Zoom meeting தொடர்பாக

என்னுடைய சில நெருங்கிய நண்பர்கள் சிலரே கூட்டத்தில் கலந்து கொள்வதற்குப் பெயர் கொடுக்கவில்லை என்று அவர்களே சொல்லக் கேட்டேன். நல்லது. பின்வரும் குறிப்புகளை சதீஷ் அனுப்பியிருந்தார். குறித்துக் கொள்ளுங்கள். மறுநாள் யூட்யூபில் என் பேச்சைக் கேட்க இயலாது. ஞாயிறு அன்று கேட்டால்தான் உண்டு. அதிலும் இங்கே ஞாயிறு காலை அமெரிக்காவில் சனி மாலை என்றே இப்போதுதான் ஞாபகம் வந்தது எனக்கு. மீதியை சதீஷ் சொல்கிறார்: 1. Zoom-ல் இருக்கும் வரம்புகளின் காரணமாக 100 நபர்கள் மாத்திரமே பங்குபெற … Read more

ஒரு குட்டி விவாதம்

முகநூலில் கண்ட சில விவாதங்கள்: அராத்து: சாரு நிவேதிதா , ஹாருகி முராகாமி பற்றி பீலா விடுபவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் “அத்யந்த நண்பர்கள்” எனக் குறிப்பிட்டு அவர்களும் என் எழுத்தைப் பற்றி எழுதாமல் இப்படித்  தான் செய்கிறார்கள் என்று எழுதி இருந்தார்.கார்ல் மார்க்ஸ் அதை ஒட்டி , சாருவின் தற்கொலைப் படை என்று சொல்லிக்கொள்பவர்கள் சாருவின் ஆக்கங்களைப் பற்றி “உருப்படியாஹ” எதுவும் எழுதவில்லை என அங்காலாய்த்து இருந்தார். சாருவும் இதைத்தானே சொல்லி … Read more

பூச்சி 76

13. பத்து கட்டளைகளை இன்னும் நீட்டிக் கொண்டு போகலாம் போல் இருக்கிறது.  இது பதின்மூன்றாவது கட்டளை: Don’t stay where you are tolerated, go where you are celebrated. இதை என் நண்பர் இளங்கோவன் எழுதியிருந்தார்.  இது பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய வாசகம்.  இந்தக் கொரோனா பேரிடர்க் காலத்தில் எனக்குப் பெண்களிடமிருந்து வரும் கடிதங்களில் ஒன்றைக் கூட என்னால் வெளியிட முடியாது.  ஆனால் அவற்றைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் என்னால் சும்மா வாயை மூடிக் கொண்டும் … Read more

பூச்சி 75

செல்லப்பா சந்திப்புக்காகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  வரும் ஞாயிறு இந்திய நேரப்படி காலை ஆறு மணி.  இது முக்கியமாக அமெரிக்காவிலும் சிங்கப்பூர் மலேஷியாவிலும் வசிக்கும் நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்காக.  அமெரிக்கத் தமிழர்களுக்கு அது மாலை அல்லது முன்னிரவாக இருக்கும்.  சிங்கப்பூர்வாசிகளுக்கு அது முன்பகல்.  நல்ல நேரம்தான்.  காலை உணவுக்கு எதையாவது கொறித்துக் கொண்டே கேட்கலாம்.  இந்திய வாசகர்கள் என்னைக் கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும்.  காலை ஆறு மணியெல்லாம் அவர்களுக்கு ரொம்ப அநியாயம்.  ஆனால் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்துகிறேன்.  … Read more

பூச்சி 74

அன்புள்ள சாரு அவர்களுக்கு, உங்கள் எழுத்தின் ரசிகன் நான். சுவைத்து சுவைத்துப் படிப்பேன். உங்கள் எழுத்தைப் படிக்கையில் தேனருவியில் நீந்துவது போல் இருக்கும். பித்த நிலை‌யி‌ல் இரு‌ந்து பேரின்ப நிலைக்குத் தாவும் தன்மை உடையது உங்கள் எழுத்து. நான், உங்கள் எழுத்து மூலமாக பேரின்பத்தில் தாவிக் களியுற்று இருக்கிறேன். அவ்வப்போது நாக்கு சுவையற்று இருக்கும்போது இனிப்பை உண்பது போல உங்கள் ஸீரோ டிகிரியை நான் அடிக்கடி படிப்பேன். அற்புதம்!  பூச்சி தொடரையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பூச்சி … Read more

பூச்சி 73

நேற்று child prodigy என்று சொல்லக் கூடிய ஒரு சிறுவன் பாடிய மிகப் புகழ் பெற்ற டும்ரி பாடலை வித்யா சுபாஷ் முகநூலில் பகிர்ந்திருந்தார்.  அந்தப் பாடலை நான் தில்லியில் இருந்த போது பல லெஜண்டரி பாடகர்கள் பாடக் கேட்டிருக்கிறேன்.  Naina Morey Aaja Balam Paradesi என்ற மிகக் கடினமான அந்த டும்ரி பாடலை Aryya Banik என்ற அந்தச் சிறுவன் பாடியது நம்ப முடியாமல் இருந்தது.  முன் ஜென்ம ஓட்டத்துக்கு அது ஒரு சான்று … Read more