சர்க்கார் பற்றி இன்னும் கொஞ்சம்…

சில ஆண்டுகளாகவே நான் சக எழுத்தாளர்கள் யாரையும் விமர்சித்து எழுதுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதைப்போலவே சினிமா விமர்சனங்களும் எழுதுவதில்லை. காரணம், அப்படிப்பட்ட மனநிலை இப்போது எனக்கு இல்லை. செய்வதற்கு எத்தனையோ காரியங்கள் காத்துக் கிடக்கின்றன. இரண்டு நாவல்களை முடித்தாக வேண்டும். ஒரு நாடகத்தை எழுதி முடித்திருக்கிறேன். இன்னொரு நாடகம் எழுதுவதற்கான தயாரிப்பில் இருக்கிறேன். இப்படி ஏராளமான வேலைகள் இருக்கும் போது சக எழுத்தாளர்களை விமர்சனம் செய்வது போன்ற எதிர்மறையான செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளலாம் என்பது என் … Read more

யார் அந்த ஏழு பேர்?

டாஸ்மாக் பாரில் பணியாளனாக வேலை செய்யும் 14 வயதுப் பொடியன் ஒருவனுக்கு ஏழு பேர் பற்றித் தெரியுமா? எந்த ஏழு பேர் என்றுதானே கேட்பான்? திரு ரஜினிகாந்த் அவர்களுக்கும் அந்த அளவுக்குத்தான் பொது அறிவும் அரசியல் அறிவும் உள்ளன. உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டதற்கே தலை சுத்துது என்று சொன்ன அரசியல் ஞானி அவர். அவர்ட்ட போய் ஏனய்யா இப்படியெல்லாம் கேட்டு மன உளைச்சல் பண்ணுகிறீர்கள்? விலங்கினங்களைத் துன்புறுத்தக் கூடாது என்று மேனகா காந்தி … Read more

டிக் டாக் – அவுத்துப் போட்டு ஆடு – அராத்து

டிக் டாக் – அவுத்துப்போட்டு ஆடு ! தமிழ் நாட்டில் பெரும்பாலான பெண்கள் தன்னை சினிமா ஹீரோயினாகவே நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். சினிமா என்பது கேளிக்கை மட்டுமல்ல இவர்களுக்கு. அவர்கள் வாழும் வாழ்க்கையையே ஒரு சினிமாவாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த ஆப்பின் மூலம் தெரியவருகிறது. இவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. தங்கள் வாழ்வையை , சினிமாவில் இருந்து எடுக்கும் சீன்கள் மூலம் நிரப்பிக்கொள்கிறார்கள்.தங்கள் வாழ்வின் எந்த சிச்சிவேஷனிலும் , அதற்கு சம்மந்தப்பட்ட சினிமா … Read more

ரவுடிகள் குறித்த என் முகநூல் பதிவுகள்

அமைச்சர் சி.வி. சண்முகத்தைக் கொலை செய்து விடுவோம் என்று அரிவாளை வைத்துக் கொண்டு பயமுறுத்தி விடியோ விட்டிருக்கும் இரண்டு விஜய் ரசிகர்களும் விஜய் பெயரை பலமுறை பயன்படுத்துவதால் விஜய் மீது போலீஸ் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஏனென்றால் கொலை செய்பவனை விட கொலை செய்யத் தூண்டுபவர்தான் அதிக ஆபத்தானவர்.   படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் அதிகம் உள்ளன. தன் ரசிக ரவுடிகளை விட்டு கொலை மிரட்டல் விடும் ரவுடி நடிகன் விஜய்யை இன்னும் கைது செய்யவில்லையா? … Read more

என் புத்தகங்கள் கிடைக்கும் இடம்

இங்கே வந்ததிலிருந்து பல நண்பர்கள் என் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  முக்கியமாக பழுப்பு நிறப் பக்கங்கள், நிலவு தேயாத தேசம்.  இந்தப் புத்தகங்கள் அனைத்தும் அமீரக புத்தக விழாவில் ஷார்ஜா தூசு படிந்து கிடக்கின்றன யார் கையும் படாமல். இன்றுதான் கடைசி தினம்.  கேட்ட நண்பர்கள்-தேவைப்படும் நண்பர்கள் அனைவரும் அங்கே சென்று அதை வாங்கிப் பயன் அடையும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மாத்ருபூமி அரங்கில் என்னுடைய புத்தகங்கள் கிடைக்கும். தமிழ் அரங்குகளில் கிடைக்காது. 

தியடோர் பாஸ்கரனின் நூல் வெளியீட்டு விழா

ஷார்ஜா வந்திருக்காவிட்டால் இந்த விழாவில் நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன். நண்பர்கள் யாவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு இந்த நூலை வாங்கிப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்