தவறுக்கு மேல் தவறு

மேலே உள்ள இணைப்பில் உள்ளதைப் படித்து விட்டீர்களா?  இப்போது அதன் சொச்சத்தைப் படியுங்கள்.  பொதுவாக நான் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பேன் – நாம் ஒரு தவறைச் செய்து விட்டால் அதைத் தொடர்ந்து மேலும் மேலும் தவறு செய்கிறோம்.  சமயங்களில் அந்தத் தவறை சரி செய்வதற்காகவோ அல்லது அந்தத் தவறு தவறே அல்ல என்பதை நிரூபணம் செய்வதற்காகவோ அல்லது அபூர்வமாக மன்னிப்புக் கேட்பதற்காகவோ.  அது எப்படி, மன்னிப்புக் கேட்பதற்காகக் கூட தவறு செய்ய முடியும் என்று உங்களுக்குத் தோன்றலாம். 

ஒருமுறை சீனியின் கெஸ்ட் ஹவுஸில் ஒரு சந்திப்பின் போது ஒரு நண்பர் அறைக்குள்ளேயே வாந்தி எடுத்து விட்டார்.  பாத்ரூம் பக்கத்திலேயேதான் இருக்கிறது.  அங்கே போய் எடுத்திருக்கலாம்.  சரி, நடந்து விட்டது.  வாந்தி எடுத்த நண்பரால் அசுத்தத்தை சுத்தம் செய்ய முடியவில்லை.  காலையில் எல்லோருக்கும் முன்னதாகவே எழுந்து கிளம்பியும் போய் விட்டார்.  காலையிலாவது சுத்தம் செய்திருக்கலாம்.  செய்யாமல் போய் விட்டார்.  இதுவரைக்குமாவது மன்னிக்கலாம்.  அதற்குப் பிறகு அவர் செய்ததைத்தான் மன்னிக்கவே முடியாது.  வீட்டுக்குப் போன பிறகு சீனிக்கு ஃபோனைப் போட்டு, ஸாரி தல… மன்னிச்சுக்கோங்க தல… சுத்தப்படுத்தாம வந்துட்டேன் தல… ஒரே கில்ட்டியா இருக்கு தல… என்று பத்துப் பதினைந்து நிமிடம் பிளேடு போட்டிருக்கிறார்.  வாந்தியை சுத்தப்படுத்திய கடுப்போடு எவ்வளவு நேரம்தான் இந்த டார்ச்சரை அனுபவிப்பது? யோவ் வைய்யா போனை… லூசுக் கூதி… என்று திட்டியிருக்கிறார் சீனி.  இதுதான் மன்னிப்புக் கேட்டும் தவறு செய்வது.  வாந்தி எடுத்து விட்டாயா?  காலையிலும் சுத்தப்படுத்தாமல் வந்து விட்டாயா?  கம்மென்று மூடிக்கொண்டு கிட.  இம்மாதிரி தவறுகளை எப்படி சரி செய்யலாம் தெரியுமா?  அடுத்த சந்திப்புக்கு வரும் போது சீனிக்கு ரெண்டு மூணு பாக்கெட் சிகரெட்டோ அல்லது அவருக்குப் பிடித்த சரக்கோ வாங்கிக்கொண்டு வரலாம்.  அதுதான் உண்மையான மன்னிப்பு.  ஆனால் நம் ஆட்களுக்கு நோகாமல் நோன்பு கும்பிட வேண்டுமே?  எல்லாம் வார்த்தையாலேயே முடிந்து விட வேண்டும். 

