அடியேனின் நூல்கள் தள்ளுபடி விலையில்…

சாரு crossword விருது வென்றதை கொண்டாடும் விதமாக அவர் பிறந்த நாளான இன்று அவர் புத்தகங்களுக்கு 30% தள்ளுபடி அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்தச் சலுகை இம்மாதம் 23 வரை மட்டுமே.புத்தகங்களை வாங்குவதற்கான சுட்டி கீழே. https://www.zerodegreepublishing.com/search?type=product%2Carticle%2Cpage&q=Charu%20nivedita*

ஒரு நாவலின் விலை ஒரு கோடி ரூபாய்

அராத்து எழுதிய புருஷன் நாவலின் ஒலி வடிவக் குறுந்தகடு என்னால் இப்போது வெளியிடப்படுகிறது. நாவலை அராத்து வாசித்திருக்கிறார். அறுநூறு பக்க நாவல். குறுந்தகடு என்.எஃப்.டி. மூலம் விற்கப்படுகிறது. முதல் பிரதியின் விலை முப்பது எத்தெரியம். ஒரு எத்தெரியத்தின் மதிப்பு மூன்று லட்சம் ரூபாய்க்கும் மேல். ஆக, முதல் பிரதியின் விலை ஒரு கோடி ரூபாய். மற்ற பிரதிகளின் விலை ஒரு லட்சம் ரூபாய். நான் எந்த விழாவாக இருந்தாலும் அதில் கலந்து கொள்ள ஒரு லட்சம் ரூபாய் … Read more

பெங்களூர் இலக்கியத் திருவிழா

வரும் ஞாயிறு டிசம்பர் 15, காலை 10.15 மணிக்கு பெங்களூர் இலக்கியத் திருவிழாவில் Conversations with Aurangzeb நாவல் பற்றி நந்தினி கிருஷ்ணன் மற்றும் உதயன் மித்ரா ஆகியோருடனான கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். நண்பர்கள் அனைவரும் வருக.

மனம் கனிந்த நன்றி

க்ராஸ்வேர்ட் விருதுக்கு எனக்கு வாக்கு அளித்து என்னைத் தேர்ந்தெடுத்த அத்தனை நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் சக எழுத்தாளர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றி. என்னுடைய வாசகர் வட்ட நண்பர்கள், விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள், அமிர்தம் சூர்யா, கார்ல் மார்க்ஸ், நண்பர்கள் அராத்து, ஸ்ரீராம், காயத்ரி, ராம்ஜி, இன்னும் ஏகப்பட்ட நண்பர்கள் இதற்காக உழைத்தார்கள். விரிவாக நாளை கண்ணூரிலிருந்து எழுதுகிறேன். இப்போது கண்ணூர் பல்கலைக்கழக இலக்கிய விழாவுக்காகக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். மூன்று நாள் இலக்கிய விழாவை நான்தான் தொடங்கி வைக்கிறேன். … Read more

ஆன்லைன் கோஷ்டி

நேற்று ஃபேஸ்புக்கில் ஒரு வாழ்த்துச் செய்தியைப் பார்த்தேன். என்னுடைய நண்பர் ஒருவருக்கு என்னுடைய இன்னொரு நண்பர் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பியிருந்தார். இத்தனைக்கும் வாழ்த்து அனுப்பிய நண்பர் மிக நெருக்கடியான பல வேலைகளைச் செய்து வருபவர். ஒரு ஐந்து ஆள் வேலையை அவர் ஒருவரே செய்கிறார். சரியாகத் தூங்கக் கூட நேரம் இல்லை. ஃபேஸ்புக் பற்றிய பேச்சு வரும்போது கூட “எனக்கெல்லாம் எங்கே சாரு ஃபேஸ்புக்கில் நேரம் செலவழிக்க நேரம் இருக்கிறது? சும்மா எட்டிப் பார்ப்பது கூட … Read more

மனநோய்…

ரஜினிகாந்த் கண்டக்டராக இருந்த போது அவரோடு வேலை பார்த்த சக கண்டக்டர்கள் இருந்திருப்பார்கள்.  இப்போதும் அவர்கள் கண்டக்டர்கள்தான்.  என்ன, ரிட்டயர்ட் கண்டக்டர்கள்.  ரஜினி நல்லவர் இல்லையா?  அதனால் ரஜினி  அவர்களை மறக்கவில்லை.  வருடத்துக்கு ஒரு தபா அவர்களைத் தன் வீட்டுக்கு வரவழைத்து குவாட்டர் ஓல்ட் மாங்க்கும் குவாட்டர் சிக்கன் பிரியாணியும் வாங்கிக் கொடுத்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு, பழைய வாழ்க்கை பற்றி சிரித்துப் பேசி விட்டு அனுப்பி விடுவார்.  அந்தக் கண்டக்டர்களுக்கு அது ஒரு வாழ்நாள் … Read more