தவறுக்கு மேல் தவறு

மேலே உள்ள இணைப்பில் உள்ளதைப் படித்து விட்டீர்களா?  இப்போது அதன் சொச்சத்தைப் படியுங்கள்.  பொதுவாக நான் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பேன் – நாம் ஒரு தவறைச் செய்து விட்டால் அதைத் தொடர்ந்து மேலும் மேலும் தவறு செய்கிறோம்.  சமயங்களில் அந்தத் தவறை சரி செய்வதற்காகவோ அல்லது அந்தத் தவறு தவறே அல்ல என்பதை நிரூபணம் செய்வதற்காகவோ அல்லது அபூர்வமாக மன்னிப்புக் கேட்பதற்காகவோ.  அது எப்படி, மன்னிப்புக் கேட்பதற்காகக் கூட தவறு செய்ய முடியும் என்று உங்களுக்குத் தோன்றலாம்.  ஒருமுறை … Read more

அமெரிக்க ஜனநாயகம்

நானும் ராகவனும் ராமசேஷனும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் வாக்கிங் முடித்து விட்டு காலைச் சிற்றுண்டிக்காக பூங்கா எதிரில் உள்ள தளிகை உணவகம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.  ஆனால் தளிகையில் உணவு நன்றாக இல்லை.  காப்பியோ படு மோசம்.  மஹா முத்ராவில் உணவு நன்றாக இருக்கும்.  ஆனால் எட்டு மணிக்குத்தான் திறப்பார்கள்.  மட்டுமல்லாமல் அங்கே ஆள் பற்றாக்குறை உண்டு.  செஃப் தாமதமாக வரும்.  சாப்பிட்டு முடித்து வெளியே வரவே ஒன்பதரை ஆகி விடும்.  அதாவது எட்டு மணிக்குப் போனால்.  … Read more

லூசிஃபர்

“என் மகள் காலை ஆறரை மணிக்கு ஏதோ ஒரு சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள்.  வேலைநாள் வேறு.  இதெல்லாம் சரியா என்று கேட்டு திட்டினேன்.  போப்பா, இதெல்லாம் உனக்குப் புரியாது, உன் வேலையைப் பார் என்று சொல்லிவிட்டாள்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் நண்பர்.  ஜிஓடி தானே பார்த்தாள் என்று கேட்டேன்.  இல்லை; ஏதோ கேம் என்று வந்தது என்றார்.  ”அட என்னங்க நீங்க, இந்த அளவுக்கு generation gap ஆகிப் போச்சு உங்களுக்கு?  கேம் ஆஃப் த்ரான்ஸ் என்றெல்லாம் … Read more

நாளை மாலை சாகித்ய அகாதமியில் என் உரை

நாளை மாலை சாகித்ய அகாதமி வளாகத்தில் சா. கந்தசாமியின் தமிழில் சுயசரித்திரங்கள் என்ற நூலைப் பற்றிய புத்தக விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகிறேன். அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து கொள்ளுங்கள். நீல பத்மநாபனைப் பற்றிய ஆவணப்படம் ஐந்து மணிக்குத் திரையிடப்படும். அதைத் தொடர்ந்து சா. கந்தசாமியின் நூல் பற்றிய என் உரை இருக்கும். சரியாக ஐந்தரை மணிக்கு என் உரை தொடங்கும். சா. கந்தசாமி என் ஆசான்களில் ஒருவர். அவரும் விழாவில் கலந்து கொள்வார். அவருடைய சாயாவனம் … Read more

இந்திரா பார்த்தசாரதியின் ஔரங்கசீப்

இயக்கம்: தியேட்டர் நிஷா பாலகிருஷ்ணன் பாலா என்று நண்பர்களால் அழைக்கப்படும் பாலகிருஷ்ணன் தில்லியின் புகழ்பெற்ற தேசிய நாடகப் பள்ளியிலும் பிறகு லண்டனின் Royal Court Theatre-இலும் நாடகம் பயின்றவர்.  பாலாவுக்கு நாடகம்தான் உயிர்மூச்சு.  அதில் எந்த சமரசத்துக்கும் இடம் கொடாமல் வாழ்பவர். இதன் பொருள், பலரைப் போல் சினிமாவுக்குப் போவதற்கான பாலமாக நாடகத்தைப் பயன்படுத்தாதவர். கடந்த 18 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கி நடித்திருப்பவர்.  பாலகிருஷ்ணன் பற்றி அறிந்திருக்கிறேனே தவிர அவர் நாடகங்களை இதுவரை நான் … Read more

ராஸ லீலா Collector’s copy – dedication

ராஸ லீலா கலெக்டர்’ஸ் காப்பி பற்றி எழுதியிருந்தேன். சுமார் 20 பேர் 10,000 ரூபாய் பணம் அனுப்பி முன்பதிவு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு பிரதியும் தனித்தனியாகத் தயாரிக்கப்படுவதால் ஒவ்வொரு பிரதியையும் தனித்தனி நண்பர்களுக்கு டெடிகேட் செய்ய முடியும். அப்படி டெடிகேட் செய்யும் போது யாருக்கு டெடிகேட் செய்கிறேனோ அவர்களைப் பற்றி சில வார்த்தைகள் எழுதலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். இதுவரை மூன்று பேருக்கு எழுதியிருக்கிறேன். அதை உங்களிடையே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றவர்களைப் பற்றியும் எழுதுவேன். பதற்றம் கொள்ள … Read more