சரி, மேட்டருக்கு வருவோம்.  ஒரு தவறைச் செய்தோமா?  கிளம்பு… அடுத்தடுத்த தவறுகளைச் செய்வோம்.  ஒரு அன்பர் எனக்கு பிழை திருத்தம் பற்றி ஆலோசனை கொடுத்திருந்தார் அல்லவா?  அதைப் பற்றித்தான் மேலே உள்ள இணைப்பில் எழுதியிருந்தேன்.  அவர் இப்போது மீண்டும் எழுதியிருக்கிறார்.  நான் அவரைத் திட்டிவிட்டதாக நினைத்துக்கொண்டு கோபாவேசத்தில் எழுதியிருக்கிறார்.  மேலோட்டமாகத் தெரியாது.  உள்ளே கனன்று கிடக்கிறது மூர்க்கமும் திமிரும்.  அந்தக் கடிதத்தைப் படியுங்கள்:

”என் நூல்களுக்கு நானே பிழை திருத்துகிறேன்” என்று ஐந்தாறு முறை உங்கள் இணையதளத்தில் எழுதியிருந்தீர்கள். சரி, சாரு ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும் என்றுதான் ஆலோசனை சொன்னேன். மற்றபடி வேறு என்ன? நீங்கள் உடனே எனக்கு ஆலோசனைத் திலகம் என்று பட்டம் வழங்குகிறீர்கள். எனக்கு உங்கள் பட்டங்கள் தேவையில்லை.

ஏனென்றால் சென்னை பல்கலைக்கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகமும், ஹிந்தி பிரச்சார் சபாவும் வழங்கிய பட்டங்களே போதும் எனக்கு. பாரதியார் பல்கலைக்கழகமும் ஒரு பட்டம் வழங்கியிருக்க வேண்டியது. ஜஸ்ட் மிஸ்.

இவண்,

ஆலோசனைத் திலகம்

எப்படி இருக்கிறது பாருங்கள்!  40 ஆண்டுகளாக பதிப்புத் துறையிலும் எழுத்துத் துறையிலும் ஆழ்ந்து கிடக்கும் ஒருவனிடம் வந்து ஆலோசனை சொல்வதற்கே முதலில் எத்தனை திமிரும் அஹங்காரமும் வேண்டும்?  அதையும் “சரி போகட்டும், சிறுபிள்ளை” என்று நான் மன்னித்து போகிற போக்கில் ஆலோசனைத் திலகம் என்று கிண்டல் செய்தால் பிய்த்துக்கொண்டு கிளம்புகிறது கோபமும் மூர்க்கமும்.  இத்தனை பட்டங்களை வாங்கி என்ன பயன்?  யோசனை இல்லையே?  40 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருப்பவனுக்குத் தெரியாததையா நாம் சொல்லி விட முடியும் என்ற தன்னறிவு வேண்டாமா?  இன்று நேற்று அல்ல; என் 24 வயதிலிருந்து நான் பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.  இப்போது என் வயது 66.  நான் தில்லியில் இருந்த போது சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் வெளிவந்தது.  நான் அந்த நாவலுக்கு எழுதிய விமர்சனத்தை எந்தச் சிறுபத்திரிகையும் வெளியிட விரும்பவில்லை.  சு.ரா.வுக்கு நேர் எதிரான கொள்கைகளைக் கொண்ட இடதுசாரிப் பத்திரிகையான இலக்கிய வெளிவட்டம் கூட நிராகரித்து விட்ட நிலையில் அந்த விமர்சனத்தை நான் தில்லியில் சிறு நூலாகப் பதிப்பித்தேன்.  அப்போது என் வயது 28.  தில்லியில் எப்படி தமிழ் நூலைப் பதிப்பிப்பது?  தெருத்தெருவாக அலைந்தேன். அதிலும் எல்லா நண்பர்களுமே சுந்தர ராமசாமி வெறியர்கள்.  பார்த்தீர்களா என் நிலையை?  ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் இருக்கிறது.  கடைசியில் கரோல்பாகில் இருந்த, கல்யாணப் பத்திரிகை அச்சடிக்கும் தானா அச்சகத்தில் (அது ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை மாதிரி இருந்தது; ட்ரெடில் பிரஸ்) அச்சடித்தேன்.  கல்யாணப் பத்திரிகை அச்சடிக்கும் அந்தப் பிரஸ்ஸில் அடித்த முதலும் கடைசியுமான புத்தகம் நான் எழுதிய விமர்சனப் புத்தகமாகத்தான் இருக்கும்.  மூன்று ரூபாய் விலை.  ஆயிரம் பிரதிகள்.  ஒருத்தர் கூட மூன்று ரூபாய் கொடுக்கவில்லை.  இலவசம்தான். 

