the relevance of postmodern narrative

நாளை இரவு எட்டு மணிக்கு மேற்கண்ட தலைப்பில் ஸூம் மூலம் பேசுகிறேன். அது ஒரு மலையாள சேனல் என்பதால் ஆங்கிலத்தில் பேசும்படி சொன்னார்கள். அதனால் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருக்கும்.

ஹிந்து இலக்கிய விழா

26ஆம் தேதி லேடி ஆண்டாள் பள்ளியில் நடக்கும் ஹிந்து இலக்கிய விழாவில் மாலை ஐந்து மணிக்கு நந்தினி கிருஷ்ணனுடன் உரையாடுகிறேன். ஒரே நேரத்தில் இரண்டு அரங்குகளில் இரண்டு நிகழ்வுகள் இருக்கும். என் உரையாடல் ஹிந்து பெவிலியனில் நடக்கும். குழம்பி விட வேண்டாம். வருவதாக இருந்தால் பதிவு செய்யுங்கள். அரங்கம் ஐநூறு பேருக்கானது என்று கேள்விப்பட்டேன். வாருங்கள். பதிவு செய்வதற்கான படிவம் கீழே: https://www.thehindu.com/litfest/lfl-registration/

அந்நியனுடன் ஓர் உரையாடல்

அருஞ்சொல் இணைய இதழில் வெளிவந்த என் நேர்காணல் இப்போது நூல் வடிவில் வந்துள்ளது. இது கிட்டத்தட்ட என்னுடைய சுயசரிதை என்று சொல்லலாம். அருஞ்சொல் ஆசிரியர் சமஸ் அந்த அளவுக்கு இந்த நேர்காணலை ஒரு சுயசரிதம் அளவுக்கு எடுத்துக்கொண்டு வந்தார். அருஞ்சொல்லில் வந்த நேர்காணலை இந்த நூலில் வெகுவாக செப்பனிட்டிருக்கிறேன். முடிந்தால் வாங்கிப் படியுங்கள். http://tinyurl.com/Anniyunadun-Oru-Uraiyaadal

26 ஜனவரி: ஹிந்து இலக்கிய விழா

இன்று ஒரு இளம் நண்பனைச் சந்தித்தேன். மருத்துவ மாணவன். 26ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் ஹிந்து இலக்கிய விழாவில் நான் பேசுகிறேன், வந்து விடுங்கள் என்றேன். அப்படியா, எனக்குத் தெரியாதே என்றார். அப்படியானால் நீங்கள் என் இணையதளத்தைப் படிப்பதில்லையா என்று கேட்டேன். இல்லை என்றார். காரணத்தைப் பிறகு சொல்கிறேன் என்றார். எனக்குக் காரணம் தேவையில்லை. என் இணையதளத்தை தினமும் படிக்க ஐந்து நிமிடம் ஆகும். நான் இலவசமாக இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன். மாதம் பத்து பேர்தான் சந்தா … Read more