நவீன ராம காதை
1.கடவுள் வாழ்த்து ஒருநாளும் ஒருபோதும்சுய இரக்கப் பிரதிகள்பாடியதில்லைஇன்றும் அப்படியே ஆகசீதையின் நாயகனேசிவதனுவை வளைத்தவனேஅயோத்தியின் அருள் வடிவேநீயே எனக்குத் துணை நிற்பாய்! 2. கழிப்பறை சுத்திகரிப்புப் பணி இருபத்தைந்து ஆண்டுகள்அரசனாய் மிதந்தேன்பின்னே புரிந்ததுபெண்ணின் வியர்வையில்உயிர் திளைக்கக் கூடாது பிரித்தேன் உழைப்பைஉனக்கு இருபத்தைந்துஎனக்கு எழுபத்தைந்துஆயினும்எழுபத்தைந்தில்கழிப்பறை சுத்தம் சேரவில்லைஉழைப்பில் ஏற்றத்தாழ்வாஎன ஆவேசம் கொள்ளாதீர் வறுமையின் நாட்களில்நாப்கினுக்குக் காசில்லாமல்மனையாளின் தூரத்துணியும்துவைத்திருக்கிறேன் ஒருநாள் மனையாள் ஊரிலில்லைகழிப்பறை வேலைதலையில் வீழ்ந்ததுஇவ்வூரில்இரட்டிப்பு ஊதியத்திலும்கழிப்பறை வேலைக்குஆட்கள் கிடையாது மோகினிக்குட்டி சொன்னாள்ஹார்ப்பிக் கொட்டு, ஊற விடு,தேய், கழுவு…முடிந்தது. ப்பூ, இவ்வளவுதானா? … Read more