ஔரங்ஸேப் 100 விழா (2)

விழா பற்றி எழுத இன்னும் நிறைய உள்ளது. நாளை எழுதுவேன். இன்று ஔரங்ஸேப் அடுத்த அத்தியாயம் அனுப்ப வேண்டும். 19ஆம் தேதி விழா முடிந்து இரவு ஒன்பது மணி அளவில் டிஜே பாடல்களைப் போட ஆரம்பித்தார். கோவாவில் புத்தாண்டு சமயத்தில் நடக்கும் இசைக் கச்சேரிகளைப் போன்ற ஒலி, ஒளி அமைப்பு. வனம் வேறு. பத்து மணியிலிருந்து இரண்டு மணி வரை ஆடினேன் என்று நினைக்கிறேன். அதையெல்லாம் தினேஷ் குமாரை என் ஐஃபோன் மூலம் பதிவு செய்யச் சொன்னேன். … Read more

ஔரங்ஸேப் 100 விழா (1)

ஔரங்ஸேப் – 100 விழா சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.  விழாவின் விசேஷம் என்று ஏராளமாக உண்டு.  வெள்ளிக்கிழமை காலை (18 மார்ச்) என் அறைக்கு வந்தார் நண்பரும் வாசகருமான சிவபால கணேசன்.  பொள்ளாச்சியைச் சேர்ந்தவர்.  நகை வைக்கும் சிறிய அலங்காரப் பெட்டி ஒன்றைக் கொடுத்து ஒரு சிறிய பரிசு என்றார்.  அதை வாங்கி ஒரு பக்கம் வைத்து விட்டு அவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.  பெட்டியைத் திறந்து பாருங்கள் என்றார்.  திறந்து பார்த்தால் ஒரு தங்க செய்னும் … Read more

முதல் நூறு: 15: எழுத்தாளர்களுக்குள் மண உறவு

கேள்வி:  ஒரு தொழிலதிபர் தன் தொழில் சார்ந்த ஒருவர் குடும்பத்துடனும், ஒரு திரைப்படக் கலைஞர் திரைப்படத்துறை சார்ந்த ஒருவருடனும் திருமண சம்பந்தம் செய்து கொள்கிறார்கள். பெரும்பாலான துறைகளில் அப்படி பார்க்க முடிகிறது. ஆனால் எழுத்தாளர்கள் மட்டும் ஏன் தம் எழுத்துத் தொழில் சார்ந்த எழுத்தாளருடனோ, அவரது குடும்பத்தாருடனோ திருமண சம்பந்தம் செய்து கொள்வதில்லை? உலகில் அப்படி எங்கேனும், யாரேனும் செய்து கொண்டிருகிறார்களா?  (வாசகியாக வந்து பழகி மனைவியாய் மாறியதை எல்லாம் கணக்கில் சேர்க்கக் கூடாது.) ஆர்.எஸ்.பிரபு, சென்னை. … Read more

ஔரங்ஸேப் 100 விழா

ஔரங்ஸேப் 100ஆவது அத்தியாயம் முடிந்ததை ஒட்டி ஆரோவில் கிராமத்தில் 19-ஆம் தேதி நடக்க இருக்கும் விழாவுக்கு வர விரும்புவோர் வினித்தைத் தொடர்பு கொள்ளலாம்.  வினித் எண்: 84384 81241 இந்த விழாவுக்கு ஆகும் செலவில் சிறு பகுதியைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் ரேஸர் பே மூலம் அல்லது நான் ஏற்கனவே கொடுத்துள்ள வழிகள் மூலம் அனுப்பலாம்.  ரேஸர் பே மூலம் அனுப்புவது மிகவும் சுலபம்.  ஒரு பட்டனை அமுக்கினால் நாம் அனுப்ப விரும்பும் தொகை உரிய … Read more

சாருவின் புத்தம் புதிய கவிதை
கனாவிலொரு பூனை
ஆத்மார்த்தியின் குரலில்…

கனாவிலொரு பூனை ஸ்னேகிதீ… உன்னைப் போலத்தான் நானும் மனிதர்களைக் காட்டிலும் பூனைகளையே அதிகம் நேசிக்கிறேன் ஆனால் பூனைகள் வேற்றுக்கிரக ஜீவிகளைப் போல் சிந்திக்கின்றன நடந்து கொள்கின்றன திடீர் திடீரென காணாமல் போய் திடீர் திடீரெனத் தோன்றும் புதிர்த்தன்மை கொண்டவையாக இருக்கின்றன பூனைகளின் மனதில் என்ன இருக்கிறதென்று பூனைகளின் கடவுளுக்கே தெரியாது பூனைகளுக்கே தெரியுமா என்பதும் ஐயம்தான் சமயங்களில் மனம் மிக நொந்து பூனைகளே வேண்டாமென்று வாழ்ந்திருக்கிறேன் சிருஷ்டியின் வினோதம் பூனையின்றி வாழ்க்கையில்லை என்கிறது போ போ மீண்டும் … Read more