Charu Nivedita
ஒண்ணு, ரெண்டு, மூணு…
நேற்று என்னுடைய கவிதைத் தொகுதி ஸ்மாஷன் தாரா நூலின் முன்வெளியீட்டுத் திட்டம் குறித்து ஒரு விளம்பரத்தை வெளியிட்டேன். அது குறித்து சில விஷயங்களும் எழுதினேன். முன்பெல்லாம் 1200 பிரதிகள் போடுவார்கள். அதில் 200 மதிப்புரைக்கான இலவசப் பிரதிகள். இப்போது போடுவதே 200 தான். அதிலும் எனக்கே இந்த நிலை. ஏகாரத்து மன்னித்து விடுங்கள். எல்லோருக்கும் இதே நிலைதான். ஜனநாயகம். இன்று காலையில் ஸீரோ டிகிரி அலுவலகத்துக்கு ஃபோன் செய்து வித்யாவிடம் முன்பதிவுத் திட்டத்துக்கு யாரும் பணம் அனுப்பினார்களா, … Read more
எழுத்தாளனை சந்தித்தல்
ஒரு நீண்ட நாள் வாசகர்/நண்பர் ஜூனில் சென்னை வருவதாகவும், சந்திக்க விருப்பம் என்றும் வாட்ஸப்பில் தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் வசிக்கிறார். இதை வாசித்ததிலிருந்து இது பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறேன். அந்த யோசனைகளையெல்லாம் தொகுத்தால் பல பக்கங்கள் போகும். கொஞ்சம் சுருக்கமாக எழுதி விடலாம். எழுத்தாளர்களை சந்திப்பது பற்றி சுஜாதா சொன்னது மிகவும் தவறானது. அவர் அப்படி நினைத்திருந்தால் அவர் ஏன் சுந்தர ராமசாமியை சந்திக்க விரும்பி சு.ரா.விடம் விருப்பம் தெரிவித்திருக்கிறார்? சு.ரா. கடைசி வரை சுஜாதாவை சந்திப்பதைத் தவிர்த்து … Read more
அடியேனின் உரை
எங்கோ தெரியவில்லை அந்த வெள்ளை நிறப் பறவை என்ற கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழாவில் அடியேனின் பேச்சு. பதிவு செய்து வெளியிட்ட ஷ்ருதி டிவி கபிலனுக்கும் அவர் குழுவுக்கும் நன்றி.
அப்போதும் இப்போதும்
நட்சத்திர எழுத்தாளர் என்கிறார்கள். கூட்டத்தில் என்னையே இறுதியாய்ப் பேச வைக்கிறார்கள். இடையிலே பேசினால் கூட்டம் போய் விடுமாம். ஆரோவில்லில் கொண்டாட்டம் என்றால் தனிப்பட்ட அழைப்பு இல்லாமலேயே 80 பேர் வருகிறார்கள். ஐஃபோன் இல்லை என்று எழுதினால் மறுநாளே ஒரு புதிய ஐஃபோனை வீட்டுக்கு வந்து கொடுக்கிறார்கள். (சிங்கப்பூர் சிவக்குமார்). ஔரங்ஸேப் நூறு அத்தியாயம் முடித்ததும் நூறு ஆயிரம் கொடுக்கிறார்கள் (பொள்ளாச்சி சிவபால கணேசன்). நீங்கள் என் கடவுள். நீங்கள் என் ஆசான். நீங்கள் என் ஞானத்தந்தை. தினந்தோறும் … Read more
நிழலைத் தொலைத்தவனின் பிராது: சாரு நிவேதிதா & ஆத்மார்த்தி
1நான் சொல்லப் போகும் பிராதினைநீங்கள் நம்ப மாட்டீர்கள் என்றெனக்குத் தெரியும்.உங்களுக்கு வேறு வழியில்லை என்பதனால்நீவிர் நம்பித்தான் ஆக வேண்டும்அறிக; எனக்குப் பொய் சொல்லத் தெரியாதுஅதைவிட எது பொய்எது உண்மையெனப் பிரித்தறிகின்ற சூட்சுமமும்தெரியாதுஆகவே இதை நீங்கள் நம்பியாக வேண்டும்ஏனெனில்எனக்கு உங்கள் உதவி தேவைநமக்குள் இருபுறப் புரிதல் இல்லையேல்நீங்கள் எனக்கு உதவ இயலாதுகவனமாகக் கேளுங்கள்நம்பிக்கையுடன் கேளுங்கள்அப்போதுதான் எனக்கு உதவுவது பற்றி நீங்கள்தெளிவு கொள்ள முடியும். 2சமீப காலமாக என் நிழலைக் காணோம்எப்போது தொலைத்தேன்எவ்விடத்தில் தொலைத்தேன்என்றெதுவும் தெரியவில்லைசன்னலினூடே வந்து விழுகின்ற கிரணங்களிலொன்றுஎப்பொதும் … Read more