அப்படிப்பட்ட அனுபவங்களைக் கொண்ட என்னிடம் வந்து ஆலோசனை சொல்கிறார்.  ஆலோசனைத் திலகம் என்று கிண்டல் செய்தால் மூர்க்கம் பீறிடுகிறது.  தமிழ் எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் – ஆம், அத்தனை பேரையும் – ஒரு பக்கம் வைத்து விடுங்கள்.  நான் மட்டும் தனி.  ஆம், நான் மட்டுமே என் புத்தகங்கள் அனைத்தையும் நானே பதிப்பிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன்.  எந்தப் பதிப்பகமும் என் புத்தகங்களைப் பதிப்பிக்கத் தயாராக இல்லை.  ஆம். எந்தப் பதிப்பகமும்.  அப்படியானால் நானே பதிப்பாளன், நானே ப்ரூஃப் ரீடர்; நானே விற்பனையாளன். 

ஒருமுறை – 2002இல் நடந்தது இது – நானே அச்சடித்து நானே ப்ரூஃப் பார்த்து நானே பிரசுரம் செய்த என்னுடைய புத்தகத்தின் ஐம்பது பிரதியை கோவையில் உள்ள ஒரு பிரபல விற்பனையாளரிடம் கொடுத்திருந்தேன்.  காசு வரவில்லை.  எத்தனை முறை ஃபோன் செய்தும் காசு வரவில்லை.  இதோ அதோ. இதோ அதோ.  ஒரு வருட காலமாக இதே பதில்.  இதில் ஜோக் என்ன தெரியுமா?  புத்தகத்தின் 50 பிரதிகளும் ஒரே வாரத்தில் விற்று விட்டன.  ஆம், ஒரே வாரத்தில்.  அந்த விற்பனையாளர் மட்டும் நினைத்திருந்தால் 500 பிரதிகளையும் விற்றிருக்கலாம்.  ஒரே வாரத்தில் விற்றும் அவர் பணம் அனுப்பவில்லை.  அதற்குப் பிறகு போய்க் கேட்பவர்களுக்கெல்லாம் புத்தகம் ஸ்டாக் இல்லை என்ற ரெடிமேட் பதில்.  சரி, ஒரு வருடம் கேட்டேன்.  திடீரென்று ஹார்ட் அட்டாக் ஆகி போரூர் ராமச்சந்திராவில் பைபாஸ் சர்ஜரிக்காகப் படுத்திருக்கிறேன்.  கையில் காசு இல்லை.  அந்தக் கோவை அன்பருக்கு போன் போட்டேன்.  இப்படி இப்படி என்று விஷயத்தைச் சொன்னேன்.  ம்ஹும்.  நகர்கிற மாதிரியே தெரியவில்லை.  மழுப்பினார்.  தந்தையும் மழுப்பினார்.  மகனும் மழுப்பினார்.  ரெண்டு நாள் பார்த்தேன்.  மூன்றாம் நாள் “ஹலோ.  நாளை காலை என் கைக்குப் பணம் வரவில்லை என்றால் என் நண்பரிடம் சொல்லி – அவர் பெயரை என் வாழ்வில் பயன்படுத்திய ஒரே ஒரு தருணம் அதுதான் – அவருடைய பத்திரிகையில் உங்களைப் பற்றி எழுதுவேன்.  நாளை பணம் வரவில்லை என்றால் நாளை மறுநாள் அந்தப் பத்திரிகையில் உங்கள் கடை பெயரையும் உங்கள் பெயரையும் நீங்கள் பார்க்கலாம்” என்றேன்.  அன்று மாலையே பணம் வந்து சேர்ந்தது.  அன்னார் ரொம்பப் பிரபலம்.  அவர்தான் அப்படிச் செய்தார் என்றால் கடவுள் கூட நம்ப மாட்டார்.  அவர்தான் என்னிடம் அப்படி நடந்து கொண்டார். 

