படித்ததில் பிடித்தது

முகநூலில் என் நண்பர் ஸ்வாமி சுஷாந்தா எழுதியது:

நட்பில் இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஆண்டாள் குறித்து கவிப் பேரரசு பேசிய கருத்துக்களுக்கு…

உங்களில் ஒரு சிலர் நித்தி சீடர்கள் பேசிய வீடியோ லிங்க்குகளை என் இன்பாக்ஸ் அனுப்பி யிருக்கிறீர்கள் . அதை பார்த்து விட்டீர்களா ? அது்பற்றி என் கருத்து என்றெல்லாம் கேட்டிருக்கிறீர்கள்.

முதலில் இது போன்ற வீடியோக்களை எனக்கு அனுப்ப வேண்டாம் .

சிறு வயதிலிருந்து வளர்ந்த சூழலும் சரி , எனது ஈஷா வாழ்க்கையும் சரி , வாழ்க்கை எனக்கு கற்று கொடுத்ததும் காட்டியதும் இந்து தர்மம் அல்லத சனாதன தர்மத்தின் மீது மிகுந்த மதிப்பை தந்துள்ளது .

ஆழ்வார்களூம் நாயன்மார்களும் எனககுள் பக்தியை ஸ்திரப் படுத்தியவர்களும் அவர்களைப் போல வாழ்க்கையை உணர்ந்திட கனவுகளை விதைத்து வளர்த்த மிக பிரியமானவர்களூம்

நான் கருத்து கந்தசாமி ஆக விரும்பவில்லை

இஸ்லாமிய கிருஸ்தவ நண்பர்கள் இல்லத்திலும் எனது சுதந்திரத்தோடும் பக்தியோடும் எனது ஆன்மீக மற்றும் தியான பயிற்சிகளையும் பூஜைகளையும் கூட செய்துள்ளேன் . அவர்களை நான் அழைத்ததும் இல்லை. அவர்கள் என்னை தடுக்க முற்பட்டதும் கூட இல்லை.

ஏன் அவர்கள் அளவிற்கு செல்ல வேண்டும். நான் வளர்ந்த சூழலிலேயே எங்கள் வீட்டில் கூட இந்த சுதந்திரம் அனைவருக்கும் இருந்தது. அதனாலேயே இந்த இந்து தர்மம் எனக்கு பிடித்துள்ளது நீங்கள் அதை மதம் என்றாலும் கூட…..

பாயசம் கண்டெடுத்தால் என் இறைவனுக்கு அர்ப்பணித்து என்னை சுற்றி இருப்பவர்களோடு பகிர்ந்து உண்பேன் .

உலகில் பல ரகங்களில் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் . நான் என்ன செய்ய இயலும் .

நான் தயிர் சாதம் 🙂 மன்னித்தருள்க

அதனால் என்ன மலம் வராதா என கேட்காதீர்.

கழிவரைக்கு சென்று கழிப்பதை என் பெற்றோர் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர்.