சார்வாகன் இரங்கல் கூட்டத்தில் பேசியது

நேற்று நடந்த சார்வாகன் இரங்கல் கூட்டத்தில் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு அழுது விடாமல் இருக்க வேண்டுமே என்று வேண்டிக் கொண்டே போனேன்.  நல்லவேளை.  அந்த அசம்பாவிதம் நடக்கவில்லை. கூட்டத்தில் பேசும் போது பாரவி சொன்னார், ஒரு மாதம் பழகியதற்கே சாரு இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறாரே, நான் நாற்பது ஆண்டுகள் சார்வாகனோடு பழகினேன், என் நிலை எப்படி இருக்கும் என்று.  அவரது இழப்பைப் புரிந்து கொள்கிறேன்.  ஆனால் நான் அழுதது, அழுவது எல்லாமே எனக்காகத்தான்.  இப்படி ஒரு புதையல் என் … Read more

“எதற்காக எழுத வேண்டும்?  யார் படிக்கிறார்கள்?” சார்வாகன் (1929-2015)

ஜனவரி 3, ஞாயிறு மாலை 5:30 மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸில், சார்வாகன் இரங்கல் கூட்டம் நடைபெற இருக்கிறது. அடியேன் உரையாற்றுகிறேன். வாசகர் வட்ட நண்பர்கள் அவசியம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என வேண்டுகிறேன். முகவரி: Discovery Book Palace, No.6, Mahavir Complex, Near Pondicherry Guest House, Munusamy Salai, K.K.Nagar, Chennai – 600078 *** சென்ற ஆண்டின் துவக்கத்தில் புதிய நாவலை எழுதத் துவங்கும் முன்பு சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகள் அத்தனை பேரையும் ஒருசேரப் படித்து விட வேண்டும் என்று … Read more

தேவகோட்டை உரை

எத்தனை அன்புடனும் தொந்தரவு தராமலும் பழகினாலும் எனக்கும் நண்பர்களுக்கும் கொஞ்ச காலத்தில் விரிசல் ஏற்பட்டு விடுகிறது.  நண்பர்கள் பிரிந்து விடுகின்றனர்.  புதிய நண்பர்கள் ஏற்படுகின்றனர்.  நீண்ட கால நண்பர்கள் என்றே யாரையும் சொல்ல முடியவில்லை.  ஏன் என்று நண்பர் மனோவைக் கேட்ட போது நீங்கள் comfort zone எதையும் தருவதில்லை என்றார்.  அப்போதுதான் எனக்கும் புரிந்தது.  நண்பர்களைப் புண்படுத்த மாட்டேன்.  எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய மாட்டேன்.  சமமாக நடத்துவேன்.  ஆனாலும் என்னோடு இருப்பது வசதியாக இருக்காது. … Read more