மழை – சிறுகதை

மழை பற்றிய என் மூன்று கவிதைகளைப் படித்திருப்பீர்கள்.  சென்ற மாதம் மனுஷ்ய புத்திரன் உயிர்மைக்காக மழை, வெள்ளம் பற்றி ஒரு கட்டுரை கேட்டார்.  நான் ஒரு கதையை அனுப்பி வைத்தேன். கட்டுரை கிடைத்தது என்றார். ஐயோ அது கதை ஆயிற்றே என்றேன்.  என்னங்க இது, உங்களைத் திட்டுபவர்கள் சொல்வதையே நீங்களும் சொல்கிறீர்கள் என ஆச்சரியப்பட்டார்.  என்னைத் திட்டுபவர்களுக்கும் எப்படித் திட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பவனே நான் தானே?  அவரிடம் நான் சொன்னேன், அவந்திகா என்று இருந்தால் … Read more

கொடுப்பினை

இவர் என்ன மனிதனா அல்லது அரக்கனா என்று தெரியவில்லை.  நானும் எத்தனையோ பேருடைய அசாத்தியமான நினைவாற்றலைக் கண்டு வியந்திருக்கிறேன்.  அப்படியே புகைப்படம் எடுப்பது போல் முழுப் புத்தகத்தையும் மனதில் கிரஹிக்கக் கூடியவர் திலகவதி.  இப்போது டாக்டர் ஸ்ரீராம் இறந்த காலத்துக்குள் ஏதோ ராக்கெட்டைப் போல் புகுந்து புறப்பட்டு வருகிறார்.  ஹவுளேபெக் கதை வெளிவந்து ஐந்து நிமிடத்தில் அவரிடமிருந்து ஒரு கடிதம்.  நீங்களே படித்துப் பாருங்கள்.  இப்படியெல்லாம் நண்பர்கள் கிடைக்கக் கொடுத்துத்தான் வைத்திருக்கிறேன். டியர் சாரு, இக்கதை 2004-இல் … Read more

மனிதாபிமானிகளே, கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்!

இப்போது எழுதப் போகும் விஷயத்தைப் பற்றி ஏழெட்டு தடவையாவது எழுதி விட்டேன்.  ஆனாலும் புதிது புதிதாக வரும் வாசக நண்பர்கள் நான் எழுதிய பழைய கட்டுரைகளை வாசிக்காமல் வருவதால் அல்லது பழசை அப்படியே மறந்து தொலைத்து விடுகிறார்கள் என்பதால் மீண்டும் எழுத வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறேன். அந்த நண்பர் கல்லூரி மாணவர்.  நான் வயசு வித்தியாசமெல்லாம் பார்ப்பதில்லை.  அவருடைய வயதில் அவர் படித்ததில் ஆயிரத்தில் ஒரு மடங்குதான் நான் படித்திருந்தேன்.  எனவே அந்த நண்பர் மீது எனக்கு … Read more

ஹவுளேபெக்! (திருத்தப்பட்டது)

சில பேர் சில விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.  சிலர் கிரிக்கெட் பற்றிய விபரங்கள்.  சிலர் பிரபந்த உரைகள், விளக்கங்கள்.  சிலர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ஜ் சமாச்சாரங்கள்.  எனக்கு தென்னமெரிக்கா பற்றிய விஷயங்கள்.  குறிப்பாக, சீலே.  அந்த நாட்டின் இலக்கியம், கலாச்சாரம், அரசியல், இசை.  அந்த சம்பவம் நடந்த போது என் வயது ஐம்பத்து மூன்று என்றால் சீலே பற்றிய ஆய்வுகளை முப்பது ஆண்டுகளாகச் செய்து கொண்டிருந்தேன். குமார் ஒரு இலக்கிய விமர்சகன்.  நல்ல படிப்பாளி.  ஒருநாள் என்னோடு … Read more