ராயப்பேட்டை புத்தகக் கண்காட்சி…

ராயப்பேட்டை ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில் என்னுடைய புத்தகங்கள் விருட்சம் அரங்கிலும், பனுவல் அரங்கிலும், டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கிலும் கிடைக்கும். நாளையிலிருந்து ஹிக்கின்பாதம்ஸ் அரங்கிலும் கிடைக்கும்.

பூனைக்குட்டிகள்… (2)

டியர் சாரு… பூனைக்குட்டிக்கு உணவு போடக்கூடாது பற்றிய உங்களது கட்டுரையை படித்தேன் மிகவும் வருத்தமாக இருந்தது ஆனால் சாரு சில வருடங்களாக நீங்கள் சொல்லி வருகிறீர் உங்களது ஜாதகத்தையோ கைரேகையோ பார்த்த 2,3ஜோதிடர்கள் நீங்கள் நிச்சயம் —–வயது வரை இருப்பீர்கள் என சொன்னதாகவும் அதை நீங்கள் நம்புவதாகவும் எழுதி இருந்தீர்கள். நீங்கள் ஜோசியர் சொன்னதை நம்பியதும் அவர்கள் பூனை குறுக்கே செல்வதை  அபசகுனம் என நம்புவதும் என்னைப் பொறுத்தவரை ஒன்றுக்கொன்று வேறு வேறு அல்ல. உங்களைத் தொடர்ந்து … Read more

பூனைக் குட்டிகள்

இதைத் தட்டச்சு செய்யும் போது என் கைகள் கோபத்தால் நடுங்குகின்றன. இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்று சொன்ன கவியின் கோபத்தில் எழுதுகிறேன். நாங்கள் ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கிறோம். இந்த அபார்ட்மெண்ட்டில் பெரிய விஐபிகள் தான் குடியிருக்கிறார்கள். ஒரே ஒரு வட இந்தியக் குடும்பமும் உண்டு. சற்று நேரத்துக்கு முன்பு, அவந்திகா நான் இன்னும் சாப்பிடவில்லை; பசிக்கிறது; கீழே உள்ள பூனைக் குட்டிகள் பசியில் கத்துகின்றன; போய் உணவு கொடுத்து விட்டு வா என்றாள். நிறைய பூனைக்குட்டிகள் இருந்தன. … Read more

கர்னாடக இசை பற்றிய சர்ச்சை…

பொதுவாக இந்தியாவில் சகிப்புத்தன்மை என்பது அறவே இல்லாமல் போய் விட்டது. இந்து, முஸ்லீம், கிறித்தவர் ஆகிய மூன்று சாராரிடமுமே பொதுவாக சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. நூற்றுக்கு இருபது சதவிகிதம் பேர் இந்த மதவெறியிலிருந்து தள்ளி இருக்கிறார்கள். இந்த சதவிகிதம் கூடலாம். குறையலாம். ஆனால் சகிப்புத்தன்மையும் சகோதரத்துவமும் போய் விட்டது. மாற்று மதத்தினரை வெறி கொண்டு அடிக்கின்றனர். ஒரு கிறித்தவத் துறவி, சமீபத்தில் இந்து மதத்திலிருந்து கிறித்தவத்துக்கு மாறிய குடும்பத்தை, ‘இந்து மதத்திலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள்’ என்று சான்றிதழ் கொடுக்கிறார். … Read more

இலக்கியமும் சினிமாவும்

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களின் முதல் படங்கள் மகத்தான வெற்றியைப் பெற்று, அதற்கடுத்த படங்கள் தோல்வி அடைவதன் காரணம் பற்றி பலமுறை யோசித்திருக்கிறேன்.  முதல் படங்களில், அந்த இயக்குனர்கள் கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி அனுபவரீதியாக எடுப்பதால் அந்தக் கதையும் சொல்லும் விதமும் நிஜமாக இருக்கிறது.  ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கைதானே இருக்கிறது?  அதை முதல் படத்தில் சொல்லி விட்ட பிறகு மீண்டும் சொல்ல எதுவுமில்லாமல் வெளிநாட்டுப் படங்களைத் தழுவி எடுக்க முயற்சித்துத் தோல்வி அடைகிறார்கள்.  அப்படி … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 3 முன்வெளியீட்டுத் திட்டம்

பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 3 முன்வெளியீட்டுத் திட்டத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டும் hard bound அட்டையில் புத்தகம் கிடைக்கும். Hard bound அட்டை போட்ட புத்தகத்தின் விலை 550 ரூ. கூட போகலாம். அது பதிப்பகத்தின் கையில் இல்லை; அச்சகத்தின் கையில் உள்ளது. சாதா அட்டை போட்ட நூல் 350 ரூ. முன்பதிவு செய்ய 250 ரூ அனுப்ப வேண்டும். ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வரை தான் முன்பதிவு செய்ய முடியும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் … Read more