You are the reason…

நான் எழுதிய முதல் கதையான முள் ஒரு காதல் கதை. மோகமுள் தமிழ் இலக்கியத்தின் உன்னதமான காதல் கதை. உலக மொழிகளில் சொன்னால் அன்னா கரினினா, மதாம் பொவாரி ஆகிய இரண்டும். நவீன தமிழ் இலக்கியத்தில் எக்ஸைல். அந்த நாவல் அதில் உள்ள காதலுக்காகக் கொண்டாடப்படாவிட்டாலும் வேறு பல காரணங்களுக்காகக் கொண்டாடப்பட்டது. ஆனாலும் நான் அதை அன்னா கரினினா, மதாம் பொவாரி, மோகமுள் ஆகிய மூன்றையும் மனதில் கொண்டே அவற்றின் நவீன வடிவமாகவே எழுதினேன். ஆனால் காதலே … Read more

பெங்களூர் சந்திப்பு (தொடர்ச்சி)

நாளை (9 மே) காலை பதினோரு மணிக்கு பெங்களூர் கிளம்புகிறேன். நாளை இரவும் பத்தாம் தேதி இரவும் என்னை சந்திக்கலாம். பதினொன்றாம் தேதி இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹ்யூமன் செட்டில்மெண்ட்ஸின் இரவு விருந்தில் கலந்து கொள்வதால் இரவு பத்து மணிக்கு மேல்தான் என் நேரம் என் கையில் இருக்கும். ஆனால் பன்னிரண்டாம் தேதி மதியம் உரையாடல் இருப்பதால் பதினோரு இரவு நீண்ட நேரம் கண் விழித்திருக்க இயலாது. இதற்கிடையில் மருத்துவர் பாஸ்கரனின் பிறந்த நாளும் பதினொன்றாம் தேதிதான் … Read more

பெங்களூர் சந்திப்பு

பெங்களூர் Indian Institute of Human Settlements வளாகத்தில் வரும் பன்னிரண்டாம் தேதி மதியம் 12.15 மணிக்கு கார்ஸியா மார்க்கேஸ் பற்றிய உரையாடலில் கலந்து கொள்கிறேன். வர நினைக்கும் நண்பர்கள் முன்பதிவு செய்து கொண்டு வரலாம். அழைப்பிதழை முந்தின பதிவுகளில் கொடுத்திருக்கிறேன். மே 11ஆம் தேதி கீழ்க்கண்ட முகவரியில் மருத்துவர் பாஸ்கரன் அவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள விரும்பும் அன்பர்களைப் பார்க்க இருக்கிறார். என்னுடைய பெங்களூர் சந்திப்புக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்த மருத்துவரை நான் தான் ஒருநாள் முன்கூட்டியே … Read more

பசி

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது எனக்குப் பிடிக்காது. கொஞ்சமும் பிடிக்காது. ஆனால் பிராணிகளைப் பிடிக்கும். வீட்டில் வளர்ப்பதுதான் பிடிக்காது. அதற்காகத் தெருவில் விட வேண்டும் என்று சொல்லவில்லை. எந்த தேசத்தில் பிராணிகள் தெருவில் திரிகின்றனவோ அந்த நாடு இந்த உலக வரைபடத்திலேயே இருப்பதற்கு லாயக்கில்லாதது என்று நினைக்கிறேன். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. துருக்கியின் தெருக்களில் எங்கு பார்த்தாலும் பூனைகள் திரியும். ஆனால் அவை பசித்திருப்பதில்லை. துருக்கி சமூகமே அந்தப் பூனைகளை வளர்க்கிறது. அப்படியிருந்தால் பிரச்சினை இல்லை. … Read more

மெதூஸாவின் மதுக்கோப்பை

அன்புள்ள சாரு,நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மறுவாசிப்புக்கு “மெதூஸாவின் மதுக்கோப்பை”யை எடுத்தேன். நான் அடுத்த வாரம் ப்ரான்ஸ்  செல்லவிருப்பதாலோ என்னவோ ! ஆனால் தற்செயல் தான். இந்தப் புத்தகத்தைப் பொறுத்த மட்டில் இலக்கியம் பேச வேண்டுமானால் நிறைய இருக்கிறது, அதற்கு இடமும் நேரமும் இல்லை. மேலும் முன்னுரையில் நீங்கள் தெளிவாகக் கூறிவிட்டீர்கள் “நான் படித்த ஃப்ரெஞ்ச் இலக்கியம் ஃப்ரெஞ்ச் தத்துவம் பார்த்த ஃப்ரெஞ்ச் சினிமா என்ற எல்லா  அனுபவத்தையும் ஒன்று திரட்டி ஒரு புத்தகமாகக் கொண்டு வரலாம் என்று … Read more