க.நா.சு.

க.நா.சு. என்ற தலைப்பில் தஞ்சை ப்ரகாஷ் எழுதி சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள நூல் தங்களிடம் இருந்தால் ஓரிரு தினங்கள் எனக்குத் தந்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.  சாகித்ய அகாதமியிலும் இங்கே உள்ள நூலகங்களிலும் கிடைக்கவில்லை. எழுதவும்: charu.nivedita.india@gmail.com

பழுப்பு நிறப் பக்கங்கள் : தஞ்சை ப்ரகாஷ் (5)

தஞ்சை ப்ரகாஷின் 35 சிறுகதைகளை பின்வரும் இணைப்பின் மூலம் வாசிக்கலாம்.  தினமணியில் கொடுக்க மறந்து போனேன். https://archive.org/details/openreadingroom?sort=creatorSorter&and[]=subject%3A%22%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%22 தஞ்சை ப்ரகாஷ் பற்றிய என் கட்டுரையின் கடைசிப் பகுதி: http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/09/06/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D—%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-5/article3010509.ece

கல்புர்கி கொலை (2)

இது குறித்து எழுதிய குறிப்பில் வெல்பெக்கை ஃப்ரான்ஸிலிருந்து துரத்தி விட்டார்கள் என்று எழுதியிருந்தேன்.  இப்போது அவர் திரும்பவும் ஃப்ரான்ஸ் வந்து விட்டார் என்று இப்போதைய சர்ச்சையிலிருந்து தெரிய வந்தது.  இதைப் படிக்கவும்… http://www.english.rfi.fr/france/20150105-french-author-houellebecq-sparks-controversy

கல்புர்கி கொலை

எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவர்.  ஒரு புத்தகத் திருவிழாவில் ஒரு பிரபலமான அகராதியை வாங்கிக் கொண்டிருந்தார்.  இது உங்களிடம் இல்லையா என்று கேட்டேன்.  சிரித்து விட்டு இருபதாவது தடவையாக இதை வாங்குகிறேன் என்றார்.  எழுத்தாளர்களின் விபரீத குணாதிசயங்களில் இது ஒன்றோ என எனக்கு சம்சயம்.  அப்படி இல்லை.  அவருக்குக் கடும் கோபம் வரும் போதெல்லாம் அகராதியை எடுத்துக் கிழித்துப் போட்டு விடுவாராம்.  ஏன் அப்படிக் கோபம்?  ”என் உயிருக்கு உயிரான, என் உயிரை விடவும் மேலான என் … Read more