ஆலோசனைத் திலகத்தின் கடிதத்தை இன்னொரு முறை படித்துப் பாருங்கள்.  யார் யாரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று சொல்கிறார் பாருங்கள்.  2001-இல் நடந்தது இது:  பாரிஸ் கிளம்புகிறேன்.  ஏன் போகிறீர்கள் என்று கேட்டார் என் அதிகாரி.  ஐஏஎஸ்.  ஒரு ஐஏஎஸ் என்றால் நீங்கள் பல்கலைக்கழகங்களில் வாங்கும் நான்கு ஐந்து பட்டங்களை விடப் பெரிது இல்லையா?  சாம்ராட்.  ஒரு இலக்கிய செமினார் சார்;  பேச வேண்டும் என்றேன்.  ஓ, பட்டுக்கோட்டை பிரபாகர் படித்திருக்கிறீர்களா என்று கேட்டார்.  இல்லையே சார் என்றேன்.  அப்படியானால் உடனே படியுங்கள்; படித்து விட்டுப் போங்கள்; உபயோகமாக இருக்கும் என்றார்.  அதோடு விடவில்லை.  என்னைப் பார்க்கும் போதெல்லாம் என்ன, படித்து விட்டீர்களா படித்து விட்டீர்களா என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.  இம்மாதிரி ஆள் எவனையாவது அடித்து விட்டு ஜெயிலுக்குப் போய் விடுவோம்; அப்படி ஜெயிலுக்குப் போவதை விட பிச்சையெடுத்து சாகலாம் என்றுதான் பாரிஸிலிருந்து திரும்பியதும் வேலையை ராஜினாமா செய்தேன்.  அவந்திகாவிடம் அனுமதியெல்லாம் கேட்கவில்லை.  வேலையை ராஜினாமா செய்து விட்டுத்தான் அவளிடம் விஷயத்தையே சொன்னேன்.  ஏன் என்று அவள் காரணம் கேட்டபோது, மேற்கண்ட காரணத்தையே சொன்னேன்.  என் பேனாவுக்கு இங்க் போடுவதற்குக் கூட தகுதியில்லாத ஆட்களே எனக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.  மிஷ்கின் போன்ற இயக்குனரிடம் போய் ஒருத்தன் உதவியாளனாகச் சேர்ந்து விட முடியுமா?  எத்தனையோ பட்டங்கள் வாங்கி, அமெரிக்காவில் கோடி கோடியாய் சம்பாதித்தவரெல்லாம் இங்கே சினிமா இயக்குனருக்கு டீ கிளாஸ் கழுவிக் கொண்டிருக்கிறார்கள்.  எல்லா இயக்குனர்களையும் சொல்லவில்லை.  மிஷ்கின் போன்ற Auteurகளைச் சொல்கிறேன்.  நான் அப்படிப்பட்ட நூறு இயக்குனர்களுக்குச் சமம்; அதாவது என்னுடைய எழுத்துத் துறையில்.

பிழைதிருத்தம் செய்வதற்கு ஆளே இல்லை என்பது ஒரு சமூக அவலம்.  இப்போது வரும் புத்தகங்களில் ஒரு பக்கத்துக்குக் குறைந்தது பத்து பிழைகள் உள்ளன.  யாருக்குமே தமிழ் எழுதத் தெரியவில்லை.  பிழை திருத்துவோரே இல்லை.  ஒருவர் கூட இல்லை.  ஆம்.  ஒருவர் கூட இல்லை.  க்ரியா பதிப்பக நூல்களில் அப்போதெல்லாம் ஒரு பிழை இருக்காது.  ஆனால் இப்போது க்ரியா நூல்களில் கூட – மொத்த நூலிலும் 30 பிழைகள் இருக்கும்.  மற்ற பதிப்பக நூல்களில் 300 பிழைகள்.  நான் பதிப்பகங்களைக் குறை சொல்லவில்லை.  யாருக்கும் தமிழ் தெரியவில்லை.  தமிழ் வெறுமனே பேச்சு மொழியாகி விட்டது.  தமிழ் நாடகத்திலேயே யாருக்கும் தமிழ் பேசத் தெரியவில்லை என்றால் அப்புறம் என்னத்தைச் சொல்வது?  ஏன் ஐயா ஷாஜஹானும் ஔரங்கசீபும் பிராமணத் தமிழ் பேசுகிறார்கள் என்று கேட்டால் ஒரு ஆள் நீர் ஒரு பிராமணத் துவேஷி என்கிறார்.  என்னத்தைச் சொல்ல?  நேற்று அவந்திகா கேட்டாள், ஏன் சாரு உன் நண்பர்கள் அத்தனை பேரும் பிராமணர்களாகவே இருக்கிறார்கள் என்று.  ங்கொய்யால, எல்லாம் கொஞ்சம் ஓரமாப் போங்கடா. 

