பூச்சி – 31

    சில தினங்களுக்கு முன்பு ஒருநாள் என் பிரதான மாணவியை அழைத்து, “இதெல்லாம் உனக்கே நல்லா இருக்கா?  ஒரு முக்கியமான பொறுப்பில் இருக்கும் நீ இப்படிப் பொறுப்பில்லாமல் (ம்ஹும், நினைவில் வந்த ‘பொறுப்பில்லாமல்’ என்ற வார்த்தையை அப்படியே ரத்து செய்து விட்டு வேறொரு வார்த்தையைப் போட்டு ரொப்பினேன்) இப்படி விளையாட்டுத்தனமாக நடந்து கொள்ளலாமா?  இது சம்பந்தமாக திரு. கிருஷ்ணனும் இதே மாதிரிதான் நினைக்கிறார்.  நேற்று இது பற்றி இருவரும் ஒரு மணி நேரம் புலம்பிக் கொண்டிருந்தோம்” … Read more

பூச்சி – 16

நேற்று முழுநாளும் பூச்சியின் பக்கம் வரவில்லை.  வர முடியாமல் வேறு ஒரு முக்கியமான பணியில் ஈடுபட்டிருந்தேன்.  இப்போது கொஞ்சம் எழுதி விட்டு அந்த வேலையின் பக்கம் போக வேண்டும். எல்லா உயிர்களும் பிரம்மத்தின் அம்சங்களே.  ஒரு கூழாங்கல் கூட ஏதோ ஓர் அர்த்தத்தில்தான் இந்தப் பிரபஞ்சத்தின் ஓர் அம்சமாக நம் காலடியில் கிடக்கிறது.  இது பற்றிய ஒரு வசனத்தை ஃபெலினியின் La Strada (தெரு) படத்தில் காணலாம்.  அப்படியானால் கூழாங்கல்லும் வைரமும் ஒன்றா?  என்னைப் பொறுத்த வரை … Read more

உணவும் ஃபாஸிஸமும்

இஸ்கான் அமைப்பு (The International Society for Krishna Consciousness)  பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  தெரியவில்லையெனில் இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளலாம்.  என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள் சிலர் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.  மிக நெருங்கிய நண்பர்கள் என்றால், என் உயிருக்காகவும் என் வாழ்வுக்காகவும் நான் கடன்பட்டவர்கள் என்று பொருள்.  அவர்களோடு நான் இஸ்கான் பற்றி ஒருபோதும் விவாதித்ததில்லை.  விவாதிக்கப் போவதும் இல்லை.  பொதுவாகவே நெருக்கமான நண்பர்களோடு நான் முரண்படும் விஷயங்கள் பற்றி விவாதிப்பதில்லை என்ற பழக்கத்தை … Read more