேதிதா , ஹாருகி முராகாமி பற்றி பீலா விடுபவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் “அத்யந்த நண்பர்கள்” எனக் குறிப்பிட்டு அவர்களும் என் எழுத்தைப் பற்றி எழுதாமல் இப்படித்  தான் செய்கிறார்கள் என்று எழுதி இருந்தார்.கார்ல் மார்க்ஸ் அதை ஒட்டி , சாருவின் தற்கொலைப் படை என்று சொல்லிக்கொள்பவர்கள் சாருவின் ஆக்கங்களைப் பற்றி “உருப்படியாஹ” எதுவும் எழுதவில்லை என அங்காலாய்த்து இருந்தார். சாருவும் இதைத்தானே சொல்லி … Read more

zoom meeting 31 may

மே 31, ஞாயிறு காலை இந்திய நேரம் ஆறு மணிக்கு Zoom மூலமான இலக்கியச் சந்திப்பு பற்றி குறித்து வைத்துக் கொண்டீர்களா?  நண்பர் மனோகர் சொன்னார், நூறு பேர்தான் கலந்து கொள்ள முடியும் என்ற கணக்கெல்லாம் இல்லை, எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்று.  மாயா இலக்கிய வட்டத்தில் நூறு என வரையறை செய்திருக்கலாம்.  நாம் எத்தனை பேரை உள்ளடக்கலாம் என்று சதீஷ்வரைக் கேட்டு எழுதுகிறேன்.  சில நண்பர்கள் சதீஷ்வரைத் தொடர்பு கொண்டதாக அறிந்தேன்.  நல்லது.  … Read more

பூச்சி 62

காயத்ரி ஆசைப்பட்டதும் அவள் வீட்டுக்குக் கடவுள் அனுப்பி வைத்த பூனை பற்றிய ஒரு முக்கியமான விஷயம், அது ஒரு காலிகோ பூனை.  காலிகோ பூனைகள் அதிர்ஷ்டமானவை என்பது ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலவும் நம்பிக்கை. காலிகோ பூனைகள் மஞ்சள், கறுப்பு, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் இருக்கும்.  அநேகமாக காலிகோ பூனைகள் பெண் பூனைகளாகவே இருக்கும்.  எங்கள் வீட்டு ஸிஸ்ஸி அதன் முதல் பிரசவத்தில் இரண்டு குட்டிகளைப் போட்டு – அப்போது அது எங்கள் … Read more

பூச்சி 60

இப்போதெல்லாம் ஒரு புதிய வழக்கம் உண்டாகி இருக்கிறது.  ஆனால் அதற்கு முன்னால் வேறொரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.  என் நண்பரின் மகன் – அவன் எனக்கும் நண்பன் தான் – அங்கிள், தமிழ்ல எத்தனை ரைட்டர்ஸ் இருப்பிங்க என்று கேட்டான்.  வாஸ்தவத்தில் அவன் என்னைக் கேட்ட கேள்விகளையெல்லாம் மறந்து விடாமல் தொகுத்திருந்தால் அராத்துவின் ஆழி கதைகளைப் போல் கேஷவின் கேள்விகள் என்று ஒரு புத்தகமே கொண்டு வந்திருப்பேன்.  தோன்றாமல் போயிற்று.  அத்தனை கேள்விகள் கேட்டிருக்கிறான்.  அவனுடைய நண்பனும் … Read more