எதை எழுத வேண்டும்?

இஸ்லாமிய வெறுப்பைத் தவிர அநேகமாக மற்ற எல்லா விஷயங்களிலும் மிஷல் வெல்பெக்குக்கும் (Michel Houllebecq) எனக்கும் ஒத்த தன்மைகளைப் பார்க்கலாம்.  அதில் ஒன்று செக்ஸ்.  இன்னமும் அவரை செக்ஸ் எழுத்தாளர் என்றே பெரும்பாலோர் அழைக்கின்றனர்.  அவரும் அதை ஒத்துக் கொள்ளவே செய்கிறார்.  ஐரோப்பாவில் ஒரு எழுத்தாளர் செக்ஸை எழுதுவதைத் தவிர்க்கவே முடியாது என்கிறார்.  இங்கே (ஐரோப்பாவில்) சிலருக்கு செக்ஸ் தினமும் கிடைக்கிறது.  ஆனால் பலருக்கோ அவர்கள் வாழ்நாளிலேயே ஐந்தாறு தடவைகள்தான் கிடைக்கிறது.  சிலருக்கு வாழ்வில் ஒருமுறை கூட … Read more

கண்ணதாசன் விருது

கோவை கண்ணதாசன் கழகம் சார்பில் கவியரசர் பிறந்தநாளையொட்டி கலைத்துறையிலும் இலக்கியத் துறையிலும் முத்திரை பதிப்போருக்கு கண்ணதாசன் விருதுகள் சமர்ப்பிக்கப்பட்டு  வருகின்றன.  விருதுகள் இரண்டு பெருமக்களுக்கு தலா ரூ.1 இலட்சம் ரொக்கத் தொகை மற்றும் பட்டயம் கொண்டதாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ்விருது கண்ணதாசன் கழகத்தின் நிறுவனர் திரு.கிருஷ்ணகுமார் அவர்களால்நிறுவப்பட்டுள்ளது. 2019 ஆம்  ஆண்டுக்கான விருது எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா, பின்னணிப் பாடகர் திரு. ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது 16.09.2019 அன்று கோவையில் இவ்விழா நிகழ்கிறது.  இதற்கு முன் கண்ணதாசன் விருதுகள் பெற்றோர் விபரம்: எழுத்தாளர்கள் திரு. அசோகமித்திரன், திரு.வண்ணதாசன், திரு.ஜெயமோகன், கவிஞர் சிற்பி, … Read more

தேவதைகளும் சாத்தான்களும்…

இலக்கியம் ஒன்றே மனித இனத்தை இன்றைய அழிவிலிருந்து மீட்டெடுக்கக் கூடியது.  நீங்கள் ஒரு இந்துவோ, முஸ்லீமோ, கிறித்தவரோ, பௌத்தரோ யாராக இருந்தாலும் உங்கள் கடவுள் உங்களை மீட்கப் போவதில்லை.  மனிதன் விதைத்ததை மனிதன் மட்டுமே அறுவடை செய்ய முடியும்.  முகமது ஷுக்ரி என்று ஒரு மொராக்கோ தேசத்து எழுத்தாளர் இருந்தார்.  அவர் எழுதிய அல்-கூப்ஸ் அல்-ஹஃபி என்று ஒரு அரபி நாவல் உள்ளது.  அரபி மொழி தெரிந்தவர்கள் அதை அரபியிலேயே படிக்கலாம்.  ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அதன் பெயர் … Read more

சக்ரவாகம், சூரியகாந்தி

காந்தியை மகாத்மாவாக மாற்றிய புத்தகம் டால்ஸ்டாய் எழுதிய The Kingdom of God is Within You.  அதேபோல் இப்போது இருக்கும் நான் இப்போது இருக்கும்படி மாற்றிய எழுத்தாளர் ந. சிதம்பர சுப்ரமணியன்.  அவருடைய நூல்களைப் படிக்கும் போது கடவுளையே நேரில் தரிசிப்பது போல் இருந்தது.  ஏதோ வாய் வார்த்தையாகச் சொல்லவில்லை.  அப்படியே தான் இருந்தது.  படிக்கப் படிக்க அது ஆன்மாவையே ஏதோ செய்தது என்றுதான் தோன்றியது.  இதய நாதம் என்று ஒரு நாவல்.  அதைப் படிக்காதவன் … Read more

சில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…

வாழ்நாளில் ஒருநாள் கூட எழுதாமல் படிக்காமல் இருந்ததில்லை.  ஆனால் முந்தாநாளிலிருந்து கட்டாய ஓய்வு கிடைத்திருக்கிறது.  உணவுப் பழக்கத்தில் நான் சீனர்களைப் போல.  சூடாக சாப்பிடும் பதார்த்தங்களை அதி சூடாக சாப்பிடுவேன்.  தனுப்பான பண்டங்களை அதி தனுப்பாக.  கோக்கைக் கூட சீனர்கள் ஐஸ் கட்டிகளைப் போட்டுத்தான் குடிப்பார்கள்.  அதேபோல் அவர்கள் சாப்பிடும் அளவு சூடாக இந்தியர்களால் சாப்பிட முடியாது.  மற்றவர்கள் காபி குடிப்பதைப் பார்க்கும் போது எனக்கு ஐஸ் காப்பி குடிக்கிறார்களோ என்று தோன்றும்.  காப்பியை யாராவது ஆற்றுவார்களா?  … Read more