தினகரனில் நேர்காணல்

அன்புள்ள சாரு,
இன்றைய தினகரன் “வணக்கம் திங்களி”ல் தங்களின் நேர் காணல் வாசித்தேன். மிக அருமையாக இருந்தது. மனதில் உள்ளதை பட்டவர்த்தனமாக சொல்லியிருந்தீர்கள். காலைப் பொழுது திவ்யமாய் ஆரம்பித்தது. நன்றி…!
S. Mohamed Moosa
Tirunelveli
மூசாவின் கடிதத்தைப் படித்த பிறகுதான் தினகரன் பேட்டி ஞாபகம் வந்தது.  பல எழுத்தாளர்களும் எழுதும் போது தான் வெளியுலகத் தொடர்பு எதுவும் இல்லாமல் இருப்பார்கள்.  ஆனால் நான் படிக்கும் போதுதான் அப்படி இருப்பேன்.  இன்னும் ஆறு மாதம் படிக்கும் காலம்.  ஜும்ப்பா லஹரியின் லோலேண்ட் படித்து விட்டேன்.  அது பற்றி ஆங்கில இணையதளத்தில் ஓரிரு வரி எழுதியிருக்கிறேன்.  (charunivedita.com) இப்போது தஸ்லீமாவின் லஜ்ஜா படித்து முடித்தேன்.  இப்படி ஒரு குப்பையை வாழ்நாளில் படித்ததில்லை.  போகட்டும்.  முடிந்தவர்கள் இன்றைய திருநெல்வேலி பதிப்பு தினகரனில் என் பேட்டி வாசிக்கவும்.  தொலைபேசியில் எடுத்த பேட்டி என்பதால் அதன் வாசகங்கள் பேட்டி எடுத்தவருடையதாக இருக்கலாம்.  நான் இன்னும் படிக்கவில்லை.
இந்த இதழ் ஜன்னலில் முக்கியமான ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.  வழக்கம் போல் புதிய தலைமுறை மற்றும் அந்திமழை இதழ்களில் எழுதியிருக்கிறேன்.