எதைப் பெற்றோம்? எதைத் தருகிறோம்? – 2

இதே தலைப்பில் உள்ள முந்தைய கட்டுரையைப் படித்து விட்டு இதைத் தொடரவும். முந்தைய கட்டுரை: எதைப் பெற்றோம்? எதைத் தருகிறோம்? – Charu Nivedita (charuonline.com) அந்தக் கட்டுரையில் சொல்ல மறந்த இன்னொரு விஷயம் இது: சென்ற வாரமோ என்னவோ நான் சீலே செல்வது பற்றியும், அதற்குத் தேவையான பணம் பற்றியும் எழுதியிருந்தேன். ஒருவர் கூட – ஆம், ஒருவர் கூட – ஒரு ரூபாய் கூட அனுப்பவில்லை. ஆனால் நான் சில ஆண்டுகளுக்கு முன்பு சீலே … Read more

அற்புதம்

அஷோக் கோபால் தெ ப்ரிண்ட் பத்திரிகையில் என்னைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  அரூ பத்திரிகையில் அராத்து என்னைப் பற்றி எழுதியிருந்ததுதான் இதுவரை என்னைப் பற்றி வந்த கட்டுரைகளில் ஆகச் சிறந்தது என்று பல நண்பர்கள் அபிப்பிராயப்பட்டார்கள்.  என் கருத்தும் அதுவே.  ஆனால் என்னை கடந்த ஒரு மாதமாக மட்டுமே அறிந்த ஒரு ஆங்கில எழுத்தாளர் என்னைப் பற்றி இத்தனை விரிவாக எழுதியிருந்தது கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தேன்.  நம்பவே முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  இந்த … Read more

தில்லிப் பல்கலைக்கழகத்தில் ஓர் உரையாடல்

தில்லிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை மாணவர்கள் கார்வா(ங்) என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி மாதந்தோறும் பல சிந்தனையாளர்களுடன், எழுத்தாளர்களுடன், சினிமாத்துறையில் சாதனை புரிந்தவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, அந்த அமைப்பில் உரையாடியவர்கள் ஷபானா ஆஸ்மி, சஷி தாரூர். கார்வா(ங்) அமைப்பின் முக்கியஸ்தர் ஈஷான் ஷர்மா என்ற வரலாற்றுத்துறை மாணவர். அவரும் நானும் என்னுடைய நாவல் Conversations with Aurangzeb: A Novel பற்றி நேற்று ஸூம் மூலம் ஒரு மணி நேரம் உரையாடினோம். அந்த உரையாடல் வரும் இருபத்தெட்டாம் … Read more

விசாகப்பட்டினத்தில் ’ராஸ லீலா’…

நண்பரும் வாசகருமான அருண்குமார் விசாகப்பட்டினத்தில் வசிக்கிறார். அங்கே ஒரு சிறிய நூலகமும் ஒரு வாசகர் சங்கமும் உள்ளன. அங்கே மாதத்தில் இரண்டு முறை புத்தக மதிப்புரை தொடர்பான வாசகர் சந்திப்பு நடந்து வருகிறது. இதுவரை பதினோரு புத்தகங்களைப் பற்றி உரையாடியிருக்கிறார்கள். அந்த நூலகத்தின் உரிமையாளர் ஹரி இந்த முறை ஏதாவது ஒரு தமிழ்ப் புத்தகத்தைப் பற்றி மதிப்புரை செய்யலாமே என்கிறார். இதுவரை அங்கே ஆங்கிலம் மற்றும் தெலுங்கு நூல்கள் மட்டுமே மதிப்புரைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. சென்ற வாரம் நண்பர் … Read more

Conversations with Aurangzeb – ஒரு மதிப்புரை

Conversations with Aurangzeb நாவலுக்கு insta-வில் Shreeya எழுதிய மதிப்புரை கீழே. https://www.instagram.com/p/C3mDA-irKhJ/?igsh=MTc4MmM1YmI2Ng== படத்தின் மேல் சொடுக்கி, முழுத்திரையில் பார்க்கவும்.