என் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம்

நிகழ மறுத்த அற்புதம் என்று நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.  கமல்ஹாஸன் பற்றிய கட்டுரை.  அந்தக் கட்டுரை வெளிவந்தவுடன் அந்த்த் தலைப்பு தர்மு சிவராமுவினுடையது என்று தெரிய வந்த்து.  அதனால் நான் ஒன்றும் கவலைப்படவில்லை.  தர்மு சிவராமு ஒரு லெஜண்ட்.  லெஜண்டுகளின் வார்த்தைகளை நாம் பயன்படுத்திக் கொள்ள தடையேதும் இல்லை. அப்படியேதான் மாயமான் வேட்டை என்ற தலைப்பையும் பயன்படுத்திக் கொண்டேன்.  அத்தலைப்பு இந்திரா பார்த்தசாரதியின் குறுநாவல்.  என் வாழ்வில் சீலேயின் முக்கியத்துவம் பற்றி ஆயிரம் பக்கம் எழுதியாயிற்று.  … Read more

இடமும் இருப்பும்

சிறப்புப் பதிப்புக்குப் பணம் அனுப்ப இன்னும் ஒரு வாரம் இருக்கிறது.  அதற்குப் பின் புத்தகம் அச்சுக்குப் போய் விடும்.  அம்பதாயிரம், லட்சம், மூணு லட்சம் எல்லாம் முடியாவிட்டாலும் பத்தாயிரம் ரூபாய் அனுப்பி சிறப்புப் பதிப்புக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள்.  ராஸ லீலா சிறப்புப் பதிப்புக்கு எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் பணம் அனுப்பியிருந்தார்கள்.  ஆனால் நான்தான் ஔரங்ஸேப்… நாவலுக்கு இதுவரை பதினேழு பேர்தான் பணம் அனுப்பியிருக்கிறார்கள்.  அதிலும் பதினைந்து பேர் மாதாமாதம் எனக்குப் பணமாகவோ பூனை உணவாகவோ மற்ற விதமாகவோ … Read more

மீண்டும் தனிமையில்…

வரும் புதன்கிழமை அன்று அவந்திகா திரும்பவும் மும்பை செல்கிறாள்.  மீண்டும் வீட்டில் தனியாக வாழும் அனுபவம் கிடைக்க இருக்கிறது.  இந்த முறை மூன்று வாரம் மட்டுமே.  வீட்டு வேலைக்குப் பணிப்பெண் இருப்பதால் பிரச்சினை இல்லை.  ஆனால் சமையல் செய்யும் பெண்ணை அவந்திகா மும்பையிலிருந்து திரும்பியதுமே நிறுத்தி விட்டாள்.  நன்றாக சமைக்கத் தெரிந்த பெண்தான் என்றாலும், கை நீளம் என்று தெரிந்தது.   குசினியில் பல பொருட்களைக் காணோம்.  ஆக, மூன்று வார காலத்துக்கு நான் வெளியில்தான் சாப்பிட வேண்டும்.  … Read more

The Outsider (10)

ஆவணப்படத்துக்காக சில பிரபலமான ஒளிப்பதிவாளர்களை அணுகினேன்.  எல்லோரும் அவர்கள் முன்பு ஒப்புக் கொண்ட வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள்.  சரி, புதியவர்களைப் பிடிக்கலாம் என்று முனைந்தேன்.  மிகவும் கசப்பான அனுபவங்களே எஞ்சின.  யாருமே தம் வாழ்வில் ஒரு புத்தகம் கூட படித்திருக்கவில்லை.  படித்த ஒருவர் எங்களோடு பத்து நாட்கள் பணி புரிந்தார்.  பிறகு அவருக்குப் பெரிய வேலை கிடைத்துப் போய் விட்டார்.  லெனினிடம் சொன்னேன்.  அவர் ஒருவரை அறிமுகப்படுத்தினார்.  ஆனால் அந்த ஒளிப்பதிவாளரோ ஒரு நாளைக்கு 25000 ரூ. … Read more

ஒரு சிறிய திருத்தம்…

சிறப்புப் பதிப்புக்கான திட்டத்தில் ஒரு சிறிய திருத்தம். ஐந்து லட்சம் பணம் கொடுத்து இன்னார் வழங்கும் நான்தான் ஔரங்ஸேப்… என்ற திட்டம் முடிந்து விட்டது. ஏனென்றால், ஒருவர்தானே வழங்க முடியும்? மேலும், அந்த ஐந்து லட்சத்தைக் கொடுத்த நண்பருக்கு இந்தத் திட்டம் பற்றிய விவரமெல்லாம் முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. அவருக்குக் கொடுக்கும் பிரதியில் இன்னார் வழங்கும் என்று அச்சிட்டிருக்கும் என்று நினைத்திருக்கிறார். இப்போதும் இனி வரும் காலத்திலும் வெளிவரும் எல்லா பிரதிகளிலும் இன்னார் வழங்கும் நான்தான் ஔரங்ஸேப்… என்றுதான் … Read more

இது போதும்…

கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து என் இதயப் பிரச்சினைக்காக அலோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.  மாதம் நாலாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் வரை ஆகும்.  இதை ஒரு தோழியும் அவருடைய சகோதரரும்தான் அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.  சமீபத்தில்தான் அந்தத் தோழி என்ன பணியில் இருக்கிறார் என்று தெரிந்தது.  மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பணி.  இது போன்ற சேவை அடிப்படையிலான வேலைகளுக்கு ஊதியம் கம்மிதான்.  என்ன, இருபதாயிரம் இருக்குமா என்றேன்.  ஆமாம் என்றார்.  கூடவே மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு … Read more