புத்தக விழா

ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மாலை நான்கு மணிக்கு ஸீரோ டிகிரி அரங்கில் அமர்ந்திருப்பேன். வந்து ஒரே ஆளாக நின்று கொண்டு பல மணி நேரம் மொக்கை போடும் கொடுஞ்செயலை மட்டும் செய்யாதீர்கள். இப்படி எழுதினால் என்ன ஆகிறது என்றால் தூரத்தில் நின்றபடியே என்னைக் கை காண்பித்து ஏதோ முணகியவாறு சென்று விடுகிறார்கள். அவர்கள் இளைஞர்கள். இந்தத் தளத்தை வாசிப்பவர்கள். ஆனால் மொக்கை போடும் ஜென்மங்கள் அத்தனையும் அறுபதுக்கு மேற்பட்டதுகள், இந்தத் தளத்தை வாசிக்காததுகள். என்ன … Read more

சொற்கடிகை – 9

நேற்று சீனி ஒரு விஷயம் சொன்னார்.  ஸ்விக்கியில் இன்ஸ்டாமார்ட் என்று ஒரு பிரிவு இருக்கிறது.  அதில் போய் மேரினேட்டட் என்ற பகுதிக்குள் போய் மாமிசம் என்ற உட்பிரிவுக்குள் சென்றால் நீங்கள் விரும்பிய அசைவ உணவு மேரினேட் பண்ணியதையே கொண்டு வந்து தருகிறார்கள்.  நேற்று நான் அப்படி ஒரு ’தாய்’ ஸ்டைலில் செய்த ப்ரான் வரவழைத்து அவர்கள் சொன்னபடியே வாணலியில் வைத்து கொதிக்க வைத்து சாப்பிட்டேன்.  அற்புதமாக இருந்தது.  நான் தாய் உணவுக்கு அடிமை.  ஆஹா, கை மேல் … Read more

நான்தான் ஔரங்ஸேப்…

ஔரங்ஸேப் – இதுதான் சரியான உச்சரிப்பு. இது பற்றி இன்று ஹரியிடமிருந்து வந்த கடிதம். Dear Charu, 35ஆவது அத்தியாயத்தைத் தாண்டி பறந்து கொண்டிருக்கிறேன். பிரமாதம்! இந்த பிரமாதத்தை போன emailலிலே சொல்ல நினைத்தேன். ஆனால் உங்கள் reaction எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. இளையராஜாவிடம் போய் யாராவது  உங்கள் இசை ப்ரமாதம் என்றால் அவர் என்ன சொல்லுவார்? அவர் இசை ப்ரமாதம் என்று சொல்ல வேண்டுமா? ஆனால் இப்போது எனக்கு சொல்லியே ஆக வேண்டும்.சரித்திரம் … Read more

நாளைய புத்தக வெளியீட்டு விழா

நாளை மாலை (13.2.2022) ஐந்தரை மணிக்கு வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலையில் உள்ள ஃப்ரெண்ட்ஸ் பார்க்கின் அம்மாச்சி பார்ட்டி ஹாலில் நடக்கவிருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேச இருக்கிறேன். அருண்மொழி நங்கையின் பனி உருகுவதில்லை. உடன் பேசுபவர்கள் யுவன் சந்திரசேகர், எம். கோபாலகிருஷ்ணன், ஜெயமோகன். ஏற்புரை அருண்மொழி நங்கை. நன்றியுரை காயத்ரி. ஜெயமோகனும் நானும் இதுவரை ஒரே ஒரு முறைதான் மேடையில் சந்தித்திருக்கிறோம். அராத்துவின் புத்தக வெளியீட்டில். அதற்கு அடுத்து இதுதான். என்ன … Read more

அருண்மொழி நங்கையின் நூல் வெளியீட்டு விழா

ஃப்ரெண்ட்ஸ் பார்க் – அம்மாச்சி பார்ட்டி ஹால் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலை 13.2.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி