தலைப்பு தெரியவில்லை – அராத்து எழுதிய பதிவு

ஃபேஸ்புக்கில் அடாவடியான இமேஜ் எனக்கு இருக்கலாம். ஆனால் நான் பப்ளிஷருக்கு லகுவானவன். என்னைப்போல சுலபமான எழுத்தாளர் யாரும் பப்ளிஷருக்கு கிடைப்பார்களா என்று தெரியவில்லை. அட்டைப்படம் நானே கோ ஆர்டினேட் செய்து , வாங்கிக் கொடுத்து விடுவேன். பேஜ் செட்டும் சமயங்களில் செய்து கொடுத்து விடுவேன். அட்டைப்படம் போட்டவருக்கு காசும் நானே கொடுத்து விடுவேன். முதன் முறையாக ஜீரோ டிகிரி மட்டுமே அட்டைப் படம் போட்டவருக்கு பணம் கொடுத்தார்கள். மேலும் விழாவை என் சொந்த செலவில் வைத்து விடுவேன். … Read more

ஜெய்ப்பூர் இலக்கிய விழா

நாளை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்குச் செல்கிறேன். அழையா விருந்தாளியாக. அப்படிச் செல்வதால் எனக்கு 60000 ரூ. செலவு. நுழைவுக் கட்டணமே ஒரு நாளைக்கு 5000 ரூ. இலவசமாகவும் போகலாம். ஆனால் delegate pass என்றால் 5000 ரூ. கட்டணம். டெலகேட் பாஸ் இருந்தால்தான் எழுத்தாளர்களை நெருங்க முடியும். இல்லாவிட்டால் வாயில் விரலை வைத்துக் கொண்டு வேடிக்கை தான் பார்க்க முடியும். சென்ற ஆண்டு இந்தச் செலவை இரண்டு நண்பர்கள் ஏற்றார்கள். இந்த ஆண்டு ஒரு நண்பன் வேலையை … Read more

பேட்டை: தமிழ்ப் பிரபா

புத்தக விழா பதிவுகள் பல எழுத வேண்டும். நிறைய இருக்கிறது. ஆனால் ஒரு வரி கூட எழுத முடியாது. தமிழ்ப் பிரபாவின் பேட்டை படித்துக் கொண்டிருக்கிறேன். ரொம்ப காலத்துக்குப் பிறகு ரொம்ப ரொம்ப காலத்துக்குப் பிறகு இப்படி ஒரு intense நாவலைப் படிக்கிறேன். வேலூரில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது சென்னையிலிருந்து வேலூருக்கு தினமும் ரயிலில் போய் வந்து கொண்டிருந்தேன். பிருந்தாவன் எக்ஸ்பிரஸ். அப்போது ஜென்ரல் கோச்சில் கக்கூஸுக்கு வெளியே தரையில் அமர்ந்து மரியோ பர்கஸ் … Read more