இப்போது கடிதம் எழுதிய அன்பரிடமிருந்து எனக்கு ஒரு வசை கடிதம் வரும் பாருங்கள்.   தவறுக்கு மேல் தவறு.  ஆனாலும் அன்னாரின் முதல் கடிதத்தின் ஒரு பகுதியை நான் ரசித்தேன்.  அந்தக் கடிதம் கீழே:    

அன்புள்ள சாரு,

நான் உங்கள் வாசகன். உங்கள் எழுத்துக்களை உங்கள் இணையதளத்தில் தொடர்ந்து வாசித்து வருகிறேன். ராஸலீலா நூலைப் பிழை திருத்தம் செய்துகொண்டிருப்பது பற்றி எழுதியிருந்தீர்கள். பிழை திருத்தம் செய்வது ஒரு எழுத்தாளரின் வேலை அல்ல. அதற்கென்றே ஆட்கள் இருக்கிறார்கள். நல்ல பிழை திருத்துநர்கள் கிடைப்பது எளிதல்ல. ஒப்புக்கொள்கிறேன். கொஞ்சம் முயன்றால் கிடைப்பார்கள். நீங்கள் அச்சுக்குச் செல்லும்முன் கடைசியாக ஒரு தடவை படித்துப் பார்த்தால் போதும். உங்கள் நண்பர்கள் மனுஷ்யபுத்திரன், பத்ரி சேஷாத்ரி ஆகியோரைத் தொடர்புகொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

இப்படித்தான் ருக்மிணிதேவி கலாக்ஷேத்ராவின் கணக்கு வழக்குகள் அடங்கிய கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தாராம். சந்திரலேகா அவரிடம் “அத்தை! (அத்தை என்றுதான் ருக்மிணிதேவி கலாக்ஷேத்ராவில் அழைக்கப்பட்டார்) என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறீர்கள்? கணக்கு வழக்குகளையெல்லாம் நீங்கள் ஏன் பார்க்கிறீர்கள்? அதற்கென்றுதான் கிளார்க்குகளும், அக்கவுண்டன்டுகளும் இருக்கிறார்களே” என்று கேட்டாராம். அதற்கு ருக்மிணி “அவர்கள் சரியாக வேலை பார்த்தால் நான் ஏன் இதைக் கட்டிக்கொண்டு அழப்போகிறேன்?” என்று சொன்னாராம். நீங்களும் இப்போது ருக்மிணிதேவியின் நிலையில்தான் இருக்கிறீர்கள்!

அன்புடன்,

ஜி.சுந்தர்

நண்பர்களே, உங்களுடைய மிக நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்ற யாருக்கும் இலவச ஆலோசனை தராதீர்கள்.  ஆலோசனை தருவதற்கு உங்கள் நல்ல மனம்தான் காரணம் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.  ஆனால் சமூகம் உங்களைப் போன்ற நல்ல மனம் கொண்டவர்களால்தான் ரொம்பவும் துன்புறுகிறது.  எனக்கு ஹார்ட் அட்டாக் வந்ததும் ஒரு ஆள் சொன்னார், குடியைக் கம்மி பண்ணுங்க.  நான் வாரம் ஒருமுறைதான் – அதுவும் வைன் தான் குடித்துக் கொண்டிருந்தேன்.  டாக்டரிடம் கேட்டேன்.  வைன் என்றால் தினமும் குடிக்கலாம் என்றார்.  எனக்கு ஆலோசனை சொன்ன திலகத்தின் நிலை என்ன தெரியுமா?  ஓட்டலில் எதுவும் சாப்பிட முடியாது.  சாப்பிட்டால் புடுங்கிக் கொள்ளும். 

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai