வர்ஜீனியா வுல்ஃபும் ஸில்வியா ப்ளாத்தும்…

உல்லாசம் நாவல் வெளிவரும் வரை அது பற்றி ஒரு வார்த்தை எழுதக் கூடாது என்று இருந்தேன். ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. நாவலின் தலைப்பு மாறி மாறி உருண்டுகொண்டே இருக்கிறது. Ullasa: The Erotics of Being என்று ஒரு தலைப்பு சரியாக வரும் என்று தோன்றுகிறது. நாவலின் நாயகி ஸஞ்ஜனாவின் நாட்குறிப்புகளில் நானே ஒரு பெண்ணாக உருமாறிக்கொண்டிருக்கிறேன். ஸ்ரீ பெருமளவுக்கு உதவி செய்கிறாள். ஸஞ்ஜனாவை எழுதிக்கொண்டிருக்கும்போது தவிர்க்கவே முடியாமல் ஸில்வியா ப்ளாத் மற்றும் வர்ஜீனியா வுல்ஃபின் ஞாபகம் … Read more

அன்பு

தலைப்பில் Empathy என்றுதான் இருக்க வேண்டும். ஆனால் ஆங்கில வார்த்தைகளைக் கலப்பது எனக்குப் பிடிக்காது என்பதால் அன்பு எனத் தலைப்பிட்டிருக்கிறேன். அன்பு என்ற பெயரில் என்ன்னென்ன அராஜகங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை அன்பு நாவலிலேயே விலாவாரியாகப் பேசியிருக்கிறேன். அன்பு என்பதை இன்றைய சமூகம் மிகத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறது. புத்திமதிகள் சொல்வதும், போதனை புரிவதும்தான் அன்பு என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் அன்பு என்ற பெயரில் அடுத்தவர் சுதந்திரத்தில் குறுக்கிடும் வன்முறையும் நடக்கிறது. உதாரணம், எனக்குத் தேநீர் பிடிக்காது. குடித்தால் … Read more

பற்றிக்கொள்ள ஒரு தோள்…

காலையில் நடைப்பயிற்சி செல்வதற்கு உரிய சரியான ஆடைகள் இல்லாததால் நான் வழக்கமாக எடுக்கும் ரேர் ரேபிட் கடை இருக்கும் ஃபீனிக்ஸ் மாலுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.  யாரோடு செல்வது?  சென்னையில் எனக்கு அதற்குத் தோதான நண்பர்களே இல்லை என்பதை முதல் முதலாக உணர்ந்தேன்.  இந்த வேலைக்கெல்லாம் செல்வா சரிவர மாட்டார்.  மட்டுமல்லாமல் அவர் ஊருக்குப் போயிருந்தார்.  சீனி கொலை பிஸி.  அவரை இதற்கு இழுத்தடிக்க முடியாது.  சுரேஷ் நெடுஞ்சாலைப் பயணம் சென்றிருக்கிறார். எங்கே அழைத்தாலும் வரக்கூடிய ராஜா … Read more

பாரிசாகரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா

இன்று (15.2.2025) மாலை ஆறு மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் பாரிசாகரனின் போதமற்ற குறளிகளின் வினையாடல் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. இதில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன். வர முடிந்தவர்கள் வர வேண்டும் என அழைக்கிறேன். விழா அழைப்பிதழில் மற்ற விவரங்கள் உள்ளன.

காதலர் தினச் செய்தி

Ullasa: An Erotic Tale நாவலில் சுமார் எண்பது பக்கங்களை எழுதி முடித்தேன். அதில் ஒரு இருபது பக்கங்களை மூன்று நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன். நாவல் மொத்தமாக இருநூறு பக்கங்கள் வரலாம். இந்த எண்பது பக்கங்களில் காமம் கொஞ்சம்தான். காதல்தான் நிரம்பி வழிகிறது. கடைசி ஐம்பது பக்கங்கள் காமம் மட்டுமே இருக்கும் என்கிறது நாவலுக்கான வரைபடம். ஒரு வரைபடத்தோடுதான் இந்த நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதனால் தலைப்புகூட கடைசியில் மாறலாம். பதிப்பாளர் என்ன சொல்கிறாரோ அதுவே நடக்கும். நாவலின் … Read more

குகை வாழ்க்கை

ஆம், குகை வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டும்.  வெளியுலகத் தொடர்பே இல்லை.  யாரோடும் பேசுவதில்லை.  வழக்கமாக சீனியோடு தினமும் பேசுவேன்.  ஆனால் உல்லாசம் நாவலுக்கான ’ஃபீல்ட் வொர்க்’ முடிந்து திரும்பிய பிறகு சீனியோடும் பேசவில்லை. காலையில் ஐந்து மணிக்கு எழுந்து கொள்கிறேன்.  ஒரு மணி நேரம் என்னுடைய காலை வேலைகள், பூனைகளுக்கு உணவிடுதல் போன்றவற்றில் போய் விடும்.  பிறகு ஏழு மணி வரை எழுத்து (தியாகராஜா).  ஏழிலிருந்து எட்டரை வரை நடை.  கோடை வந்தால் இந்த நடை … Read more